சூரிய கிரகணம் 2022: பல சிறப்புகளுடன் நிகழும் கிரகணம்- இந்திய நேரம் இதுதான்., இதெல்லாம் செய்ய வேண்டாம்!

|

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ இருக்கிறது. இதில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் என மொத்தம் 4 கிரகணங்கள் இந்தாண்டு நிகழ இருக்கிறது. இன்று இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் (ஏப்ரல் 30) இன்று நிகழ்கிறது. இன்று நிகழும் இந்த சூரிய கிரகணம் ஆன்ஷிக் சூரிய கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 30 இன்று சூரிய கிரகணமும், மே 16 அன்று மற்றொரு சந்திர கிரகணமும், அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணமும், நவம்பர் 8 அன்று சந்திர கிரகணமும் நிகழ இருக்கிறது.

சூரிய கிரகணம் 2022

சூரிய கிரகணம் 2022

இன்று நிகழும் இந்த சூரிய கிரகணமானது நம் நாட்டில் இருந்து பார்க்கத் தெரியாது. இந்த சூரிய கிரகணமானது பிற குறிப்பிட்ட நாடுகளில் தெரியும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வை பார்க்க ஆர்வமுள்ளவர்கள் நாசாவின் யூடியூப் சேனல் மூலமாக நேரலையில் பார்க்கலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் கடப்பதையே சூரிய கிரகணம் என குறிப்பிடப்படுகிறது. இன்று நிகழும் சூரிய கிரகணத்தில் ஒரு பகுதியளவு சூரியனை மட்டுமே நிலவு மறைக்கும் என நாசா தெரிவிக்கிறது.

நேரலையின் மூலம் பார்க்கலாம்

நேரலையின் மூலம் பார்க்கலாம்

ஏப்ரல் 30ஆம் தேதி இன்று நடக்கும் சூரிய கிரகணத்தில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது. காரணம் இது அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம் ஆகும். சூரிய கிரகணம் 2022 நேரடியாகக் காணக்கிடைக்காது என்றாலும் அதன் தாக்கம் மேஷம், கடகம் மற்றும் விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளில் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காலத்தில் எதுவும் சாத்தியமானதாகும், அதேபோல் Timeanddate.com என்ற இணையதளம் சூரிய கிரகண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.

இதுகுறித்தTimeanddate.com அறிக்கையில், இந்திய நேரப்படி பகுதி கிரகணம் நிகழும் நேரம் மே 1, 00:15:19 ஆகும். அதேபோல் அதிகபட்ச கிரகணம் நிகழும் நேரம் மே 1, 02:11:37 ஆகும். பகுதி கிரகணம் நிகழும் கடைசி நேரம் மே 1, 04:07:56 ஆகும்.

பகுதியளவு மறைந்திருக்கும் சூரியன்

பகுதியளவு மறைந்திருக்கும் சூரியன்

அதிகாரப்பூர்வ வெளியீட்டில், நாசா கூறியதாவது, "ஏப்ரல் 30 மாலை நேரத்தில் மேற்கு வானத்தில் சூரியன் அஸ்தமிக்கும் போது, ​​சிலி, அர்ஜென்டினா, உருகுவே, மேற்கு பராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெருவில் தெளிவான வானம் உள்ளவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தின் பகுதியளவு மறைந்திருக்கும் சூரியனை நேரில் காண வாய்ப்புள்ளது என்று நாசா கூறியுள்ளது. தென்மேற்கு பிரேசிலின் ஒரு சிறிய பகுதி தெரியவும் வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா, அண்டார்டிகா மற்றும் தெற்கு மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் இது தெரியும்.

சூரிய கிரகணம் 2022 விளைவுகள்

சூரிய கிரகணம் 2022 விளைவுகள்

சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை என்றாலும் அதன் தாக்கம் மேஷம், கடகம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளில் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் கிரகணமானது தெற்கு தென்அமெரிக்கா, அண்டார்டிகாவின் சில பகுதிகள், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் காண முடியும் என timeanddate.com தகவல் தெரிவிக்கிறது. சூரிய கிரகணத்தின் போது பலர் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். மேலும், வெறும் கண்களால் கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக, மக்கள் கேமரா அல்லது தொலைநோக்கியின் லென்ஸ் மூலம் கிரகணத்தைப் பார்க்கிறார்கள். சூரிய கிரகணத்தைக் காண மக்கள் பாக்ஸ் ப்ரொஜெக்டர்கள் மற்றும் தொலைநோக்கிகளையும் பயன்படுத்துகின்றனர். இன்று நிகழும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால், இந்த கிரகத்தை நாசாவின் யூடியூப் நேரலை மூலமாக பார்க்கலாம்.

சூரிய கிரகணம் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது

சூரிய கிரகணம் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது

இந்தியாவில் இதுபோன்ற கிரகணத்தின் போது மக்கள் பொதுவாக வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள், இந்த சமயங்களில் எந்த பொருட்களை உட்கொள்ள மாட்டார்கள். அதேபோல் தர்ப்பை புல் மற்றும் துளசி இலைகளை கிரகத்தின் போது தீய விளைவுகளை தடுக்க உணவு மற்றும் தண்ணீரில் போடப்படுகின்றன. பலரும் இந்த கிரகண நேரம் முடிந்ததும் குளித்துவிட்டு புதிய ஆடைகளை அணிய வேண்டும் என நம்புகிறார்கள். அதேபோல் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரகங்களை உச்சரிப்பது நாட்டில் பல குடும்பங்களில் பின்பற்றப்படும் மற்றொரு நடைமுறையாக இருக்கிறது.

பலரும் இந்த காரியங்கள் செய்வதை தடுக்கின்றனர்

பலரும் இந்த காரியங்கள் செய்வதை தடுக்கின்றனர்

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், இந்த கிரகண நேரத்தில் பலரும் தண்ணீர் அருந்துவதையே தவிர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிரகண சமயங்களில் உணவு தயாரிப்பு மற்றும் சாப்பிடுவது என்பதை பலரும் தவிர்க்கின்றனர். எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவது என்பது பலராலும் இந்த கிரகண நேரங்களில் தவிர்க்கப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Surya Grahan 2022: How to Watch Solar Eclipse in India, India Timings

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X