திருப்பூர் போலீசாரின் ட்ரோன் வைரல் வீடியோ.! கேரம்போர்டு ஆடிய நபர்கள் பதறி ஓட்டம்.!

|

கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாக குறைந்து வருகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை, இதனால் கொரோனாவில் இருந்து
தமிழகம் விரைவில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி

குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்தது. இதற்கு காரணம் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தினமும் பாசிட்டிவ் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதன் விளைவாக இன்று 1242 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

38பேருக்கும் மட்டுமே

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைவாகவே உள்ளது, நேற்று 31பேருக்கும், இன்று 38பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிவரி நபருக்கு காய்ச்சல் இருக்கா?- சொமேட்டோவின் சிறப்பு ஏற்பாடு!டெலிவரி நபருக்கு காய்ச்சல் இருக்கா?- சொமேட்டோவின் சிறப்பு ஏற்பாடு!

பரவலை தடுக்க நாடு

இப்போது கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது, அத்தியாவசியத் தேவைகளுக்காகமட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றிவருகின்றனர். எனவே அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் போலீசார் ஊரடங்கு மீறுபவர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும்போது, ஒரு மரத்தடியில்
கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இளைஞர்கள் தெரித்து பயந்து ஓடிய வீடியோ ஜல்லிக்கட்டு பின்னணி இசையுடன் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் ட்ரோன்களை

குறிப்பாக தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களைக் கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன்களை பயன்படுத்தி எங்கே ஊரடங்கை மீறி மக்கள் நடமாடுகிறார்கள் என்று அறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீஸார் டிரோன் கேமரா விட்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்தபோது, பொட்டல்காட்டில் ஒரு மரத்தடியில் சிறுவர்கள், இளைஞர்கள் என பலர் கேரம்போர்டு விளையாடிக்கொண்டு கும்பலாக இருந்தனர்.

 ட்ரோனைப் பார்த்த

பறக்கவிட்ட ட்ரோன் மூலம் தெரியவர போலீசார் மெல்ல ட்ரோனை கீழே இறக்க ட்ரோனைப் பார்த்த சிறுவர்கள்இளைஞர்கள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஓடியவர்களில் சிறுவன் ஒருவன் வந்து கேரம்போர்டை தூக்கிக்கொண்டு ஓடுகிறான், பின் தொடர்ந்த ட்ரோனில் தனது முகம் பதிவாகிவிடக் கூடது என கேரம் போர்டால் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்துவிடுகிறான. இந்த சம்பவம் ட்ரோன் கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது.

தற்சமயம் இந்த வீடியோ

மேலும் இந்த வீடியோவுக்கு ஜல்லிக்கட்டு களத்தின் பின்னணி இசையும் வடிவேலுவின் வசனங்களும் சேர்க்கப்பட்டு இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்சமயம் இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Surveillance Drone Video Of Tiruppur Police Went Viral On Internet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X