ஒரே ஓவரில் அதிக ரன்கள்.. Google பண்ணச் சொன்ன பும்ரா.. திடீரென பதில் அளித்த சுந்தர் பிச்சை.. இதோ விவரம்..
கூகுள் (google) நிறுவனம் மக்களுக்குப் பயனுள்ள வகையில் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த பிரபலமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார் சுந்தர் பிச்சை (google ceo sundar pichai). இந்நிலையில் சுந்தர் பிச்சை எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட கருத்து ஒன்று இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. குறிப்பாக இந்த இரண்டு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.

மேலும் இந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்பு செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்குப் பதில் அளித்து வந்தார். அப்போது இந்திய அணி பேட்டிங் குறித்து கேள்விக்குப் பதில் அளித்த ஜஸ்பிரித் பும்ரா, நீங்கள் என் பேட்டிங் திறமையைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்தது நான் தான்.
இதுகுறித்து தெரிந்து கொள்ள நீங்கள் கூகுளைப் பயன்படுத்தலாம். நகைச்சுவையை விட்டு விடுங்கள் என்று பதில் அளித்தார். இந்நிலையில் கூகுள் தேடல் குறித்த பும்ராவின் கருத்துக்குக் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது சுந்தர் பிச்சை எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ஜஸ்பிரித் பும்ரா என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்குப் பதில் அளித்த எலான் மஸ்க் அருமை என்றும் பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய வீரர் பும்ராவின் கருத்துக்கு சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதில் அளித்தது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்திருக்கிறார். இவருடைய அம்மா-லட்சுமி மற்றும் அப்பா-ரகுநாத பிச்சை. குறிப்பாக சென்னை ஜவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு, வனவாணி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு என இவரின் பள்ளிப் பருவத்தைத் தமிழ்நாட்டிலேயே முடித்திருக்கிறார்.
மேலும் இவர் ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளார். 2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை. இப்போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ- வாக இருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான். அதேபோல் சுந்தர் பிச்சைக்கு கிரிக்கெட் பிடிக்கும், கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் பிடிக்கும் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








