அடிக்கடி வீக்கிப்பீடியாவில் திருத்தங்கள்.! நீங்கள் படித்த பள்ளி எது? சுந்தர் பிச்சையின் பதில் இதுதான்.!

|

கூகுள் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் அதிகளவில் வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை.

 49 வயதான சுந்தர் பிச்சை படித்து,

குறிப்பாக 49 வயதான சுந்தர் பிச்சை படித்து, வளர்ந்தது தமிழ்நாட்டில்தான். அதாவது இவர்பள்ளிப் படிப்பை தமிழகத்திலும், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. பின்பு கடந்த 2004-ம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.

நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..

 இவர் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்தப் பேட்டியில் விக்கிப்பீடியாவில் நீங்கள் படித்த பள்ளி பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் படித்த சரியான பள்ளி எது என்று சொல்ல முடியா? என்று நெறியாளர் கேட்டிருந்தார்.

பட்ஜெட் விலையில் பக்காவா கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. விவோவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியல்.. இதோ..பட்ஜெட் விலையில் பக்காவா கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. விவோவின் பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியல்.. இதோ..

என கேட்டதற்கு அவர் இல்லவே இல்லை

மேலும் அதற்கு சுந்தர் பிச்சை அளித்த பதில் என்னவென்றால், இதில் உள்ளதில் இரண்டு பள்ளிகளில் நான் படித்தேன். கடைசியாக நான் மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் படித்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்பின்பு எட்டு வயதில் ஐஐடி-யில் சேர
நினைத்தாரா? என கேட்டதற்கு அவர் இல்லவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்பில்ல ராஜா., மஸ்க் தலைமையிலான டுவிட்டர் ரொம்ப மோசமாகும்- சர்ச்சையை கிளப்பிய பில் கேட்ஸ் கருத்து!வாய்ப்பில்ல ராஜா., மஸ்க் தலைமையிலான டுவிட்டர் ரொம்ப மோசமாகும்- சர்ச்சையை கிளப்பிய பில் கேட்ஸ் கருத்து!

அதேபோல் இந்தியாவில் வளர்ந்த அவர், ஆரம்ப நாட்களில் தனது வாழ்வில் தொழில்நுட்ப அணுகல் எப்படி இருந்தது என்பதை விரிவாக கூறியுள்ளார். மேலும் தொலைபேசி மூலம் தான் கண்ட மாற்றத்தையும் அவர் விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செய

மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அதன்படி சமீபத்தில் hindustantimes வலைதளம் வெளியிட்ட தகவலின்படி, பிளே ஸ்டோரில் 10 செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி இந்த தயாரிப்பும் இந்தியாவில்- எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏசி உற்பத்தி தொடக்கம்: நமக்கு நன்மை தான்!இனி இந்த தயாரிப்பும் இந்தியாவில்- எல்ஜி டூயல் இன்வெர்ட்டர் விண்டோ ஏசி உற்பத்தி தொடக்கம்: நமக்கு நன்மை தான்!

 இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட

குறிப்பாக இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட செயலிகள் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது எனறும், பின்பு வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆபத்தான அந்த 10 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துகூகுள் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த ஆபத்தான செயலிகளை வைத்துள்ளனர். எனவே இவற்றை உடனே டெலிட் செய்வது மிகவும் நல்லது. இப்போது இந்த ஆபத்தான 10செயலிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ

1. Speed Radar Camera

2. Al-Moazin Lite (Prayer times)

3. Wi-Fi Mouse (Remote Control PC)

4. QR & Barcode Scanner Developed by AppSource Hub

5. Qibla Compass - Ramadan 2022

6. Simple Weather & Clock Widget (Developed by Difer)

7. Handcent Next SMS- Text With MMS

8. Smart kit 360

9. Full Quran MP3-50 Languages & Translation Audio

10. Audiosdroid Audio Studio DAW

தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 செயலிகளை இதுவரை 60 மல்லியனுக்கு அதிகமாக பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இந்த தீங்கிழைக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

English summary
Sundar Pichai fact checks on Wikipedia about his school in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X