Just In
- 13 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 16 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 16 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 17 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Google ஊழியர்கள் மீது சுந்தர் பிச்சை கடுப்பு.! சிலர் கடினமாக உழைக்கவில்லையா?
சில நிறுவனங்களில் நீங்கள் எவ்வளவு வேலை செய்தாலும் முதலாளிகள் திருப்தி அடைவதில்லை என்பதே உண்மை. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (Sundar Pichai) மட்டும் இதற்கென்ன விதிவிலக்கா? அவரும் அப்படி தான். உற்பத்தித்திறனில் அதிக கவனம் செலுத்துமாறு தனது ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை கூறியதாகக் கூறப்படுகிறது. ஊழியர்களிடம் இருந்து போதுமான உற்பத்தி இல்லை என்றும், அவர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஊழியர்கள் கடினமாக உழைக்கவில்லையா?
துரதிர்ஷ்டவசமாக, தனது ஊழியர்கள் போதுமான அளவு கடினமாக உழைக்கவில்லை என்று அவர் கருதுவதாகக் கூறியுள்ளார். இப்படி ஒரு குறைபாட்டைக் கூறும் முதல் தலைமை நிர்வாக அதிகாரி பிச்சை மட்டுமில்லை என்பது கவனிக்கத்தக்கது. மெட்டா நிறுவனத்தில் இருக்கக் கூடாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் கூட கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

ஊழியர்கள் இதை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும் - சுந்தர் பிச்சை
"நம்முடைய உற்பத்தித்திறன் என்பது நம்மிடம் உள்ள தலை எண்ணிக்கையில் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது என்று பிச்சை கூறியுள்ளார். நாம் அதிக நோக்கம் கொண்ட, தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அதிக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். கவனச் சிதறல்களைக் குறைத்து, தயாரிப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகிய இரண்டையும் உயர்த்த வேண்டும் என்று அவர் தனது ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இங்கே இருக்கக் கூடாத ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர்
அதேபோல், மெட்டா நிறுவனத்தில் இங்கே இருக்கக் கூடாத ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். இவர்கள் போதிய தயாரிப்பை உருவாக்க நிறுவனத்துடன் இணைத்து வேலை செய்யவில்லை என்று ஜுக்பெர்க் கூறியுள்ளார். இந்த எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதன் மூலமும், அதிக ஆக்ரோஷமான இலக்குகளை வைத்திருப்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியை உருக்க நினைப்பதாகக் கூறியுள்ளார்.

பணியாளர்களுக்கு பணியமர்த்தல் செயல்பாட்டில் ஒரு சிறிய மந்தநிலை
இது அவருடைய நம்பிக்கையின் ஒரு பகுதி என்றும் கூறியுள்ளார். இந்த அழுத்தத்துடன் செயல்படும் இந்த இடம் உங்களுக்கானது அல்ல என்று உங்களில் சிலர் கூறலாம் என்றும் ஜுக்பெர்க் கூறியுள்ளார். இதேபோல், ஒரு குறிப்பில், கூகுள் சமீபத்தில் பணியாளர்களுக்கு பணியமர்த்தல் செயல்பாட்டில் ஒரு சிறிய மந்தநிலை குறித்தும் அறிவித்துள்ளது. இது பற்றி நிறுவனம் மேலும் கூறுகையில், எல்லா நிறுவனங்களையும் போல் கூகுளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை என்று கூகிள் தெரிவித்துள்ளது.

சவால்களை தடையாகப் பார்க்கக் கூடாது
இதுபோன்ற சவால்களை தடையாகப் பார்க்கக் கூடாது என்றும் பிச்சை கூறியுள்ளார். இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். "மாறாக, எங்கள் கவனத்தை ஆழப்படுத்தவும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யவும் அவற்றை நாங்கள் வாய்ப்புகளாகக் காண்கிறோம்," என்று சுத்தர் பிச்சை குறிப்பில் கூறியுள்ளார். பணியமர்த்தல் முன்னேற்றம் காரணமாகக் கூகிள் இந்த ஆண்டு முழுவதும் பணியமர்த்துவதை மெதுவாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பல இக்கட்டான சூழ்நிலைகளை கூகிள் சந்தித்துள்ளது
நிறுவனம் இதுவரை பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து அதிலிருந்து வெளிவந்து பல முறை சாதித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கூகுள் பணியமர்த்தலை முற்றிலுமாக முடக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தொழில்நுட்பம் மற்றும் இதர முக்கியப் பணிகளுக்கு நிறுவனம் தொடர்ந்து பணியமர்த்தப்படும் என்றும், நாங்கள் பணியமர்த்தப்படும் சிறந்த திறமைசாலிகள் எங்கள் நீண்ட காலத்துடன் இணைந்திருப்பதை உறுதிசெய்யும் என்றும் பிச்சை கூறினார்.

சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஜுக்பெர்க்கின் அன்பான மிரட்டல்
இந்த குறிக்கோளுடன் வேலை பார்க்கத் தவறிய சில ஊழியர்களால், நிறுவனத்தின் முன்னேற்றம் மெதுவாகியுள்ளதாகக் சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஜுக்பெர்க் ஆகிய இருவரும் கூறியுள்ளார். சிலர் கடினமாக உழைக்கவில்லை என நினைக்கும் சுந்தர் பிச்சை சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு இந்த வேண்டுகோளை அன்பான மிரட்டலுடன் முன்வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470