தேர்வில் "0" மதிப்பெண் எடுத்த பெண்: சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்- என்ன சொன்னார் தெரியுமா?

|

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் போதுமான பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என தெரிவிப்பார். இருப்பினும் பாகுபாட்டை எதிர்த்து போராடியவர்கள் மற்றும் கூட்டத்திலிருந்து விலகி தனித்து நிற்பவர்கள் என பலர் உள்ளதாகவும் கூறுவார்.

அனைவருக்குமான கூகுளை தருவதற்கு முயற்சிக்கிறோம்

அனைவருக்குமான கூகுளை தருவதற்கு முயற்சிக்கிறோம்

கூகிளில், உலகில் உள்ள அனைவருக்குமான தயாரிப்புகளை உருவாக்குவதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம், அதைச் சிறப்பாகச் செய்ய நாங்கள் முயற்சிக்கிறோம் எனவும் உலகத்தை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு உள்நாட்டில் உள்ளவர்கள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிப்பார்.

பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்

பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும்

அதோடு, தொழில்நுட்பத்தில் பங்கேற்கவும், குறியீட்டை உருவாக்கவதிலும், புதுமைப்படுத்துவது உள்ளிட்டவற்றை கற்றுக் கொள்வதற்கு பெண்கள் ஆர்வம் காட்டவேண்டும் எனவும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் பெண்கள் அதிமகமான வாய்ப்பை பெறுவது முக்கியம் எனவும் தெரிவித்திருந்தார்.

"பின்விளைவு படுமோசமா இருக்கும்": கூகுளில் இதையெல்லாம் செய்யாதிங்க.,

0 மதிப்பெண் எடுத்த பெண்:

0 மதிப்பெண் எடுத்த பெண்:

இந்த நிலையில், நவம்பர் 21 (நேற்று) சர்பைனா நான்ஸி என்ற பெண் டுவிட்டரில் நிகழ்வு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் நான்கு வருடங்களுக்கு முன்பு தான் குவாண்டம் இயற்பியல் படிப்பில் 0 மதிப்பெண் எடுத்ததாகவும், அதன்பின் அச்சத்துடன் தனது ஆசிரியர் சந்தித்து இயற்பியல் துறையில் இருந்து மாறிக் கொள்வதாகவும் அறிவித்தேன் எனவும் தெரிவித்தார். அதோடு, தற்போது ஆஸ்டோ இயற்பியல் துறையில் சிறந்த இடத்தை பிடித்ததாகவும் பி.ஹெச்டி முடித்து அதே துறையில் இரண்டு ஆவணங்களை வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

லைக்குகளை அள்ளிய பெண்ணின் டுவிட்

லைக்குகளை அள்ளிய பெண்ணின் டுவிட்

இந்த பதிவு முதலில் கவணிக்காமல் இருந்தாலும் அதன்பின் 58 ஆயிரம் லைக்குகளையும், 10 ஆயிரம் ரீடுவிட்டுகளையும் பெற்றது. நான்ஸியின் பதிவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் ரீடுவிட் செய்துள்ளார்.

சுந்தர்பிச்சை பாராட்டு

சுந்தர்பிச்சை பாராட்டு

அதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சரியாக சொன்னீர்கள் இந்த பதிவு சிறந்த முன்னுதரணமாக உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். சுந்தர் பிச்சையின் பதிவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதில் நான்ஸி, நன்றி தெரிவித்துள்ளார்.

அன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புஅன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Sundar Pichai praises woman who scored 0 in quantum physics exam

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X