Home
News

10 நாளுக்கு இதுதான்.. 10 நிமிடத்தில் மளிகை பொருட்கள்.. எலக்ட்ரானிக்ஸ், கிட்சன் பொருட்கள்.. என்ன இல்ல?

ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் முதல்முறையாக இன்ஸ்டாமார்ட் (Instamart) மூலம் குயிக் இந்தியா மூவ்மெண்ட் விற்பனையை (Quick India Movement Sale) தொடங்க இருக்கிறது. வெறும் 10 நிமிடங்களில் உங்களது வீடு தேடி மளிகை பொருட்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் மற்றும் மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட கிச்சன் பொருட்கள் வரையில் கொடுக்கிறது. இதுபோக பழங்கள், காய்கறிகள், ஹெல்த் மற்றும் ஸ்கின் கேர் பொருட்களை கொடுக்கிறது.

இப்படி சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் கொடுக்கிறது. இது உங்களுக்கு பகுதிக்கு ஏற்ப மேலும் விரைவாக கிடைக்கும். பல நகரங்களில் ஆர்டர் செய்த 6 நிமிடங்களில் பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டும் வருகிறது. அதிக பொருட்களை ஆர்டர் செய்யும்போது மட்டும் 10 முதல் 20 நிமிடங்கள் வரையில் பிடிக்கும். ஆனால், அதுவும் மிக விரைவாக கொடுக்கப்படும்.

10 நாளுக்கு இதுதான்.. 10 நிமிடத்தில் மளிகை பொருட்கள்.. எலக்ட்ரானிக்ஸ்!

இதுதான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் கிடைக்கும் சேவையாக இருக்கிறது. இந்த சேவையை மேலும் அதிகரிக்கவும், மக்களிடையே கொண்டு சேர்க்கவும் ஸ்விக்கி நிறுவனம் குயிக் இந்தியா மூவ்மெண்ட் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையில் நடக்கிறது.

ஆகவே, இந்த 10 நாட்களில் இதுவரை கிடைத்த ஆஃபர்களைவிட கூடுதலாக பல்வேறு ஆஃபர்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். எலக்ட்ரானிக்ஸ், கிச்சன், டைனிங் உள்ளிட்ட பொருட்கள், பியூட்டி, பர்சனல் கேர் பொருட்கள், டாய்ஸ் மற்றும் வழக்கமாக கிடைக்கும் மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட 50,000 பொருட்களை இதில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த பொருட்கள் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும். அதேபோல இதற்கு 50 முதல் 90 சதவீதம் வரையில் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு (Axis Bank Credit Cards) 10 சதவீத உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்யும்போது இதை பெற்று கொள்ளலாம்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

ஒன்பிளஸ், ஓப்போ, சியோமி, போகோ மற்றும் ரியல்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மாடல்கள் இதில் ஆர்டர் செய்ய கிடைக்கும். அதேபோல போட், ஜேபிஎல், பிலிப்ஸ், ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களின் இயர்பட்கள் ஆர்டர் செய்ய கிடைக்கும். மேலும், போர்ட்ரானிக்ஸ், மார்ஷல் போன்ற பிராண்ட்களின் ஆடியோ ப்ராடெக்ட்கள் கிடைக்கும்.

லைப்லாங்க் நிறுவத்தின் ப்ரொஜெக்டர்களையும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக பவர் பேங்குகள், சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை ஆர்டர் செய்யலாம். ஸ்மார்ட்வாட்கள், ஸ்மார்ட்பேண்ட்களும் கிடைக்கின்றன. சிசிடிவி கேமரா மற்றும் கம்ப்யூட்டர் அசசரிகள் கிடைக்கின்றன. எல்இடி பல்ப்கள், பேட்டரிகளும் இதில் கிடைக்கின்றன.

இதுமட்டுமல்லாமல், ஏர் பிரையர்கள், ஜூசர்கள் மற்றும் மிக்ஸிகள் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இன்டக்சன் குக் டாப், பிளண்டர்கள், ரைஸ் குக்கர்கள், டோஸ்டர்கள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் உள்ளிட்ட கிச்சன் பொருட்களும் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. மேலும், ஹேர் டிரையர், ஹேர் ஸ்ட்ரெயிட்னர், டிரிம்மர்கள் வாங்க கிடைக்கின்றன.

வீட்டு உபயோக பொருட்கள்

இதில் பெட்ஷீட், பில்லோ, டவல், டோர்மேட் மற்றும் பெட் கவர் போன்றவை கிடைக்கின்றன. குக்கிங் செய்ய தேவைப்படும் குக்வேர் (பாத்திரங்கள், கரண்டிகள் உள்ளிட்டவை) கிடைக்கின்றன. பூஜைக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணி துவைக்க தேவைப்படும், டிஜர்டென்ட், டிஜர்டென்ட் லிக்விட்கள் வருகின்றன. மேலும், டாய்லெட் கிளீனர்கள், ஷூ கேர் பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

மேலும், வழக்கமாக கிடைக்கும் மளிகை பொருட்கள் அனைத்தும் இதில் கிடைக்கிறது. அதேபோல அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை ஆர்டர் செய்யலாம். குழந்தைகளுக்கு தேவையான டாய்ஸ்களும் இதில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் முக்கால்வாசி இந்த ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Swiggy Instamart Announced Quick India Movement Sale From September 19 To September 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X