வீழ்வேனென்று நினைத்தாயோ.. சுந்தர் பிச்சையின் சூப்பர் அறிவிப்பு.. சரியான நேரத்தில் ChatGPTக்கு தரமான பதிலடி!
ஏஐசாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGPT) அடுத்த சில வாரங்களில் கூகுளை (Google) தூக்கி சாப்பிட்டு விடுமென்று நினைக்கப்பட்ட நேரத்தில்.. "நான் வீழ்வேனென்று நினைத்தாயோ" என்கிற பாணியில் கூகுளின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
மைக்ரோசாஃப்ட்டின் பிங் சேர்ச்சில் (Bing Search) சாட்ஜிபிடி-க்கான ஆதரவு கிடைப்பது போல கூகுள் சேர்ச்சிற்கு (Google Search) ஏஐ ஆதரவு (AI Support) கிடைக்குமென்று சுந்தர் பிச்சை உறுதிப்படுத்தியுள்ளார். கூகுளின் இந்த புதிய நடவடிக்கை சாட்ஜிபிடி-யின் அசுர வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? என்று கேட்டால்..

"வாய்ப்பில்லை ராஜா!" என்பதே நேர்மையான பதிலாக இருக்க முடியும். ஏனென்றால் மைக்ரோசாப்ட் சேர்ச்சில் உள்ள சாட்ஜிபிடியானது உரையாடும் திறன்களை கொண்டிருப்பது மட்டுமின்றி ஏஐ இமேஜ் ஜெனரேட்டரையும் ஆதரிக்கிறது. மறுகையில் உள்ள கூகுள் பார்ட் (Google Bard) குறைந்த நம்பகத்தன்மை கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலைமையை மாற்ற கூகுள் என்ன செய்ய வேண்டும்? கூகுள் அதன் ஏஐ டூல்களானது (AI tools) மிகவும் துல்லியமான முறையில் பதிலளிக்கக்கூடியதாக மாற்ற வேண்டும்; அதற்காக கூகுள் அதன் லேங்குவேஜ் மாடல்களை (Language Model) மேம்படுத்த வேண்டும். அதுதொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தான் சுந்தர் பிச்சையின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுந்தர் பிச்சையின் நம்பிக்கையும், மறுப்பும்: கூகுளின் இந்த முடிவு ஓப்பன்ஏஐ-யின் சாட்ஜிபிடி-க்கு பதிலடியாக இருக்குமென்றும், இதன் மூலம் பல்வேறு வகையான கேள்விகளுக்கு பதிலளிக்கும் கூகுளின் திறன் இன்னும் மேம்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை நம்புகிறார். மேலும் சாட்போட்கள் கூகுளின் சேர்ச் பிஸ்னஸை (Google Search Business) அச்சுறுத்துகின்றன என்கிற கூற்றுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.
ஏஐ சப்போர்ட் எப்படி கூகுள் சேர்ச்சின் திறனை மேம்படுத்தும்? லார்ஜ் லேங்குவேஜ் மாடல்ஸ் (Large language models - LLMs) என்பது கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிக்கும் (மனித பதில்களை பிரதிபலிக்கும்) கணினி நிரல்கள் (Computer programmes) ஆகும். இந்த விஷயத்தில் கூகுள் ஏற்கனவே ஒரு முன்னோடியாக உள்ளது.
தற்போது கூகுள் சேர்ச்சில் சேர்க்கப்படும் ஏஐ ஆதரவானது, லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களுடன் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிலான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) வழங்கும். "மக்கள் எப்படி சாட்ஜிபிடி உடன் தொடர்பு கொள்கிறார்களோ அதை போலவே சேர்ச் பேக்கிரவுண்ட்டில் கூகுளிடம் கேள்விகளை கேட்கவும், எல்எல்எம்-களுடன் 'என்கேஜ்' ஆகவும் முடியும்" என்கிறார் சுந்தர் பிச்சை.
உண்மையை ஒப்பு கொண்ட சுந்தர் பிச்சை: கூகுளின் சாட்போட் ஆன பார்ட் (Google Chatbot Bard), இன்னுமும் பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை, அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்களின் கவனத்தையும், உற்சாகத்தையும் ஈர்க்கவில்லை என்றும் சுந்தர் பிச்சை மிகவும் வெளிப்படையாக கூறி உள்ளார்.
இனி எல்லாமே ஏஐ தான்! கூகுள் நிறுவனம் தனது சேர்ச் எஞ்சினில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை (Artificial intelligence) ஒருங்கிணைப்பது, பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், சாட்ஜிபிடி உடனாக போட்டியிடுவதற்குமான அர்ப்பணிப்பை மட்டுமின்றி இனிமேல் எல்லாமே ஏஐ தான் என்பதை சொல்லாமல் சொல்வதற்கும் தான்!


Click it and Unblock the Notifications