Just In
- 3 hrs ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 4 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 5 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 6 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- News
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தீவிரம்: எஸ்டேட் மேனேஜரின் நண்பர் உட்பட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!
- Sports
உம்ரான் மாலிக்கை சுற்றிய மத சர்ச்சை.. ஹோட்டல் வீடியோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆனது??
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Movies
Leo: தளபதி 67ல் நடிக்க ஆர்வம் காட்டிய விஷால்... ஸ்கெட்ச் போட்டு ரிஜக்ட் செய்த பிரபலம்..?
- Finance
அதானி பங்குகள் சரிவு.. எல்லாம் 'அவங்க' பாத்துப்பாங்க.. நிர்மலா சீதாராமன் பதில்..!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மன அழுத்தத்தைக் குறைக்க இப்படியொரு வழி இருக்கா? வைரலாகும் சுந்தர் பிச்சையின் பேட்டி.!
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்று வைரலாக பரவி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதாவது உலகில் பல்வேறு மக்கள் காலையில் சீக்கிரம் எழுந்து யோகா அல்லது தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆனால் சிலர் இரவில் நேரம் கழித்தும் தூங்கி காலையில் தாமதமாக எழும்பழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.

குறிப்பாக உலகின் முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் காலையில் 4 அல்லது 5 மணிக்கு எழும் வழக்கத்தை கொண்டு இருக்கும் நிலையில் சுந்தர் பிச்சை 6 அல்லது 7 மணிக்கு தான் எழுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுந்தர் பிச்சை மன அழுத்தத்தைக் குறைக்க ஒரு வித்தியாசமான பழக்கத்தை கொண்டு உள்ளதை தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி சமீபத்தில் சுந்தர் பிச்சை வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டியில் எனக்குத் தியானம் செய்யும் வழக்கம் இல்லை என்றும்,
குறிப்பாக தியானம் செய்வது எனக்கு மிகவும் கடினம் என்பதால் அவ்வப்போது யூடியூப் தளத்தில் உள்ள 10, 20 அல்லது 30 நிமிட NSDR போட்காஸ்ட் வீடியோவை பயன்படுத்தி ஒய்வு எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

அதாவது NSDR என்பது என்னவென்றால் Non-Sleep Deep Rest ஆகும். இந்த பெயரை ஸ்டான் போர்ட் நரம்பியல் பேராசிரியர் ஆண்ட்ரூஹூபர்மேன் என்பவர் உருவாக்கினார். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது மிகவும் அமைதியான நிலையை சுயமாகத் தூண்டுவது மற்றும்
நம் கவனத்தை ஏதோவொன்றின் மீது செலுத்துவதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக NSDR மூலம் மக்கள் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும், பதட்டத்தை குறைக்கவும், மன அழுத்தம் குறைக்கவும், வலியை குறைக்கவும் உதவும் என ஹூபர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் சுந்தர் பிச்சையின் இந்த பேட்டிக்கு பின்பு யூடியூப் மற்றும் கூகுள் தளத்தில் NSDR குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முறை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என பலர் நம்புகின்றனர்.

அதேபோல் உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் உக்ரைனில் கூகுள் மேப்ஸ் லைவ் டிராஃபிக் டேட்டாவை கூகுள் தற்காலிமாக முடக்கி உள்ளது. நாட்டில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் சில நாட்களுக்கு முன்பு உக்ரைனில் தற்காலிமாக சில கூகுள் மேப்ஸ் கருவிகளை முடக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்திய பகுதிகளின் அதிகாரிகள் உடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள உள்ளூர் சமூகங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைனில் கூகுள் மேப்ஸ் டிராஃபிக் லேயரையும், அங்காடிகள் மற்றும் உணவகங்கள் போன்ற நெரிசலான இடங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து நேரடித் தகவலை உலகளவில் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆல்பாபெட் இன்க்-ன் கூகுள் உக்ரைனுக்கான சில கூகுள் மேப்ஸ் கருவிகளை தற்காலிமாக முடக்கியதை உறுதிப்படுத்தியது.
News Source: dnaindia.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470