கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர இந்தத் தகுதி இருந்தால் போதும்.. சுந்தர் பிச்சை கூறியது இதுதான்..
உலகம் முழுவதும் கூகுள் (Google) நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர விரும்புபவர்களிடம், தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை (Sundar Pichai) விளக்கமளித்து உள்ளார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது கூகுள் நிறுவனம் உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக இந்த கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்வது என்பது தற்போது பலரின் ஆசை மற்றும் லட்சியமாகவும் உள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனத்தின் வேலைக்குச் சேர்வதற்கான தகுதி குறித்து அந்நிறுவனத்தில் சிஇஒ சுந்தர் பிச்சை பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால், கூகுள் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் மென்பொறியளர்களை எதிர்பார்க்கிறது என்றும், கூகுள் நிறுவனத்தின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும், கொடுக்கப்படும் புதிய சாவல்களை ஏற்றுக் கொண்டு அதில் பாடம் படித்து முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதேபோல் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இது அவர்களின் சமூக உணர்வை உருவாக்கவும், புதிய சிந்தனைத்திறனைத் தூண்டவும் உதவும். பின்பு கூகுள் வழங்கும் பணியாணைகளை 90 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்கின்றனர். இது வேலைச்சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய வலிமையைக் காட்டுகிறது. குறிப்பாகத் தொழில்நுட்ப துறையில் ஆட்கள் தேர்வு குறைந்துவிட்ட நிலையிலும், கூகுளில் பணிபெறுவது என்பது மதிப்புமிக்க சாதனை தான்.
மேலும் ஆரம்பக் கட்ட தொழில்நுட்ப பணிகளுக்குப் போட்டிகள் கடுமையாக இருக்கிறது, எனவே அந்தப்பணிகளுக்குச் சேர விரும்பும் நபர்கள், தங்களை வேறுபடுத்திக் காட்டுபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா 2024 (Google for India 2024) நிகழ்வில் சமூக கட்டமைப்பு, வணிகம் மற்றும் எளிதில் அணுகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட பல அம்சங்களை வெளியிட்டது கூகுள் நிறுவனம். குறிப்பாக இதில் கூகுள் மேப் மற்றும் கூகுள் பே போன்றவற்றில் சில முக்கிய அம்சங்களைக் கொண்டுவந்தது கூகுள் நிறுவனம். இப்போது அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதன்படி கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் ஜெமினி உதவியுடன் ஒரு இடத்தை தேடும்போது, அந்த இடத்தைப் பற்றிய லட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட மதிப்புரைகளைப் பகுப்பாய்வு செய்து சுருக்கமான விளக்கத்தை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சங்கள் இந்த மாதம் இறுதிக்குள் கூகுள் மேப் செயலியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலியில் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் பிறரின் அனுபவம் மற்றும் குறிப்பிட்ட ஒரு பொருள்கள் குறித்து தேடினால், நுண்ணறிவு படங்களை ஆராய்ந்து தகுந்த பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் வெளிவரும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மழை வெள்ளம் மற்றும் மூடுப் பனிச் சாலைகளைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் கூகுள் மேப்ஸ் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட சாலைகளைப் பார்ப்பதற்கு மட்டுமின்றி, கூகுள் மேப் செயலியில் பாதிக்கப்பட்ட சாலை குறித்த எச்சரிக்கையைப் பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பே (Google Pay) செயலியில் ஒரு புதிய சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது கூகுள் பே செயலியில் கடன் பெறுவதற்கு நிதி நிறுவனங்களை அணுகும் முறை விரிவு படுத்தப்படுகிறது. அதன்படி ஆதித்யா பிர்லா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் செயல்பட உள்ளது. மேலும் ஜெமினி மூலம் கடன் பெறுதற்கான வழிகாட்டுதல்களும் வழங்க இந்த ஆப் மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








