சாத்தியமாகும் சூப்பர் பவர்..!!

By Meganathan
|

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் திரைப்படங்களை பார்த்து முடித்த பின் அதே சக்திகள் நமக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்க தான் செய்யும். இந்த விஷயம் வெறும் ஆசையோடு நிற்காமல் கனவிலும் வந்து அனைவரையும் உசுப்பேற்றம் என்பது இதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

பேய்கள் கேமிராவில் மட்டும் சிக்குவது ஏன்..?

கனவுகள் எல்லாம் பலிக்குமோ இல்லையோ தெரியாது ஆனால் நீங்களும் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ஹல்க் ஆகலாம் என்கின்றது இன்றைய தொழில்நுட்ப சந்தை. அசாத்திய சக்தி பெற நினைப்பவர்கள் அடுத்து வரும் ஸ்லைடர்களில் அதற்கான விளக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

சக்தி

சக்தி

ஹல்க் போன்று அதிக சக்தியை பெற்று அதிக எடை கொண்ட பொருட்களையும் சிரமம் இன்றி தூக்க வழி வகை செய்கின்றது எக்ஸோஸ்கெலிட்டன் தொழில்நுட்பம். மனிதர்கள் இந்த எக்ஸோஸ்கெலிட்டன் ஆடைகளை அணிந்து கொண்டு அதிக சக்தி பெற முடியும்.

பறவை

பறவை

மனிதர்களின் பறக்கும் ஆசையை பூர்த்தி செய்யும் கருவியாக ஜெட்பேக்'கள் இருக்கின்றன. ஜெட்பேக் சார்ந்த ஆய்வு பணிகள் 1960 ஆம் ஆண்டு துவங்கி இந்த காலத்தில் தான் நிறைவடைந்திருக்கின்றது எனலாம். இன்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்டின் ஜெட்பேக் கருவிகள் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறையும் திறன்

மறையும் திறன்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் நபரை மறைய வைக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு விட்டது. இதன் மூலம் க்ளோக்கிங் எனும் கருவியை கொண்டு குறிப்பிட்ட கோணங்களில் பிரத்யேக கண்ணாடிகளை பயன்படுத்தி பொருட்களை மறைய வைக்க முடியும்.

மறையும் வீடியோ

பொருட்களை மறைய வைக்கும் கண்ணாடி குறித்த ரோச்செஸ்டர் பல்கலைகழக்கத்தின் வீடியோவை இங்கு பாருங்கள்.

எக்ஸ்-ரே பார்வை

எக்ஸ்-ரே பார்வை

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று கண்டறிந்திருக்கும் புதிய வகை கண்ணாடிகள் வாகன ஓட்டிகளுக்கு எக்ஸ் ரே பார்வையை வழங்குகின்றது. இது போன்று உலகம் முழுக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் மனிதர்களின் உடலில் என்ன இருக்கின்றது என்பதை நேரடியாக பார்க்க வழி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீர்

நீர்

ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய வகை பளிங்குகள் மனிதர்களை நீரினுள் மூச்சு விட அனுமதிக்கின்றது. அக்வாமேன் சக்தியை வழங்கும் புதிய வகை கனிமம், மனிதர்களை நீண்ட நேரம் நீரில் நீந்த வழி செய்கின்றது.

டேர்டெவில்

டேர்டெவில்

ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் பயோஹேக்கர்கள் பார்வை மற்றும் சத்தமில்லாமல் காந்த துறைகளை உணர வைக்கும் மாற்று சிகிச்சைகளை கண்டறிந்திருக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தினை கண் பார்வை மற்றும் காது கேளாதோர் பயன்படுத்தும் வகையில் உருவாக்க அவர்கள் ஈடுப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

டெலிபதி

டெலிபதி

மூளை கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் தங்களது மூளையை கொண்டு தகவல் பறிமாற்றி கொள்ளும் முறையை உருவாக்கும் பணிகளில் டாக்டர். மிக்வல் நிகோலிஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டெலிபதி

டெலிபதி

மேலும் இந்த ஆய்வுகளின் மூலம் இணைக்கப்பட்ட இரு பொருட்களிடையே தகவல்களை பறிமாறி கொள்வதோடு மூளை மூலமாகவே பொருட்களை நகர்த்த முடிவதாக ஆய்வு பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த திட்டம் தற்சமயம் வரை சோதனை பணிகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு பார்வை

இரவு பார்வை

கலிஃபோர்னியாவை சேர்ந்த 'சயின்ஸ் ஃபார் மாசஸ்' குழுவினர் ஆழ்கடல் மீனில் இருக்கும் கேப்ரியல் லிசினா மற்றும் க்ளோரின் ஈ6 வேதி பொருளை கண்டறிந்திருக்கின்றனர்.

கண் பார்வை

கண் பார்வை

குறிப்பிட்ட அந்த வேதி பொருளை சோதனைக்கு தயாரான ஒருவரின் உடலில் செலுத்தி சோதனை செய்ததில் குறிப்பிட்ட நபரால் எவ்வித சிரமம் இன்றி சுமார் 50மீட்டர் தொலைவு வரை ஆழ்ந்த இருளிலும் பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் கோளாறு

உடல் கோளாறு

அமெரிக்காவின் டார்பா ஆய்வு நிறுவனமானது ராணுவ வீரர்களுக்கு உடல் அளவில் ஏற்படும் கோளாறுகளை தானாகவே சரி செய்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றது.

செயற்கை

செயற்கை

அதன் படி மனித உடல் பாகங்களை கவனித்து அவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்ப்பட்டால் தானாக சரி செய்யும் வகையில் சிறிய செயற்கை பாகங்கள் பொருத்தப்படும்.

தி ப்ளாஷ்

தி ப்ளாஷ்

டார்பா ஆய்வு நிறுவனத்தின் ஜெட் பேக் கருவிகள் மனிதர்களை சோர்வின்றி அதிக தூரம் வேகமாக ஓடுவதற்கு வழி செய்கின்றன.

சோதனை

சோதனை

இந்த ஜெட் பேக் கருவிகள் தற்சமயம் சோதனையில் இருப்பதாகவும் முழு சோதனைகளும் நிறைவடையும் போது இந்த கருவி அதிகம் மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்மேன்

பேட்மேன்

பேட்மேன் திரைப்படத்தில் வருவதை போன்ற ஆடையை குறைந்த எடை மற்றும் சிறப்பான கவசமாகவும் இருக்கும் வகையில் கோலம்பியாவை சேர்ந்த மிக்வல் கபெல்லெரோ நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

ஜெல்

ஜெல்

குறைந்த எடை கொண்ட இந்த கவசமானது ஜெல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அணிந்து கொள்ள சவுகரியமாகவும் இருக்கின்றது. மேலும் பார்க்கவும் இந்த ஆடை அழகாக காட்சியளிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் மேன்

டார்பா ஆய்வு நிறுவனத்தின் இசட்-மேன் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆடை மனிதர்களை செங்குத்தான கண்ணாடிகளில் ஏற வழி செய்கின்றது.

எடை

எடை

இதே போன்ற ஓர் முறையை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களும் உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் அதிக எடையை சுமந்து கொண்டு கூடுதல் அம்சங்களையும் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்று தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
superpowers we can have now. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X