Just In
- 11 min ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 2 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 2 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 3 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News
ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?
- Movies
மேலாடை இல்லாமல் படுகவர்ச்சி உடையில் ஜான்வி கபூர்.. பார்க்க பார்க்க திகட்டாத அழகு!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகள்! கிரிக்கெட் வீரரா சார் நீங்க?
உலக முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்க-அமெரிக்க மனிதரான ஜார்ஜ் ஃபிலாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதைக் கண்ட இந்தியர்கள் சிலர், வெளிவேஷம் போடாதீர்கள் என்று கொந்தளிக்கத் துவங்கிவிட்டனர். சுந்தர் பிச்சை பற்றி வெளிவராத சில உண்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை எந்த ஊர் தெரியுமா?
அல்பாபெட் மற்றும் கூகிள் நிறுவனத்தின் CEO-வாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்திருக்கிறார். இவருடைய அம்மா-லட்சுமி மற்றும் அப்பா-ரகுநாத பிச்சை இருவரும் இவரை நல்ல பள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்துள்ளனர். சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு என இவரின் பள்ளிப் பருவத்தைத் தமிழ்நாட்டிலேயே முடித்திருக்கிறார்.

பெரிதும் வெளிவராத சில தகவல்கள்
ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல்,ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம், 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ- வாக இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். ஆனால், இவர் பற்றி பெரிதும் வெளிவராத சில தகவல்களைத் தேடி ஆராய்ந்த போது தான், பல உண்மைகள் தெரியவந்துள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

இவருடைய முதல் அலுவலக பணி கூகிளில் துவங்கவில்லை
கூகுள் நிறுவனத்தில் 2004 ஆம் ஆண்டில் இணைவதற்கு முன்பு, இவர் மெக்கின்ஸி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் பணியை செய்துவந்திருக்கிறார். பின்பு கூகிளில் சேர்ந்து லார்ரி பேஜ் கவனத்தை ஈர்த்துள்ளார். கூகிள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலாவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

இவரின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம்,கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு அதிகம் இருந்து வருகிறது. இவரின் சம்பலத்தை பற்றிக் கூறவேண்டும் என்றால், இவருடைய வருமானம் ஒரு வருடத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர்களுக்கும். அதாவது இந்திய மதிப்பின் படி 200 மில்லியன் டாலர் என்பது ரூ.12838100000.00 ஆகும்.

இரு அறைகளில் துவங்கிய வாழ்க்கை! இப்போது இவர் இருக்கும் வீடு எப்படியானது?
இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது சுந்தர் பிச்சை வசிக்கும் வீடானது லாஸ் அல்டாஸில் அமைந்துள்ளது. சாதாரண இல்லம் போல இல்லாமல், பல அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அதீத வசதியுடன் மொத்தம் 5 படுக்கை அறையைக் கொண்ட வீடாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் டென்னீஸ் கோர்ட் மற்றும் குழந்தைகளுக்கான மினியேச்சர் கால்பந்து மைதானமும் உள்ளது.

ஆண்ட்ராய்டுக்கு இனிப்பு பெயர்
தற்சமயம் கூகுள் பங்குகளின் உயர்வால் இவரது சம்பளம் 2,500 கோடியைத் தொட்டுள்ளது என்று தெரிகிறது. மேலும் அண்ட்ராய்டு ஒஎஸ் இந்திய மிட்டாய் பெயர் இடம்பெறுமா எனக்கேட்டபோது அண்ட்ராய்டு ஒஎஸ் இன் அடுத்த பதிப்பிற்கான இனிப்பு (இந்தியர்கள் உட்பட) பெயர்கள் மற்றும் பொதுப் பெயரை புதிய பெயரைத் தீர்மானிக்கலாம் எனக் கூறினார். பெரும்பாலும் அனைத்து ஒஎஸ் பெயர் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் தான் அதாவது, கிட்-கேட், ஜெல்லி பீன், மார்ஷ்மெல்லோ போன்றவை.

வாட்ஸ்அப்-ஐ விற்க வேண்டாம் அறிவுரை சொன்ன பிச்சை
முதலில் கூகுளின் ஆண்ட்ராய்டு துறை பல செக்டார்களில் இயங்கி வந்தது. ஆன்டி ரூபினிற்க்கு பின் இவருக்கு இந்த ஆண்ட்ராய்டு துறை அளிக்கப்பட்டவுடன் இதன் தோற்றத்தை தலைகீழாக மாற்றி இதிலும் வெற்றி இவருக்கே என்று தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். இதைக் கூகுளின் free flowing ecosystemஆக மாற்றிய பெருமையும் இவருக்கே சேரும்.

லாரி பேஜின் வலது கரம் இவர் தானா?
சிலகாலம் லாரி பேஜின் வலது கரமாக இருந்த பிச்சை, வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கும், வாட்ஸ்ஆப்பை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்கவேண்டாம் என சமாதானப்படுத்த முயன்றார். நெஸ்ட் நிறுவனத்தின் டோனி பெட்டலுடன் பேசி, தனது நிறுவனத்தைக் கூகுளுடன் இணைக்க லாரி பேஜீக்கு உதவியதும் சுந்தர் பிச்சை தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு மிகப்பெரிய உண்மை.

விசித்திரமாக தீர்வு காணும் பழக்கம்
பழக்கம் ஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் மீட்டிங்கில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம் திரும்பி உள்ளே வரும் போது பிரச்சனைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.

தனித்துவமான 'இந்த' திறமை இவரிடம் உள்ளது
இவரது குடும்பம் முதலில் டெலிபோன் வாங்கிய போது இவரது ஆர்வம் மேலோங்கியது. அப்பொழுது இவருக்கு 12 வயது. ரோட்டரி இவரது எண்கள் ஆற்றலை ஊக்கப்படுத்தியது. இவர் டையல் செய்யும் எண்களை இவர் நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு இருக்கிறது.

முதல் மொபைல் எப்பொழுது வாங்கினார்? இப்போது இவரிடம் எத்தனை மொபைல் உள்ளது?
சுந்தர் பிச்சை 1995 ஆம் ஆண்டில் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ஆம் ஆண்டில் தனது முதல் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்கியுள்ளார். தற்போது அவர் 20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்

கிரிக்கெட் அணியின் தலைவராக சுந்தர் பிச்சை
இந்தியாவின் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து இளங்கலை படிப்பில் சேருவதற்கு முன்னர் பிச்சை தனது உயர்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்திருக்கிறார். கிரிக்கெட் பிடிக்கும், கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

தலைக்கு 20-20ல இன்ட்ரெஸ்ட் இல்லை
மேலும் கல்லூரி காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை என்றும் சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470