Sundar Pichai முக அங்கீகார சேவைக்கு தடை வேண்டும்! பதிலடி கொடுத்த மைக்ரோசாப்ட் ஸ்மித்!

|

முக அங்கீகாரம் மனிதக்குலத்திற்கு எவ்வளவு தீங்கானது அல்லது பாதுகாப்பில்லாதது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இது பயனரின் தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், மனிதாபிமானமற்ற நோக்கங்களுக்காகவும், குற்ற செயல்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம் என்பதனால் இதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட வேண்டுமென்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

முக அங்கீகார சேவைக்கு தற்காலிகமாகத் தடை வேண்டும்

முக அங்கீகார சேவைக்கு தற்காலிகமாகத் தடை வேண்டும்

திங்களன்று டேங்க் ப்ரூகல் ஏற்பாடு செய்த பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை முக அங்கீகாரம் குறித்து சில தகவல்களைக் கூறினார். முக அங்கீகாரம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தை அவர் ஆதரித்தார், இது தீங்கு விளைவிக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று அழுத்தமாக குறிப்பிட்டார் .

அரசாங்க விதிமுறை மற்றும் கட்டமைப்பு

அரசாங்க விதிமுறை மற்றும் கட்டமைப்பு

முக அங்கீகார சேவைக்கான அரசாங்க விதிமுறைகளும், அதற்கான கட்டமைப்பை விரைவில் சமாளித்து வழங்குவது முக்கியம் என்று அவர் கூறினார். அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது, ராய்ட்டர்ஸ் முதலில் அறிவித்தபடி, தனியுரிமை மற்றும் தரவு உரிமைகள் குறித்த தற்போதைய விதிமுறைகளை வலுப்படுத்துகிறது.

MyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.!MyJio App: சத்தமின்றி ஜியோ பார்த்த வேலை: கடுப்பில் Google Pay & PhonePe.!

பொது இடங்களில் முக அங்கீகாரம் தற்காலிக தடை

பொது இடங்களில் முக அங்கீகாரம் தற்காலிக தடை

தொழில்நுட்பங்களில் முறைகேடுகளுக்கு எதிராக முக அங்கீகார சேவை தன்னைத் தயார்படுத்திக் கொள்ள அவகாசம் அளித்து, சுமார் ஐந்து வருடங்கள் வரை பொது இடங்களில் முக அங்கீகாரம் தொழில்நுட்பத்திற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

சுந்தர் பிச்சையை எதிர்த்து பதில்கொடுத்த பிராண்ட் ஸ்மித்

சுந்தர் பிச்சையை எதிர்த்து பதில்கொடுத்த பிராண்ட் ஸ்மித்

இருப்பினும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிராண்ட் ஸ்மித், பிச்சையின் அறிக்கையை எதிர்த்து பதில்கொடுத்தார். பிராண்ட் ஸ்மித்தின் கூற்றுப்படி, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு உதவுகிறது.

20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்!பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்த முக அங்கீகார தொழில்நுட்பம்

காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்த முக அங்கீகார தொழில்நுட்பம்

குறிப்பாக காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முக அங்கீகார தொழில்நுட்பம் பெரிதும் உதவுவது போன்று என்று அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மக்களின் தனியுரிமை பாதுகாப்பிற்கு வேறு மாற்று வழி நிச்சயம் இருக்குமென்றும் அதை நாம் விரைவில் செய்தாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கான தீர்வு தடை செய்வதில் இல்லை - ஸ்மித்

இதற்கான தீர்வு தடை செய்வதில் இல்லை - ஸ்மித்

மக்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்போம் என்று சொல்வதில் நான் தயக்கம் காட்டுகிறேன், பல குடும்பங்கள் இந்த சேவையின் உதவியால் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். உண்மையில் இதற்கான தீர்வு தடை செய்வதில் இல்லை என்றும், அதற்குப் பதிலாக ஒரு நியாயமான மாற்றாகப் பாதுகாப்பை மேம்படுத்துங்கள் என்று பிராண்ட் ஸ்மித் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai Wants To Ban Face Recognition Service Microsoft Brand Smith Retaliated : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X