புகழ்ந்து தள்ளிய சுந்தர் பிச்சை, டிம் குக்.. வினாடிக்கு 24,400 ட்வீட்கள்! அதிர்ந்து போன கூகுள்.!

|

அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை Sundar Pichai மற்றும் Tim Cook ஆகியோர் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர். அதேபோல் ட்விட்டரில் இதுவரை இல்லாத அளவிற்கு பயனர்கள் ஃப்ரான்ஸ் அணி குறித்து வினாடிக்கு 24,400 ட்வீட்களை பதிவிட்டுள்ளனர்.

புகழ்ந்து தள்ளிய சுந்தர் பிச்சை, டிம் குக்.. அதிர்ந்து போன கூகுள்.!

கத்தாரில் 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் அர்டென்டினா நாட்டுக்கு எதிராக நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் இந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

விறுவிறுப்பாக இதுவரை இல்லாத அளவிற்கு உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது என்றே கூறலாம். முதல் பாதியில் இரண்டு கோல் அடித்து முன்னணியில் இருந்த அர்ஜென்டினா இந்த போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், பிரான்ஸ் அணியை சேர்ந்த கிலியன் எம்பாப்வே அதிரடியாக இரண்டு கோல் அடித்து நேர முடிவில் இரண்டுக்கு இரண்டு என கோல் கணக்கை சமன் செய்தார்.

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான போட்டி என்று இதை குறிப்பிடுவதை விட இந்த போட்டியை மெஸ்ஸி மற்றும் எம்பாப்வேக்கு எதிரானது என்றே கூறலாம். அர்ஜென்டினா அணியை சேர்ந்த மெஸ்ஸியும் உலகக் கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் மைதானத்தில் சிங்கமாக சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தார்.

இந்த ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. இதில் அர்ஜென்டினா பிரான்ஸை வீழ்த்தி லீட் எடுத்து உலகக் கோப்பையை கைப்பற்றியது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணிக்கு வெற்றியை பரிசளித்தார் மெஸ்ஸி. இந்த போட்டியில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்வே ஆட்டம் உலகம் முழுவதும் பெரும் புகழுக்கு உள்ளானது.

புகழ்ந்து தள்ளிய சுந்தர் பிச்சை, டிம் குக்.. அதிர்ந்து போன கூகுள்.!

அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கூகுள் தாய் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் வெகுவாக பாராட்டினார். இது மிகச் சிறந்த போட்டி என சுந்தர் பிச்சை மற்றும் டிம் குக் ஆகிய இருவரும் அர்ஜென்டினாவை பாராட்டினர். குறிப்பாக அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸியின் செயல்திறனை சுந்தர் பிச்சை பாராட்டினார்.

அதேபோல் டிம் குக் அர்ஜென்டினாவை வாழ்த்தி ட்வீட் செய்திருந்தார். அதில் "நான் பார்த்த சிறந்த விளையாட்டுகளில் ஒன்று" என குறிப்பிட்டார். சுந்தர் பிச்சை இதுகுறித்து செய்த ட்வீட்டில் "சிறந்த விளையாட்டுகளில் எப்போதும் இருக்கும் ஒன்று" என குறிப்பிட்டார்.

அதேபோல் ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது, கூகுளின் தேடல் ட்ராஃபிக் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது என்றும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டார். "உலகமே ஒரு விஷயத்தை தேடுவது போல் இருந்தது" எனவும் அவர் பிச்சை தெரிவித்தார்.

முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை "என்ன ஒரு விளையாட்டு" என ட்வீட் செய்திருந்தார். அதேபோல் போட்டியை நேரலையில் கண்டுகளித்த மஸ்க், பல வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அடித்த கோல்லை குறிப்பிடும் வகையில், வினாடிக்கு கிட்டத்தட்ட 24,400 ட்வீட்களை ட்விட்டர் பயனர்கள் அப்போது பதிவிட்டனர் என மஸ்க் குறிப்பிட்டார். இது உலகக் கோப்பையில் அதிகபட்சமாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

புகழ்ந்து தள்ளிய சுந்தர் பிச்சை, டிம் குக்.. அதிர்ந்து போன கூகுள்.!

இதேபோல் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரலங்களும் அர்ஜென்டினா வெற்றி மற்றும் வெற்றி பாதைக்கு அணியை அழைத்து சென்ற மெஸ்ஸியை வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Sundar Pichai and Tim Cook praised Argentina's victory: Posted nearly 24,400 tweets per second

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X