வீட்டிலிருந்து வருமானம்.. ஸ்விக்கி டெய்லி ரெடி.. வீட்டில் சமைத்த உணவுகளை இனி வாங்கலாம்.. ஆர்டர் பிச்சுக்கும்..
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தொடர்ந்து பல்வேறு முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்திய சேவையை மீண்டும் கொண்டுவருகிறது ஸ்விக்கி நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இந்தியாவில் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத தனது ஸ்விக்கி டெய்லி (Swiggy Daily) சேவையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அதாவது கோவிட் லாக்டவுன்களின் போது நிறுத்திய இந்த சேவையை மீண்டும் தொடங்குகிறது.

குறிப்பாக இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் வைத்து உணவைச் சமைப்போர் தொழிலும் மீண்டும் புத்துயிர் பெற இருக்கிறது. அதாவது ஸ்விக்கி நிறுவனத்தின் ஸ்விக்கி டெய்லி சேவை, ஹோட்டல்களுக்கு மாற்றாக வீட்டில் சமைத்த உணவுகளை விரும்பும் பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
ருசி மட்டுமின்றி வீட்டுச் சமையலின் கைப்பக்குவத்துக்காகவும் அதிகமான பயனர்கள் இந்த ஸ்விக்கி டெய்லி வசதியைப் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையின் மூலம் மூன்று நாள் முதல் மாதக்கணக்கு வரை நாள்தோறும் உணவுகளைப் பெறுவது சாத்தியமாகும்.

அதேபோல் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் உயர் கல்வி மற்றும் பணிநிமித்தம் தனியே தங்கியிருப்போர் போன்ற அனைவரும் இதனால் பயன்பெற முடியும். பின்பு நகரங்கள் தோறும் இல்லத்தரசிகள் மற்றும் குறைந்த முதலீட்டில் சமையல் வருமானம் ஈட்ட விரும்புவோர், வீட்டில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைச் சமைத்து டெலிவரி செய்து வருகின்றனர்.
இப்போது ஸ்விக்கி டெய்லி மூலம் இந்த வீட்டு உணவு தயார் செய்யும் மக்களுக்கு டெலிவரி சவால் நிவர்த்தியாகும். அதுவும் கோவிட் லாக்டவுன் காலத்தில் இந்த விநியோக சங்கிலிக்கு தேவை அறுபட்டதால், ஸ்விக்கி தனது ஸ்விக்கி டெய்லி சேவையை நிறுத்தி வைத்தது.
ஆனால் தற்போது வாடிக்கையாளர் கோரிக்கையின் அடிப்படையில் ஸ்விக்கி டெய்லியை படிப்படியாக பல்வேறு நகரங்களில் கொண்டு வருகிறது. அதேபோல் பாரம்பரிய சமையல், சைவம் மற்றும் அசைவம் மட்டுமே சமைப்போர், தேவை மற்றும் வசதிக்கு ஏற்ற உணவுக் கட்டணம் என பலவகையில் அனுகூலமான இந்த வசதிகளை ஸ்விக்கி டெய்லி ஒருங்கிணைக்கத் தயார் என அறிவித்துள்ளது.
குறிப்பாக தற்போது நகரங்களில் கிளவுட் கிச்சன் என்ற பெயரில் வீட்டில் சமைத்த உணவுகள் பிரபலமாகி வருவதன் மத்தியில், ஸ்விக்கியும் களத்தில் இறங்குவது வாடிக்கையாளர் மற்றும் உணவு சமைப்பவர்கள் என இருதரப்பினருக்கும் ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் சோமேட்டே நிறுவனமும் ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்தது. அதாவது பார்ட்டிகள் மற்றும் வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளுக்கான பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக, சோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபின்தர் கோயல், இந்தியாவில் முதல் முறையாக லார்ஜ் ஆர்டர் ஃப்ளீட் (large order fleet) எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
சோமேட்டோ கொண்டுவந்த இந்த புதிய சேவைக்கு வேண்டி டெலிவரி வாகனம் அனைத்தும் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த உள்ளதாகவும், இது சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இருக்கும் என்று தீபின்தர் கோயல் தெரிவித்தார். இந்த ஃப்ளீட் சேவை ஆனது 50 பேர் வரை கொண்ட விருந்துகளுக்காகப் பெரிய ஆர்டர்களை கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது உங்கள் அனைத்து பெரிய குழு,பார்ட்டி, வீட்டில் நடைபெறும் சிறிய நிகழ்வு ஆர்டர்களை கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








