கிரிக்கெட் களத்தில் இறங்கிய சுந்தர் பிச்சை.!!

Written By:

உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களில் ஒருவராக இருந்த போதும், தனது இந்திய பயணத்தின் போது கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கிரிக்கெட் விளையாட மறுக்க வில்லை என்றே கூற வேண்டும். இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை விரிவாக விவரித்ததோடு தனது சிறிய ஆசையையும் நிறைவேற்றி கொண்டார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிரிக்கெட்

கிரிக்கெட்

இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை இந்தியா கேட் பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களை கண்டதும் தானும் கிரிக்கெட் விளையாட தீர்மானித்தார்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் விசிறியான சுந்தர் பிச்சை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.

சச்சின்

சச்சின்

துவக்கத்தில் சுனில் கவாஸ்கர் விசிறியாக இருந்த சுந்தர் அதன் பின் சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது சச்சினையும் பிடிக்கும் என தெரிவித்தார்.

டெஸ்ட்

டெஸ்ட்

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தனக்கு பிடிக்கும் என்றும் 20 ஓவர் போட்டியில் தனக்கு ஆர்வம் கிடையாது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

சிறு வயதில் தான் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்திருந்ததையும் சுந்தர் பிச்சை நினைவு கூர்ந்தார்.

புகைப்படம்

புகைப்படம்

தனது அனைத்து பணிகளுக்கும் சிறிய இடைவெளியளித்து கிரிக்கெட் விளையாடிய சுந்தர் தன்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்களுடன் புகைப்படம் எடுக்கவும் தவறவில்லை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Sundar Pichai Joins A Game Of Cricket At India Gate. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்