Home
News

ஸ்விக்கி மூலம் அனுப்பிய ரூ.83000 விலை ஆப்பிள் வாட்ச் திருட்டு! விபுதியடிக்க பார்த்த டெலிவரி பாய்!

ஸ்விக்கி (Swiggy) நிறுவனம், ஸ்விக்கி ஜின்னி டெலிவரி (Swiggy Genie delivery) சேவையை சமீபத்தில் நாட்டில் உள்ள பல நகரங்களில் அறிமுகம் செய்தது. இந்த சேவையை பல லட்சம் மக்கள் இப்போது வரை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு சம்பம், ஸ்விக்கி மீது இருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டது. ஸ்விக்கி ஜின்னி டெலிவரி சேவை மூலம் மக்கள் அவர்கள் விரும்பும் பொருட்களை, ஸ்விக்கி ஜின்னி டெலிவரி பார்ட்னர் மூலம் மற்ற இடத்திற்கு அந்த பொருள் டெலிவரி செய்துக்கொள்ளலாம். இந்த சேவை பல நேரங்களில் பலருக்கும் பெரிதும் உதவியாய் இருந்தது.

ஸ்விக்கி மூலம் அனுப்பிய ரூ.83000 விலை ஆப்பிள் வாட்ச் திருட்டு!

இந்த ஸ்விக்கி ஜின்னி டெலிவரி சேவை மூலம் பயனர்கள் தங்கள் விரும்பி டெலிவரி செய்யும் பொருட்கள் பாதுகாப்பாக டெலிவெரி செய்யப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால், இப்போது பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளது. ஸ்விக்கி பயனரின் நண்பர் ஒருவர் ட்விட்டரில் தனக்கு நிகழ்ந்த துயரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இப்போது பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஸ்விக்கியின் சேவையின் மூலம் மிகவும் மதிப்புமிக்க ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனத்தை மற்றொரு இடத்திற்கு டெலிவரி செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அந்த பொருளை வாங்கி டெலிவெரி செய்ய வேண்டிய டெலிவரி பாய், விலைமதிப்பற்ற ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் பெங்களூரில் நடந்தேறியுள்ள்ளது. ஸ்விக்கி பயனர் ரூ. 82,999 மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனத்தை, சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்க முயன்ற போது, இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனத்தை பேக் செய்து அனுப்பிய பேக்கேஜை டெலிவரி பாய் திறந்து பார்த்ததாக கூறப்படுகிறது.

பேக்கேஜில் விலை அதிகமான பொருள் இருந்ததை பார்த்த நபர், உடனே அவருடன் தொடர்புடைய அணைத்து தகவல்களையும் மறைத்துவிட்டார். போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். அவர் கொண்டு சேர்க்க வேண்டிய ஆப்பிள் வாட்ச் ஆர்தரையும் கேன்சல் செய்திருக்கிறார். அவருடன் தொடர்புடைய அனைத்து தகவல் தொடர்பு சேனல்களையும் துண்டித்துவிட்டு, காணாமல் தலைமறைவாகிவிட்டார்.

அவர் திருடி சென்றது ஆப்பிள் வாட்ச் என்பதனால், அதன் லொகேஷனை ஓனர் தனது போனில் இருந்து கண்காணிக்க முடியும் என்பதை அந்த டெலிவரி நபர் அறிந்திருக்கவில்லை. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சாதனத்திற்கு சொந்தமான நபர், வாட்சின் லொகேஷனை வைத்து, திருடிய நபரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். பிறகு அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.

ஸ்விக்கி ஜின்னி டெலிவரியில் பணியாற்றும் நபரே இப்படி ஒரு பௌசியில் ஈடுபடுத்தினால், மக்களுக்கு ஸ்விக்கி ஜின்னி டெலிவரி மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்விக்கி ஜின்னி டெலிவரி மூலம் இனி பொருட்களை அனுப்பினால், அது சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடையுமா என்ற கேள்வியும் பதட்டமும் இப்போது உருவாகியுள்ளது.இந்த சமத்துவம் குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Swiggy Genie delivery guy Steals Rs 82999 worth Apple Watch Ultra Smartwatch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X