அடடே சுந்தர் பிச்சைக்கு இந்த நிலைமையா? சரிவை கண்ட சொத்து மதிப்பு: காரணம் என்ன?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

அதேபோல் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறார் சுந்தர் பிச்சை. இந்நிலையில் சுந்தர் பிச்சை தனது சொத்து மதிப்பில் 20 சதவீதம் இழந்துள்ளார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் டெக் நிறுவனங்கள் பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக வெளிநாட்டில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் சொத்து மதிப்பு பாதிப்பு எதிர்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

வீட்டை தியேட்டரா மாற்றும் நேரம்.. ரூ.40,999 SmartTV வெறும் ரூ.16,990 மட்டுமே! சரியான வாய்ப்பு..வீட்டை தியேட்டரா மாற்றும் நேரம்.. ரூ.40,999 SmartTV வெறும் ரூ.16,990 மட்டுமே! சரியான வாய்ப்பு..

20 சதவீதம்

20 சதவீதம்

மேலும் சமீபத்தில் வெளிவந்த IFL Hurun India Rich List 2022 அறிக்கையின்படி, கடந்த ஒரு ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 20 சதவீதம் சரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவரின் சொத்து மதிப்பு ₹5,300 கோடியாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு தனது சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கை இழந்துள்ளார்.

SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

 சுந்தர் பிச்சை

இருந்தபோதிலும் IIFL Hurun India Rich List 2022 பட்டியலில் டாப் 10 பணக்கார தொழில்முறை மேலாளர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?

தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரி

அதேபோல் அமெரிக்க நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வருடத்தில் சொத்து மதிப்பை இழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது.

சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!

இந்திய தூதரகத்திற்கு வருகை

இந்திய தூதரகத்திற்கு வருகை

மேலும் சமீபத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் முதல்முறையாக இந்திய தூதரகத்திற்கு வருகை தந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பல வருடங்களாக பணிபுரிந்து வரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகத்திற்குச் சென்று தரன்ஜித் சிங் சந்து அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

OnePlus 11 Pro 5G அறிமுகத்திற்கு ரெடி.! அடேங்கப்பா எல்லாமே டாப் கிளாஸ் ஸ்பெக்ஸ் போலயே.!OnePlus 11 Pro 5G அறிமுகத்திற்கு ரெடி.! அடேங்கப்பா எல்லாமே டாப் கிளாஸ் ஸ்பெக்ஸ் போலயே.!

தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடுகள்

தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடுகள்

இந்த சந்திப்பில் இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்கள், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் சுந்தர் பிச்சை. இந்தியத் தூதரகத்திற்கு விஜயம் செய்த பின்னர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த உரையாடலுக்கு இந்திய தூதர் சந்துவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுந்தர் பிச்சை தூதரகத்திற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

ரூ.10,000 கீழ் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் பட்டியல்.! ஒவ்வொன்னும் ஒரு ரகம்.!ரூ.10,000 கீழ் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் பட்டியல்.! ஒவ்வொன்னும் ஒரு ரகம்.!

இந்திய தூதர்

இந்திய தூதர்

இந்த முக்கியச் சந்திப்பு குறித்து இந்திய தூதர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய தூதரகத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை விரிவுபடுத்துவது பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

இந்தியாவில் அதிக முதலீடு

கூகுள் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளது எனவும், இளைஞர்களுக்கு கூகுள் அளித்து வரும் பயிற்சி போன்ற பல சேவைகள் பாராட்டத்தக்கது எனவும் இந்திய தூதர் சந்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai last year lost 20 percent wealth: What's the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X