ஒரு வரம்பு இல்லையா?- சமூகவலைதளம், யூடியூப் சேனல்களில் பரப்பப்படும் பொய் செய்திகள்: உச்சநீதிமன்றம் கவலை!

|

சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது யூடியூப். யூடியூப் தளத்தில் கணக்கு தொடங்கி பலரும் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமூகவலைதளங்கள், யூடியூப் சேனல்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. யூடியூப் சேனல்களில் யார் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் ஆனால் அதே யூடியூப் சேனல்களில் நீதிபதிகள், நிறுவனங்கள், பொதுமக்கள் குறித்து போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

பரப்பப்படும் பொய் செய்திகள்

பரப்பப்படும் பொய் செய்திகள்

மதம், சாதி சார்ந்த வகுப்பு கண்ணோட்டத்தில் ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதாகவும், ஆனால் அதிகாரமிக்கவர்களுக்கு எதிராக என்த செய்திகளும் அவைகளில் வருவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சமூகவலைதளம். யூடியூப் சேனல்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அணைப்பு இல்லாத காரணத்தால் இதுபோன்ற செயல்கள் தொடர்வதாகவும் குறிப்பிட்டனர்.

யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம்

யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம்

சமூகவலைதளங்களில் யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கி போலி செய்திகளை சுதந்திரமாக பரப்ப முடிகிறது. யூடியூப்பிற்கு சென்றால் போலி செய்திகள் எப்படி சுதந்திரமாக உலா வருகிறது என்பது காணமுடிகிறது. இதில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய ஐடி விதிகள் குறித்து முன்மொழியப்பட்டாலும், புதிய ஐடி விதிகளை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.

தேவையான பல முக்கியத் தகவல்கள்

தேவையான பல முக்கியத் தகவல்கள்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும். அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும். இருப்பினும் இது கட்டுபாடின்றி இயங்குவதால் பலர் முறையற்ற தகவலை தடையின்றி பரப்புகின்றனர்.

மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளம்

மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளம்

உலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்போது பல்வேறு மக்கள் அதிகளவு யூடியூப் சேனல்களை தான் பார்க்கின்றனர், குறிப்பாக சமையல் டிப்ஸ் முதல் விளையாட்டு வரை அனைத்து வீடியோக்களும் இந்த யூடியூபில் வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல்

வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல்

பலரும் வருமான நோக்கத்தோடு யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ பதிவேற்று வருகின்றனர். ஒரு சிலர் பிரபலமடைய வேண்டும் என வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சிலர் எதிர்பாராத வீடியோக்களையும், தங்களது அன்றாட நடைமுறைகளையும் பதிவிடுவார்கள் அந்த வீடியோ வைரலாகி பிரபலமடைவது உண்டு.வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் சம்பாத்தியம் பிரதானமாக திகழ்ந்து வருகிறது. யூடியூப்பில் தனித்துவமாக வீடியோ பதிவிடுவது, பேஸ்புக்கில் பக்கம் தொடங்கி லைக் வாங்குவது, டுவிட்டர் பாலோவர் பெறுவது என பல்வேறு முயற்சிகளை பெரும்பாலோனார் எடுத்து வருகின்றனர்.

தினசரி பயன்படுத்தப்படும் வீடியோ சேவை தளம்

தினசரி பயன்படுத்தப்படும் வீடியோ சேவை தளம்

நம்மில் பெரும்பாலோர் யூடியூப் தளத்தை அவர்-அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் பயன்பாடு மூலம் தினசரி இந்த வீடியோ சேவையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அடிப்படையில் இதைப் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தினாலும் கூட, யூடியூப் தளத்தில் நாம் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான பயனுள்ள தகவல்களும் உள்ளது.

வீடியோக்கள் பதிவிட்டு வருமானம்

வீடியோக்கள் பதிவிட்டு வருமானம்

யூடியூப் வீடியோ சேனல் ஆரம்பித்து வீடியோ அப்லோட் செய்யும்போது வீடியோக்கள் பார்க்கப்படும் எண்ணிக்கை பொருத்து குறிப்பிட்ட தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதை பலரும் தொழிலாக சேனல் ஆரம்பித்து தனித்துவ வீடியோக்களை பதிவிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். இதற்கு கட்டுப்பாடு விதித்து முறையான பதிவுகளை மேற்கொண்டால் தகவலை தெரிந்துக் கொள்பவர்களுக்கு மிக உபயோகமாக இருப்பதோடு யாரையும் காயப்படுத்தாமல் இருக்கும்.

யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம்

யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம்

அதேபோல் இன்ஸ்டார ரீல்ஸ் போன்றே யூடியூப் பயன்பாட்டில் யூடியூப் ஷார்ட்ஸ் வெளியிடும் பயனர்களுக்கு வருமானம் கிடைக்கும் என யூடியூப் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் தெரிவித்தார். பயனர்கள் 30 வினாடிகள் யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோவை வெளியிட்டு அதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் பட்சத்தில் ரூ.7 லட்சம் வரை ஒரு மாதத்திற்கு வருமானம் ஈட்ட முடியும் என யூடியூப் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

சூப்பர் சாட் என்ற புதிய அம்சம்

யூடியூப் ஷார்ட்ஸ் அம்சத்தில் சூப்பர் சாட் என்ற புதிய அம்சம் இருக்கிறது. இந்த புதிய அம்சம் மூலம் பார்வையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டாலும் வருவாயை அதிகரிக்கச் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளுக்கு சொந்தமான யூடியூப் தளம் யூடியூப் ஷார்ட்ஸ்-ல் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. நிறுவனம் படைப்பாளர்களுக்கு என 100 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.

பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் வீடியோக்கள்

வைரல் வீடியோக்களுக்கு இந்த முதலீட்டை நிறுவனம் செலவு செய்ய இருக்கிறது. யூடியூப் எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் படைப்பாளர்கள் மாதம் ரூ.7400 முதல் ரூ.740000 வரை வருமானம் ஈட்டலாம். இதற்கு யூடியூப் படைப்பாளர்கள் பயனர்களை கவர்ந்து பார்வையாளர்களை அதிகரிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட வேண்டும்.

Best Mobiles in India

English summary
Supreme Court is concerned about fake news being spread on social media and YouTube

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X