சுஷாந்த் சிங் இன்ஸ்டாகிராம் கணக்கு: இனிமே இப்படிதான் இருக்கும்!

|

சுஷாந்த்சிங் ராஜ்புட் இன்ஸ்டாகிராம் கணக்கு நினைவு பக்கமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு அவர்களின் பெயருக்கு அருகில் நினைவில் கொள்கிறோம் "remembering" என குறிப்பிடப்பட்டிருக்கும்.

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை

மும்பை பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அறிந்த அனைத்து தரப்பினரிடமும் மனக்கவலையை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் விசாரணை

காவல்துறையினர் விசாரணை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இறந்தபோது அவரது வீட்டில் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுஷாந்த் சிங் இறப்பு திரையுலகினர் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி முதல் நாட்டு மக்கள் என ஏராளமானோர் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!எல்லாமே அவர்களுடையது: 52 சீன செயலிகளை புறக்கணிக்க அறிவுறுத்தல்!

இருவீட்டார் மத்தியில் திருமணம்

இருவீட்டார் மத்தியில் திருமணம்

சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவில் இருந்து லாக்டவுன் முடிந்தவுடன் மும்பைக்கு வந்து இருவீட்டார் மத்தியில் திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் மணப்பெண்ணின் பெயரை குடும்பத்தார் தெரிவிக்கவில்லை.

பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி

பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி

அதேபோல் சுஷாந்த் சிங் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் குறித்து இருவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பாலிவுட் வட்டாரங்கள் இருவரையும் காதல் ஜோடிகள் என தெரிவிக்கின்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை என்பது உறுதி

தூக்குப்போட்டு தற்கொலை என்பது உறுதி

மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், சுஷாந்த் சிங் மரணத்திற்கான காரணத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் உடனடியாக சமர்பிக்க கோரினர். அதன்படி பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜ்புட் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படம்

சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படம்

இதற்கிடையில் சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படம் கழுத்தில் தடத்துடன் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் சுஷாந்த் இறந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர வேண்டாம் என மகாராஷ்டிரா போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்: பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?குறித்த நாளுக்கு முன்பே முடித்துவிட்டோம்: பெருமையுடன் முகேஷ் அம்பானி- எதற்கு தெரியுமா?

நினைவில் கொள்கிறோம் என்ற வார்த்தை

அதேபோல் பிரபலங்கள் இறந்த பிறகு அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கம் அவர்களின் நினைவாக எந்த மாற்றம் செய்யப்படாத வகையில் நினைவு பக்கமாக மாற்றப்படும். அதோடு அவர்களின் பெயருக்கு அருகில் நினைவில் கொள்கிறோம் "remembering" என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இன்ஸ்டாகிராம் பக்கம் அப்படியே இருக்கும்

இன்ஸ்டாகிராம் பக்கம் அப்படியே இருக்கும்

இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராமில் அப்படி நினைவு பக்கமாக மாற்றப்பட்ட பிறகு அப்போதைய இருக்கும் தகவல்களிலும், பதிவுகளிலும் எந்த மாற்றமும் செய்ய முடியாது. அவர்களது பதிவுகள் நீக்காமல் யாருக்கு பகிர்ந்தாரோ அதுவும் அப்படியே இருக்கும்.

சுஷாந்த் சிங் பகிர்ந்த பதிவுகள்

சுஷாந்த் சிங் பகிர்ந்த பதிவுகள்

அப்படி சுஷாந்த் சிங் இன்ஸ்டாகிராம் பக்கம் அவரது இறப்புக்கு பின் memorialized, அதாவது நினைவு பக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த பக்கத்தில் சுஷாந்த் சிங் பகிர்ந்த பதிவுகள் எந்த மாற்றமும் செய்யப்படாத வகையில் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sushant Singh Rajput Instagram Profile added "Remembering" New Feature

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X