கடலில் தொலைந்து போன Apple வாட்ச்: ஒருவழியாக கண்டுபிடித்து எடுத்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால், தனித்துவமான இயங்குதளம், சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் அசத்தலான வடிவமைப்பு எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவருகின்றன ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள். குறிப்பாக ஐபோன் போன்றே ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை எப்போதுமே சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்கின்றன. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் அந்த சாதனங்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் அரங்கேறி இருக்கிறது.

குறிப்பாக ஆப்பிள் வாட்ச் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஆப்பிள் வாட்ச் முன்பு இருந்ததை போன்றே சீராக இயங்கியுள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் கப்பலில் பயணம் செய்த ஜெஃபர்சன் ரோச்சா. ஒரு கடத்தில் கடலில் இறங்கி நீந்த திட்டமிட்டார்.
அதன்படி மகிழ்ச்சியாகக் கடலில் நீந்திய ரோச்சா, தனது ஆப்பிள் வாட்ச்-ஐ தவறுதலாகக் கடலில் தொலைத்துவிட்டார். ஆனால் அது எந்த ஆப்பிள் வாட்ச் மாடல் என்பது பற்றிய சரியான தகவல் இல்லை. பின்பு கடலில் தொலைத்த ஆப்பிள் வாட்ச் மாடல் ஃபைண்ட மை எனும் அம்சத்தைக் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.
அதன்பின்பு கடலில் தவறிவிட்ட ஆப்பிள் வாட்ச் ஆஃப் ஆவதற்கு முன்பு கப்பலில் ஏறி அதனை ஃபைண்ட் மை அம்சம் மூலம் தேட துவங்கியுள்ளார் ரோச்சா. இருந்தபோதிலும் ஃபைண்ட் மை ஆப் மூலம் தேட துவங்கியதும் ஆப்பிள் வாட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்பு காணாமல் போன மறுநாள் அவருக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் அலர்ட் கிடைத்துள்ளது.

குறிப்பாக அதில் ஆப்பிள் வாட்ச் ஆக்டிவேட் ஆகி இருப்பதாகத் தகவல் இருந்துள்ளது. உடனே லாஸ்ட் மோட்-ஐ ஆக்டிவேட் செய்துள்ளார் ரோச்சா. பின்பு அதில் தனது தனிப்பட்ட விவரங்களைப் பதிவிட்டுள்ளார். மேலும் தேடல் முயற்சிக்குப் பலன் இல்லாத நிலையில், வேறு யாரேனும் அதனைக் கண்டெடுத்தால் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்றும் ரோச்சா நம்பினார்.
அதேபோல் ரோச்சா நம்பிக்கை வீண் போகவில்லை. அதாவது இன்ஸ்டாகிராமில் இருந்து ரோச்சாவை 16 வயது சிறு ஒருவர் தொடர்பு கொண்டு ஆப்பிள் வாட்ச் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பின்பு இந்த ஆப்பிள் வாட்ச் மாடலை 50 வயது ஓட்டுனர் ஒருவர் கண்டெடுத்தார் என்பதை அந்த சிறுமியின் மூலம் ரோச்சா தெரிந்துகொண்டார்.
மேலும் அந்த ஆப்பிள் வாட்ச்-ஐ கண்டெடுத்த ஓட்டுனர் பெனோனி அண்டோனியா ஃபிஹோ என்பவர் மக்கள் தொலைக்கும் பொருட்களைக் கண்டெடுத்தால் அதனை அவர்களிடம் சேர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்ப குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவர் மீட்டெடுத்த ரோச்சாவின் ஆப்பிள் வாட்ச் அதன் முந்தைய நிலையிலேயே சீராக இயங்கியது என்று கூறப்படுகிறது.

அதேபோல் ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 2-வை தொடர்ந்து அறிமுகம் செய்த மாடல்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. எனவே ஆப்பிள் வாட்ச் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரையிலான நீரில் மூழ்கினாலும் சீராக இயங்கும் வசதி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் ஆனது 100 மீட்டர்கள் ஆழத்தில் மூழ்கினாலும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதால் தான் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications