Home
News

ஹை-ரேட் டிவி எல்லாம் இப்போ லோ-ரேட்டில்-ஆ? Smart Tv மீது 1.2 லட்சம் வரை தள்ளுபடி!

ஒரு பக்கம் அமேசான் கிரேட் சம்மர் சேல்ஸ் விற்பனை, இன்னொரு பக்கம் பிளிப்கார்ட் பிக் சேவிங் டே சேல்ஸ் விற்பனை என்று இந்தியாவில் இரண்டு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும், ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை என்று சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாரிவழங்கி வருகிறது.

Amazon மற்றும் Flipkart ஆகிய இந்த 2 தளங்களிலும் பல தயாரிப்புகள் மீது எக்கச்சக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மக்களின் கவனத்தை ஈர்த்த சலுகையாக, ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) மீது அறிவிக்கப்பட்ட சலுகைகள் உள்ளது. சில பல ஆயிரங்களை தாண்டி, இந்த முறை 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகள் எல்லாம் விற்பனைக்கு வந்துள்ளன.

ஹை-ரேட் டிவி எல்லாம் இப்போ லோ-ரேட்டில்-ஆ? Smart Tv மீது 1.2 லட்சம் OFF

எந்த டிவி மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க. ஸ்மார்ட் டிவி கேட்டகிரியில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய 2 தளங்களில் இருந்து, இப்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட் டிவிகள் மற்றும் அதன் மீது கிடைக்கும் சலுகை விபரம் பற்றிய விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். பெஸ்டான சலுகையுடன் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் இதோ.

சாம்சங் கிரிஸ்டல் 4K நியோ அல்ட்ரா HD 43 இன்ச் டிவி (Samsung Crystal 4K Neo Ultra HD 4K TV UA43AUE65AKXXL) இந்த ஸ்மார்ட் டிவி 43 இன்ச் டிஸ்பிளே அளவுடன், 50Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 3840×2160 பிக்சல் தீர்மானத்துடன் HDR10+ சப்போர்ட் உடன் வரக்கூடிய 4K டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.35,990 ஆகும். அமேசான் சலுகைக்கு பிறகு இது இப்போது ரூ.28,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் டிவி Y சீரிஸ் 50' இன்ச் 4K அல்ட்ரா HD 50Y1S ப்ரோ (OnePlus TV Y Series 4K Ultra HD 50 Y1S Pro) மாடல் ஸ்மார்ட் டிவி 4K UHD டிஸ்பிளேவுடன் ஆட்டோ லோ-லாடென்சி மோட் (ALLM) மற்றும் டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சத்துடன் வருகிறது. இது HDR10+, HDR10 மற்றும் HLG சப்போர்ட் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.32,999 ஆகும். அம்சோனின் சலுகை விலையாக ரூ.30,990 விலைக்கு இதை வாங்கலாம்.

ஹை-ரேட் டிவி எல்லாம் இப்போ லோ-ரேட்டில்-ஆ? Smart Tv மீது 1.2 லட்சம் OFF

சோனி ப்ராவியா அல்ட்ரா 55' இன்ச் HD 4K டிவி (Sony Bravia Ultra HD 4K TV KD-55X74K) மாடல் 60Hzரெஃப்ரஷ் ரேட் உடன் HD 4K தெளிவுத்திறனுடன் வரும் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சோனி (Sony) என்றாலே அதன் வீடியோ மற்றும் ஆடியோ தரம் தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.99,900 ஆகும். பிளிப்கார்ட் சலுகைக்கு பிறகு இது ரூ.55,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

சோனி ப்ராவியா XR சீரிஸ் 55' இன்ச் 4K அல்ட்ரா HD டிவி (Sony Bravia XR series 4K Ultra HD TV) சாதனத்தில் இல்லாத அம்சங்களே கிடையாது. இதில் காக்நிட்டிவ் பிராசஸர் XR மற்றும் அக்குஸ்டிக் சர்பேஸ் ப்ரோ+ சவுண்ட் ஸிஸ்டம், HDR10, HLG, டால்பி விஷன், IMAX என்ஹான்ஸ் போன்ற சூப்பர் பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் அசல் விலை ரூ.2,49,900 மட்டுமே. அமேசான் சலுகையுடன் இப்போது ரூ.1,19,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

வியு தி க்ளோ LED சீரிஸ் 65' இன்ச் 4K டிவி (Vu - The Glo LED Series 4K TV) சாதனம் அல்ட்ரா 4K அம்சத்துடன் HD LED டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 65' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 60,999 ஆகும். ஆனால், தற்போதைய அமேசான் சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 52,990 விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Super Massive Offers On Smart TV From Amazon and Flipkart With Up To 1.5 Lakh Discount On Sony Bravia 4K Tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X