Bloomberg தொலைக்காட்சி பேட்டியில் கிரிப்டோகரன்சி குறித்து கருத்து தெரிவித்த சுந்தர் பிச்சை.!

|

தற்போது மக்களிடையே பேசுபொருளாக இருப்பது கிரிப்டோகரன்சி குறித்து தான். அதேபோல் இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தெடாரில் கூட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தடை மசோதா கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள், தனது கரிப்டோகரன்சி நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். அதாவது முன்பு நான் கிரிப்டோகரன்சி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் தற்போது என்னிடம் அப்படி எதுவும் இல்லை. இதனை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என்று Bloomberg தொலைக்காட்சி பேட்டியில் சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

பெடல் அடித்தே உலகை வியப்பில் ஆழ்த்திய பிக்காஸோ 'இவர்' தான்.. மேப்ஸ் வரைபடத்தில் முரட்டு மீசைக்காரன்..பெடல் அடித்தே உலகை வியப்பில் ஆழ்த்திய பிக்காஸோ 'இவர்' தான்.. மேப்ஸ் வரைபடத்தில் முரட்டு மீசைக்காரன்..

 மகன் கிரிப்டோகரன்சியை

அதேசமயம் தனது மகன் கிரிப்டோகரன்சியை மைன்(Mining) செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நாள் இரவு நேர உணவின் போது கிரிப்டோகரன்சி குறித்து பேசிய போது தனக்கு தன் மகன் பிட்காயின் மற்றும் எத்திரியம் குறித்த புரிதலை விளக்கியதாக தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.

இல்ல புரியல., அவ்வளவு வேகமா: விரைவில் வருகிறது இல்ல புரியல., அவ்வளவு வேகமா: விரைவில் வருகிறது "6ஜி" சேவை- அப்போ 5ஜி எப்போ அறிமுகம்., அது எப்படி இருக்கும்?

கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு

அதேபோல் கூகுள் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. பின்பு இது சார்ந்த தகவலை சற்றுவிரிவாகப் பார்ப்போம்.

பேரு பேரு "நோக்கியா" நியாபகம் இருக்குதா?- ஒன்னு இல்ல நான்கு ஸ்மார்ட்போன் வருது: ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம் சார்!

 வகை ரோபோ மாடல்களை

குறிப்பாக புதிய வகை ரோபோ மாடல்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கூகுள்
நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது 100 ரோபோக்கள் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னங்க ஆறுதலா?- ஒருபக்கம் விலை ஏற்றம்., மறுபக்கம் இலவசம்: விஐ பயனர்களே 2ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி?என்னங்க ஆறுதலா?- ஒருபக்கம் விலை ஏற்றம்., மறுபக்கம் இலவசம்: விஐ பயனர்களே 2ஜிபி இலவச டேட்டா பெறுவது எப்படி?

தானியங்கு முறையில் இயங்கும் இவை

மேலும் தானியங்கி முறையில் இயங்கும் இவை Prototype- என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை Everyday Robotsஎன்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ரோபோ மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!வாட்ஸ்அப் இன் 'இந்த' புதிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஸ்டிக்கர் முதல் பாதுகாப்பு வரை- டாப் டக்கர்..!

வகை ரோபோ மாடல்க

அதேபோல் புதியவகை ரோபோ மாடல்களை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். பின்பு ரோபோக்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தில் எப்படி செயல்படுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். அதேபோல் இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்களில் வலம் வர உள்ளன என்று தெரிவித்துள்ளார்தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo.கண்டிப்பாக இந்த ரோபோக்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர்.

கூறவேண்டும் என்றால் ரோபோக்கள்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களின் அடிப்படையில் அந்த ரோபோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறது. அதேபோல் ஒரு மனிதன் குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு மேல் வேலை செய்யஇயலாது. அலுத்துப் போய் சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்த ரோபோக்கள் எந்தவித அலுப்பும் இன்றி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திரும்ப திரும்பவும், முறைப்படியும், துல்லியமாகவும் செய்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Sundar Pichai comments on cryptocurrency in a Bloomberg TV interview: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X