தன்னலம் கருதாது உழைக்கும் மருத்துவர்களுக்கு உதவி செய்வது எப்படி? சுந்தர் பிச்சை

|

இதுவரை உலகம் பார்த்திராத ஒரு புதுவித நோயான ’கோவிட் 19’ என்ற புதுவித வைரஸால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஒரு உயிரியல் பேரழிவை எதிர்க்கும் உண்மையான ஹீரோக்களான அன்பு என்ற புதிய மருந்து பிறந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதார நிபுணர்கள் மீது தற்போது அன்பு வந்துள்ளது.

ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

இதனை சமீபத்தில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்திருந்தார். சுந்தர் பிச்சையை பொறுத்தவரை, ‘சுகாதார நிபுணர்களுக்கு எவ்வாறு உதவுவது' என்பது குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியதாக தெரிவித்துள்ளார்.

கோவிட் 19

கோவிட் 19

உலகில் மிக வேகமாக பரவி வரும் 'கோவிட் 19'என்ற வைரஸூக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்பதே அடிப்படை உணர்வு.

Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?Xiaomi அட்டகாச அறிவிப்பு: ரூ.10,600-க்கு அறிமுகமாகிறதா பக்கா 5G போன்?

சுகாதார வல்லுநர்கள்

சுகாதார வல்லுநர்கள்

மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள் தான் 'கோவிட் 19'என்ற வைரஸூக்கு எதிரான போரிடும் முதல் நபர்கள். 'கோவிட் 19' பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும், கவனித்துக்கொள்ளவும் அவர்கள் களத்தில் நாள் முழுவதும் இரவுபகலாக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

இந்த பணியில் அவர்கள் இருக்கும்போது கொரோனா வைரஸ் அவர்களையும் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். ஆகவே, மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையையே பணயம் வைத்துள்ளார்கள் என்பதுதான் உண்மை

இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் உலகமே இந்த பணியை பார்த்து ஆச்சரியப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தங்களுடைய பங்களிப்பை செய்து அவர்களுக்கு உதவ தங்களால் ஆன முயற்சியைச் செய்து வருகிறார்கள். சுகாதார நிபுணர்களுக்கு உதவ புதுப்புது வழிகளை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். மாஸ்குகளை உருவாக்குதல், வென்டிலேட்டர்களை இரட்டிப்பாக்க உதவுவது போன்ற ஒருசில உதவிகளை அவர்கள் செய்து வருகின்றனர்,

நிதி பங்களிப்பும் செய்கிறார்கள்

நிதி பங்களிப்பும் செய்கிறார்கள்

ஒருசிலர் நிதி பங்களிப்பும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் சுகாதார குழுக்களுக்கு உணவு ஆர்டர்கள் செய்து உதவி செய்கின்றனர். இன்னும் டாக்டர்களின் வீடுகள், குழந்தைகள், செல்லப்பிராணிகள் மற்றும் தோட்டங்களை தங்கள் வீடுபோல் கவனித்துக்கொள்கிறார்கள்.

உதவி செய்து வருகின்றனர்

மேலும் ஒருசிலர் சுகாதார உள்கட்டமைப்புக்கு உதவி செய்து வருகின்றனர். மேலும் சிலர் சைபர் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், இதுவரை கிடைத்த எந்தவொரு பெரிய பிரபலத்திற்கு கிடைக்காத அன்பு மற்றும் பிரியத்தை சுகாதார வல்லுநர்கள் உலகெங்கிலும் இருந்து பெற்று வருகிறார்கள், இந்த அன்பு அனைத்திற்கும் அவர்கள் மிகவும் தகுதியானர்கள்

ஆனால் மிக முக்கியமாக

எனவே உலகமே 'கோவிட் 19'க்கு எதிராக போராடி வரும் நிலையில் நீங்கள் நல்ல வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள், உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவ உங்களால் முடிந்ததை செய்யுங்கள். நீங்கள் விரும்பும் வழியில் அவர்களுக்கு உதவுங்கள், ஆனால் மிக முக்கியமாக,'கோவிட் 19' பரவுவதை நிறுத்த வீட்டிலேயே இருங்கள்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai Salutes Health Workers, Says 'How To Help Doctors' Searches Growing Worldwide: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X