வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!

|

ரியல்மி, ஒன்பிளஸ், சாம்சங், ஒப்போ என பல நிறுவனங்களின் சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் கிடைக்கின்றன. இந்த சூப்பர் ஹீரோஸ் ஸ்மார்ட்போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல், ஏன் லிமிடெட் எடிஷன் ஆக வெளியாகி இருக்கிறது என்ற விவரங்களை பார்க்கலாம்.

பிரபலமாக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல முயற்சிகள்

பிரபலமாக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல முயற்சிகள்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை பிரபலமாக்கவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல முயற்சிகள் செய்து வருகின்றன. ஏணைய விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களை தங்களது ஸ்மார்ட்போன்களில் நிறுவனங்கள் புகுத்தி வருகின்றன. ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அம்சங்களின் அடிப்படையில் புதுமை மற்றும் ஆக்கப்பூர்வமானவைகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

படைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து புதுமைகள்

படைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து புதுமைகள்

பிராண்டுகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வடிவமைப்பின் அடிப்படையிலும் எந்த அளவிற்கு புதுமையை கொடுக்க முடியுமோ அதற்கும் மேலான அளவு முயற்சித்து வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லிமிடெட் எடிஷன் பதிப்பு ஸ்மார்ட்போன்களை உருவாக்க பல பிராண்டுகளும் திரைப்பட படைப்பாளர்களுடன் கூட்டு சேர்கின்றன. அதன்படி உருவாக்கப்பட்டது தான் சூப்பர் ஹீரோஸ் ஸ்மார்ட்போன்கள்.

Superhero Limited-Edition ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

Superhero Limited-Edition ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

சூப்பர் ஹீரோஸ் ஸ்மார்ட்போன்கள் எந்த திரைப்பட படைப்பாளர்களுடன் கூட்டு சேருகிறதோ, அந்த கதாபாத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு புதுமைகளை தங்களது ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது. இந்தியாவில் வாங்க கிடைக்கும் சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொகுத்து வழங்கியுள்ளோம். Superhero Limited-Edition ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் Realme, OnePlus, Samsung போன்ற முன்னணி நிறுவன பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

விருந்தளிக்கும் வகையில் சுவாரஸ்மான சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன்கள்

விருந்தளிக்கும் வகையில் சுவாரஸ்மான சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன்கள்

இந்தியாவில் பல சுவாரஸ்மான சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் கிடைக்கின்றன. ரியல்மி நிறுவனத்தில் இரண்டு லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. அதில் ஒன்று Realme GT Neo 2 Dragon Ball Z மற்றொன்று Realme GT Neo3 Thor Love and Thunder ஆகும். இது இரண்டுமே பேருக்கு ஏற்ப சக்திவாய்ந்த குறிப்பிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

அதேபோல் சூப்பர் ஹீரோ லிமிடெட்-எடிஷன் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் OPPO F11 Pro Avengers Limited எடிஷன் மற்றும் Oppo Reno Ace Gundam 40th Anniversary Edition இருக்கிறது. ஒப்போ ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இருக்கிறது.

ஸ்டார் வார்ஸ் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஸ்பெஷல்

ஸ்டார் வார்ஸ் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஸ்பெஷல்

இதுமட்டுமில்லை சூப்பர் ஹீரோ லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் முன்னணி நிறுவனங்களும் இருக்கிறது. அதன்படி சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ப்ளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன், OnePlus 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன், iQOO 3 5G டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஸ்பெஷல் எடிஷன் என பல ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இருக்கிறது.

Realme GT Neo 3 (150W - Thor Limited Edition)

Realme GT Neo 3 (150W - Thor Limited Edition)

Realme GT Neo 3 (150W - Thor Limited Edition) ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

6.7 இன்ச் முழு எச்டி+ 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஆக்டோ கோர் டைமன்சிட்டி 8100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கிறது.

ரியல்மி யுஐ 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12, டூயல் சிம், 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா, 16 எம்பி முன்புற செல்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் கிடைக்கிறது. இதன் வடிவமைப்பு, வால்பேப்பர் தீம், ரிங்டோன் என அனைத்தும் தோர் திரைப்படத்தை சார்ந்து இருக்கிறது.

Realme GT Neo 2 Dragon Ball Z Special Edition

Realme GT Neo 2 Dragon Ball Z Special Edition

 • 6.62 இன்ச் முழு எச்டி+ 120ஹெர்ட்ஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே
 • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
 • 8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • ரியல்மி யுஐ 2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11
 • டூயல் சிம்
 • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
 • 16 எம்பி செல்பி கேமரா
 • இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட்
 • 5000 எம்ஏஎச் பேட்டரி
 • OPPO F11 Pro Avengers Limited Edition

  OPPO F11 Pro Avengers Limited Edition

  6.5 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே

  ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட்

  6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

  ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ்

  ஹைப்ரிட் டூயல் சிம்

  48 எம்பி + 5 எம்பி

  16 எம்பி செல்பி கேமரா

  டூயல் 4ஜி வோல்ட்இ

  4000 எம்ஏஎச் பேட்டரி

  Samsung Galaxy Note 10+ Plus Star Wars Special Edition

  Samsung Galaxy Note 10+ Plus Star Wars Special Edition

  • 6.8 இன்ச் க்யூஎச்டி+ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
  • ஆக்டோ கோர் எக்ஸினோஸ் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
  • 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • 12 எம்பி + 12 எம்பி + 16 எம்பி + VGA டெப்த் விஷன் ரியர் கேமரா
  • 10 எம்பி செல்பி கேமரா
  • ஐபி 68 சான்றிதழ் பாதுகாப்பு
  • 45 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு, 4300 எம்ஏஎச் பேட்டரி
  • OnePlus 5T Star Wars Edition

   OnePlus 5T Star Wars Edition

   • 6.01 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
   • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
   • 6 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
   • ஆண்ட்ராய்டு 7.1.1 ஆக்ஸிஜன் ஓஎஸ்
   • டூயல் சிம் (நானோ + நானோ)
   • 16 எம்பி + 20 எம்பி கேமரா
   • 16 எம்பி செல்பி கேமரா
   • 4ஜி வோல்ட் இ
   • 3300 எம்ஏஎச் பேட்டரி
   • OnePlus 6 x Marvel Avengers Limited Edition

    OnePlus 6 x Marvel Avengers Limited Edition

    • 6.28 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
    • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    • 6 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்டு 8.1
    • டூயல் சிம்
    • 16 எம்பி + 20 எம்பி ரியர் கேமரா
    • 16 எம்பி செல்பி கேமரா
    • 4ஜி வோல்ட் இ
    • 3300 எம்ஏஎச் பேட்டரி
    • iQOO 3 5G Transformers Limited Edition

     iQOO 3 5G Transformers Limited Edition

     • 6.44 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே
     • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
     • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
     • ஐக்யூ யூஐ 1.0 ஆண்ட்ராய்டு 10
     • டூயல் சிம் (நானோ + நானோ)
     • 48 எம்பி + 13 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
     • 16 எம்பி செல்பி கேமரா
     • இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • 4400 எம்ஏஎச் பேட்டரி
     • OPPO Reno Ace Gundam 40th Anniversary Edition

      OPPO Reno Ace Gundam 40th Anniversary Edition

      • 6.5 இன்ச் முழு எச்டி+ அமோலெட் எச்டிஆர் டிஸ்ப்ளே
      • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 855 ப்ளஸ் சிப்செட்
      • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு 9.0
      • டூயல் சிம்
      • 48 எம்பி + 8 எம்பி + 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
      • 16 எம்பி செல்பி கேமரா
      • டூயல் 4ஜி வோல்ட் இ
      • 4000 எம்ஏஎச் பேட்டரி
      • Infinix Note 12 Turbo Doctor Strange Edition

       Infinix Note 12 Turbo Doctor Strange Edition

       • 6.7 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே
       • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட்
       • 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
       • டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
       • ஆண்ட்ராய்டு 11
       • 50 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா
       • 16 எம்பி செல்பி கேமரா
       • 5000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Super Heros Limited Edition Smartphones List: Oneplus, Oppo, Samsung, Realme

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X