Home
News

ஆன்டிராய்டு போனில் தமிழில் டைப் செய்ய ஸ்விப்ட்கீ அப்ளிகேஷனை நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?

ஆன்டிராய்டு ஆப்ஸ் சந்தையில் பிரபலமான ஆப் ஸ்விப்ட்கீ, இந்த ஆப் பல புதிய அம்சங்களின் மூலம் உலகம் முழுக்க பயனாளிகளை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றது. இந்திய வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு ஸ்விப்ட்கீ அப்ளிகேஷனில் பல இந்திய மொழிகள் மற்றும் புதிய தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த அப்ளிகேஷனில் 10 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆன்டிராய்டு போனில் தமிழில் டைப் செய்ய ஸ்விப்ட்கீ அப்ளிகேஷன்

ஆன்டிராய்டின் ஸ்விப்ட்கீ ஆப் அப்டேட் ஆனதும், அதில் நீங்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமீஸ், ஒரியா, பஞ்சாபி இவை இல்லாமல் இந்த அப்ளிகேஷனில் ஏற்கனவே இந்தி, ஹிங்லிஷ் மற்றும் உருது மொழிகள் நீண்ட காலமாக இருக்கின்றன.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மொழிகளை சேர்த்தால் இந்த அப்ளிகேஷனில் மொத்தம் 81 மொழிகள் இருப்பதாகவும், இத்தனை வொழிகளுடன் இந்த ஆப் வேகமாக செயல்படும் வண்னம் இந்த அப்டேட் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அப்ளிகேஷனின் வேகம் வரை முன்பு இருந்ததோடு தற்சமயம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் கீபோர்டு முன்பு இருந்ததை விட வேகமாக திறக்கும் என்றும் அதே சமயம் கீபோர்டில் சைப் செய்யும் போது அதன் முடிவுகள் 8 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விப்ட்கீ ஆன்டிராய்டு அப்டேட் தற்சமயம் கூகுள் ப்ளேஸ்டோரில் கிடைக்கின்றது, விரைவில் இது அனைத்து ஆன்டிராய்டு கருவிகளுக்கும் கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
SwiftKey Android app supports Tamil and adds more Indian languages for improved performance. Here you will find the full detail about the new extension and additions made in swiftkey Android App.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X