Home
News

கண்கலங்கிய சுந்தர் பிச்சை.. துன்பம் இப்படியும் வருமா? சூசன் வோஜ்சிக்கிக்கு இரங்கல்.. யார் இந்த பெண்?

கூகுள் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்த சூசன் வோஜ்சிக்கி (Susan Wojcicki) இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார். யார் இந்த சூசன் வோஜ்சிக்கி? ஏன் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார்? இதோ தெளிவான செய்தி. ஆல்பாபெட் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சனிக்கிழமை (இன்று), அவருடைய சமூகவலைத்தளம் வழியாக முன்னாள் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி காலமானார் என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். தனது அன்பான நண்பரின் இழப்பில் ஆழ்ந்த வருத்தத்தை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யூடியூப்பின் பாதையை வடிவமைப்பதில் சூசன் வோஜ்சிக்கியின் முக்கிய பங்கு எந்தளவிற்கு இருந்தது என்று அவர் எடுத்துரைத்திருக்கிறார். சூசன் வோஜ்சிக்கி ஒரு நம்பமுடியாத நபர், தலைவர் மற்றும் நண்பர் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுளின் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்தவர் தான் சூசன் வோஜ்சிக்க என்றும், கூகுளின் விளம்பர முயற்சிகளை பெரிதும் பாதித்த ஆட்சென்ஸின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பிற்காக 'கூகுள் நிறுவனர் விருது' பெற்றார் என்று கூறியுள்ளார்.

கண்கலங்கிய சுந்தர் பிச்சை.. துன்பம் இப்படியும் வருமா? யார் இந்த பெண்?

யார் இந்த சூசன் வோஜ்சிக்கி? ஏன் சுந்தர் பிச்சை கண்கலங்கினார்?

யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில், வோஜ்சிக்கி தளத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். உலகளவில் மில்லியன் கணக்கான உள்ளடக்க படைப்பாளர்களையும் பில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் உருவாக்கியதில் அவருக்கு மட்டுமே பெரும்பங்கிருக்கிறது. அவரது மரபு தயாரிப்பு மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்று சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.

தொழில்நுட்பத் துறையில், பெண்களுக்கான வலுவான வக்கீலாகவும் இருந்தார், உலகளவில் ஆர்வமுள்ள தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக பணியாற்றினார். கடந்த பிப்ரவரி 2023 இல், கூகுளுக்குச் சொந்தமான நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகுவதற்கான தனது முடிவை வோஜ்சிக்கி அறிவித்தார். அவர் வெளியேறியதைத் தொடர்ந்து புதிய யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய-அமெரிக்கரான நீல் மோகன் நியமிக்கப்பட்டார்.

அவரது வாழ்க்கை முழுவதும், வோஜ்சிக்கி சந்தைப்படுத்துதலை நிர்வகித்தார், கூகுள் இமேஜ் சர்ச் தேடலை இணைந்து உருவாக்கினார், Google இன் முதல் வீடியோ மற்றும் புக் சர்ச் தேடலை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. AdSense ஐ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான YouTube மற்றும் DoubleClick கையகப்படுத்தல்களில் துடிப்புடன் ஈடுபட்டார் என்று சுந்தர் பிச்சை அவரை புகழ்த்திருக்கிறார்.

சூசன் வோஜ்சிக்கி பெண் தலைவருக்கான எடுத்துக்காட்டு:

இதற்கிடையில், OpenAI இன் இணை நிறுவனரான ஜான் ஷுல்மேனின் (John Schulman), போட்டியாளரான ஆன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தில் சேர வோஜ்சிக்கி கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். சமூக ஊடக தளமான X இல் ஒரு இடுகையில், அவர் AI சீரமைப்பில் தனது கவனத்தை ஆழப்படுத்தவும், தனது தொழில் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் தொழில்நுட்பப் பணிகளுக்குத் திரும்பவும், இந்த இடமாற்றத்தை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

கூடுதலாக, ஓபன்ஏஐயின் தலைவரும் இணை நிறுவனருமான கிரெக் ப்ரோக்மேன் இந்த ஆண்டின் இறுதி வரை ஓய்வு எடுப்பதாகப் பகிர்ந்து கொண்டார். இந்த அறிவிப்பு X இல் ஒரு இடுகை வழியாகவும் வெளியிடப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவத்தில் சூசன் வோஜ்சிக்கியின் செல்வாக்கு பலரால் நினைவுகூரப்படும். தொழில்நுட்பத்துறையில் ஒரு சிறந்த பெண் தலைவராக வலம்வந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் என்று பாராட்டை பெற்றுள்ளது. இவரது மரணம் தன்னை வருந்த செய்வதாக சுந்தர் பிச்சை கண்கனளங்கி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sundar Pichai conveys condolences For Ex-YouTube CEO Susan Wojcicki Death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X