பாசம் விட்டுப் போகுமா.. அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியாவுக்கு வாழ்த்து சொன்ன சுந்தர் பிச்சை..
சுந்தர் பிச்சையின் (Sundar Pichai)தலைமையில் செயல்படும் கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
அதாவது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்தது என்னவென்றால், என்ன மாதிரியான ஒரு ஆட்டம், அரிதாகவே மூச்சு விடக்கூடிய அளவுக்குப் பரபரப்பான, விளையாட்டை நம்ப முடியாத ஒன்றாக மாற்றும் ஆட்டம். வாழ்த்துக்கள் இந்தியா, இதற்கு நீங்கள் முழு தகுதியானவர்கள்.

அதேசமயம் தென் ஆப்ரிக்காவின் ஆட்டமும் நம்ப முடியாததாக இருந்தது, அற்புதம் என்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா அற்புதமான இறுதி ஆட்டம், இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். தென் ஆப்ரிக்காவும் நன்றாக ஆடினார்கள். சிறப்பான உலகக்கோப்பை, மேற்கிந்தியத் தீவுகளிலும் அமெரிக்காவிலும் இன்னும் அதிக கிரிக்கெட் போட்டிகளை நடத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (sundar pichai) இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பைப் படித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை.
படிப்படியாக முன்னேறி கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ (Google CEO) என்ற பதவியைப் பெற்றார் இவர். குறிப்பாகச் சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்து 20 வருடங்கள் ஆகிறது. 2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் இரு முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1800 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்குச் சம்பளம் ரூ.1869 கோடியாக இருந்தது. மேலும் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் சுமார் 400 சதவீதத்திற்கும் மேலும் உயர்ந்துள்ளது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களைத் தொட்டுவரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியின் டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.8,342 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் பெரிதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் கூகுள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications