Just In
- 3 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 7 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 21 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 21 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- News
இத்தனை ஆயிரம் கோடியா? டோல்கேட்டில் வருமானம் குவிக்கும் பாஸ்ட்டேக்.. 2022ல் வாய்பிளக்க வைத்த வசூல்!
- Movies
முதன்முறையாக இணையும் விஜய் சேதுபதி - சந்தானம் காம்போ... முக்கியமான கூட்டணியில் பிளவு?
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தமிழிலேயே பேசலாம்: தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை.!
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த வாரம் இந்தியப் பயணத்தில் பிரதமர் முதல் பல அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். மேலும் கூகுள் அலுவலகத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில் இந்தியச் சந்தை குறித்தும், இந்தியச் சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பேசினார். இதுதவிர தமிழக இளைஞர் ஒருவரை நேரில் அழைத்துப் பேசி பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இப்போது யார் அந்த இளைஞர்? எதற்காகச் சுந்தர் பிச்சை அவரை பாராட்டினார் என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

முரளி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவரது தந்தை செல்வராஜ், தானிய வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாகத் தானியாம் விற்கும் தந்தையும், தந்தைக்குத் தானியம் கொடுக்கும் விவசாயிகளுக்கும் பெரிய அளவில் லாபம் கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்த்த முரளி, விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், தொழில்நுட்ப ரீதியான தகவல்களைப் பகிரவும், விவசாயம் இன் தமிழ் என்ற செல்போன் செயலியை 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியுள்ளார்.

கணினித் தமிழ் விருது
குறிப்பாக அவர் உருவாக்கிய இந்த செல்போன் செயலியில் விவசாயிகளுக்கான தகவல்களைப் புள்ளி விவரங்களுடன் பதிவேற்றுகிறார் என்பது தான் மிகவும் சிறப்பு. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு தமிழக முதல்வரின் கணினித் தமிழ் விருது, இவருக்குக் கிடைத்துள்ளது.

கூகுள் நிறுவனம்
அதேபோல் கடந்தஆண்டு கூகுள் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து கூகுள் ஆப் ஸ்கேல் அகாடமி என்பதைத் தொடங்கியது. இதில் சாப்ட்வேர் தொழில் செய்வோரில், அவர்கள் தயாரித்த மொபைல் ஆப்களின் அடிப்படையில் 100 பேரை தேர்வு செய்து, அவர்கள் உலகளாவிய நிலையை எட்ட ஆன்லைன் பயிற்சி வழங்கி சான்றும் கொடுத்தது. அவர்களில் முரளியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி கூகுள் நிறுவனத்தில் இருந்து முரளிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கடந்த 18-ம் தேதி டெல்லிக்குச் சென்றார். குறிப்பா ஓபராய் ஹோட்டலில் இவரை சந்தித்த கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவரை பாராட்டினார். மேலும் இந்த சந்திப்பு குறித்து முரளி கூறியது என்னவென்றால்,

தமிழிலேயே பேசலாம்
அவரை சந்திக்கு முன்பு என்னுடைய தமிழை மொழி பெயர்க்க ஆள் வேண்டுமென்று கேட்டுள்ளார் முரளி, ஆனால் அதற்கு அங்கு இருப்பவர்கள் அவரிடம் நீங்கள் தமிழிலேயே பேசலாம் என்று கூறியுள்ளனர். பின்பு சுந்தர் பிச்சையைப் பார்த்து இன்ப அதிர்ச்சியான முரளி அவரிடம் தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்.

மொபைல் ஆப் உருவாக்குவதற்கான காரணம்?
குறிப்பாக விவசாயிகளுக்கான மொபைல் ஆப் உருவாக்குவதற்கான காரணம், அதற்கான சூழுலை பற்றி முரளியிடம் கேட்டுள்ளார் சுந்தர் பிச்சை. பின்பு விவசாயத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைத்து, அதன் வாயிலாக விவசாயிகளுக்குக் கூடுதல் பலன் கிடைக்கும் நோக்கில் இதைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார் முரளி.

பின்பு சிறந்த பணி என்று பாராட்டிய சுந்தர் பிச்சை, இந்த செயலியை மற்ற இந்திய மொழிகளிலும் துவங்க அறிவுறுத்தினார். மேலும் இந்த சந்திப்பு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார் முரளி.
images courtesy: india.postsen.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470