சீனாவுக்கு குட் பை சொல்லிவிட்டு இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லுங்க வாத்தியாரே.!

|

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள்
தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன்களை
தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் சீனாவில் செய்யப்பட்டு வந்தது. தற்போது சீனாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலையில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியினை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் கூகுள் நிறுவனமும் இப்போது புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. அதாவது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிப்பது பேச்சு நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு வரும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: எதற்கு தெரியுமா?

அதாவது மத்திய அரசின் PLI மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம் கூகுள் பிக்சல் போன்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் சுந்தர் பிச்சை நேரடியாக இந்தியா வர உள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் கொரோனா தொற்று போன்ற காரணங்களால், அங்கிருக்கும் ஆலைகளில் தேவையான அளவுக்கு போன்களை தயாரித்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தான் ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. குறிப்பாக பிக்சல் போன்களை
இந்தியாவில் அசம்பிள் செய்யும் திட்டம் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை செய்ய சுந்தர் பிச்சை இந்தியா வர உள்ளார் என்றும், இந்த பயணத்தில் நேரடியாக அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த மாதம் இறுதியில் சுந்தர் பிச்சை இந்தியா வருவார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய தகவல் தொடர்பு அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தது என்னவென்றால், கூகுள் தாய் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை உடனான சந்திப்பில் இந்தியாவில் கூகுள் பிக்சல் போன்களை தயாரிப்பது, ஆப் டெவலப்பர் எகோசிஸ்டம் உருவாக்குவது, சைபர் செக்யூரிட்டி, மொபைல் சேவைகளில் இந்திய மொழிகளின் பயன்பாடு போன்றவற்றை நாங்கள் விவாதிப்போம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வரும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: எதற்கு தெரியுமா?

அதேபோல் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பணி நீக்கம் குறித்த கேள்விக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒரு சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார். இப்போது அது பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

சமீபத்தில் பணி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியருக்குச் சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், எதிர்காலத்தினை கணிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். அதாவது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியது வைத்துப் பார்க்கையில் விரைவில் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. எனவே தான் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம் என்று ஊழியர்களிடம் கூறினார்.

கடந்த மாதம் வெளியான அறிக்கையில், கூகுள் உயர் அதிகாரிகள் மத்தியில் 6 சதவீதம் அல்லது 10,000 ஊழியர்களை அடையாளம் காண கூறியதாகத் தகவல்கள் வெளியானது. அதாவது இந்த நடவடிக்கை மூலம் குறைந்த செயல்திறன் உள்ள ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த மாதம் கடைசியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சில கூகுள் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் சுந்தர் பிச்சையின் இந்த தகவல் மூலம் கூகுள் ஊழியர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதையும் குறைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

இந்தியாவுக்கு வரும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: எதற்கு தெரியுமா?

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் பல டெக் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அதேபோல் தான் கூகுள் நிறுவனமும் தங்களது கணிசமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதாகத் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Sundar Pichai is coming to India to discuss the manufacturing of Pixel phones with the Indian government : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X