நீதிமன்ற விசாரணையை மக்கள் நேரலையில் பார்க்க புதிய ஏற்பாடு.!
தலைமை நீதிபதி மிஸ்ரா கூறியது என்றவென்றால் விவாகரத்து வழக்குகள்,பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகள் தவிர்து மற்ற வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய சில தொழில்நுட்பம் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும், அதன்படி நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து விசாரணைகளையும் நேரலை செய்ய உச்சநீதிமன்றம் தற்சமயம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறியுது என்னவென்றார் அனைத்து நீதிமன்ற நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று தெரிவித்தார்.
குறிப்பாக முதலில் உச்சநீதிமன்றத்தில் இருந்து இதனை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்ந்து மற்ற நீதிமன்றங்களுக்கும் விரவாக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி மிஸ்ரா கூறியது என்றவென்றால் விவாகரத்து வழக்குகள்,பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகள் தவிர்து மற்ற வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்குவேண்டி ஒரு அறிக்கையை சமர்பிக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுள்ளார்.
இதற்கு முன்பு ரயில்களில் எப்படி உணவு தயாராகிறது என்பதை இணையத்தில் பயணிகள் நேரடியாக காண்பதற்கு புதிய முறையை அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வேண்டி ரயில்களில் உள்ள சமையல் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளது ரயில்வே அமைச்சகம். குறிப்பாக ரயில்வே உணவுத் துறைக்கு சொந்தமாக 200 சமையலறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சமைக்கப்படுவதை ஐஆர்சிடிசி இணையதளத்தின் வழியே பயனர்கள் பார்க்கமுடியும், பின்பு இதை விஷன் கம்ப்யூட்டிங் என்ற முறையில் செயல்படுத்தபடும் என்று கூறியுள்ளது ஐஆர்சிடிசி அமைப்பு.
சமைக்கப்படும் உணவுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால்,உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்கும் வசதியும் கூட உள்ளது, மேலும் புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு உடனே கொண்டு செல்லப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐஆர்சிடிசி-க்கு புகார் செல்லும் வசதி கூட வந்துவிட்டது.

ரயில்வே பயனிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களை தெரிவிக்க இரண்டு புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த செயலிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரண்டு செயலிகளை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications