ஆபத்தா? நீச்சலடித்து காப்பாற்ற புதிய ரோபோ!

Posted By: Staff
ஆபத்தா? நீச்சலடித்து காப்பாற்ற புதிய ரோபோ!

டோக்கியோ தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் குளுவினர் மூலம் நீச்சலடிக்கும் புதிய ரோபோ கண்டுபிடிக்கபட்டுள்ளது.

கடலுக்கடியிலும் கூட பல ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. உகாரணத்திற்கு கடல் வாழ் உயரினங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் கடலுக்கடியில் செல்ல வேண்டியது இருக்கும்.

இது போன்ற ஆய்வாளர்கள் என்ன தான் நீச்சல் பற்றி முழு பயிற்சியினை எடுத்திருந்தாலும், சிலநேரங்களில் இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

இதன் காரணமாக இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரோபோ ஆய்வாளர்களின் படைப்பில் புதிய நீந்தும் சக்தி கொண்ட ரோபோ என்று சொல்லலாம்.

பொதுவாகவே ரோபோக்கள் செயல்பாடுகளில் மனிதர்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானது என்று. மனிதர்களை போன்ற வேகமாக ரோபோக்களால் இயங்க முடிவதில்லை.

இதை ஒப்பிட்டு பார்க்கையில் நீந்துவதற்கு இன்னும் அதிக வேகம் தேவைப்படுகிறது. இதனால் இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ மனிதர்களை போலவே அதி வேகத்தில் நீந்துமா? என்ற கேள்வியும் எழுகிறது.

மனிதர்களை போலவே சிறப்பாக நீந்த இன்னும் பல சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவில் 3டி ஸ்கேனரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீந்துபவர்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் நேர்ந்தால், இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவால் எளிதாக கண்டுபிடித்து காப்பாற்றவும் முடியும்.

இந்த ரோபோ கடலுக்கடியில் நீந்த வேண்டி இருப்பதால், 20 வாட்டர்ப்ரூஃப் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த ரோபோவை சிறப்பாக இயங்க வைக்க, கணினி மூலம் கட்டுப்படுத்த கூடிய மோட்டார்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

பல மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தினை வழங்குவதன் மூலம் ஸ்வுமேனாய்டு ரோபோ இன்னும் சிறப்பான இயக்கத்தினை பெறும் என்று கருதப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot