சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?

|

இயற்கையில் நடக்கும் நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் சூரியனில் (Sun) அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் (Scientists) கண்டறிந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி சூரியனில் சூரிய புயல் (Solar Storm) ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை குறைந்த தீவிரம் கொண்ட சூரிய புயல் ஏற்பட்டுள்ளதால், பூமியின் மீது இதன் தாக்கம் குறைவாகவே இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரிய புயலின் தாக்கத்தால் அதிக லேட்டிட்யூட்களில் (High Latitudes) இருக்கும் வடக்கு ஹெமிஸ்பியர் (Northern hemisphere) பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் வானில் அரோராக்கள் (Aurora) தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.!

சூரியனில் அதிகமாகும் கருப்பு புள்ளிகள்.! இதனால் பூமிக்கு ஆபத்தா?

இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, இந்த சூரிய புயலை வைத்து பார்க்கையில், எதிர்காலத்தில் பூமி (Earth) எதிர்கொள்ளவிற்கும் கடுமையான சூரிய புயல் தாக்குதலின் ஆரம்பமாக இது இருக்கக் கூடும் என்ற உண்மையை சொல்லி, விஞ்ஞானிகள் நம்மை எச்சரித்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த கருத்துக்கு ஒரு முக்கிய காரணமும் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 2023, சூரியனில் தென்பட்ட சன் ஸ்பாட்டுகள் (Sun spot) 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய சாதனையைப் படைத்துள்ளது என்று கூறப்படுகிறது. சன் ஸ்பாட்ஸ் (Sunspots) என்பது சூரியனில் தோன்றக் கூடிய கருப்பு புள்ளிகளாகும் (Black dots on sun). இன்னும் இரண்டு ஆண்டுகளில் 25வது சோலார் சைக்கிள் அதன் (Solar Cycle) உச்சநிலையை அடையும் நிலையில், இன்னும் அதிகமான சன் ஸ்பாட்டுகள் தோன்ற வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் பூமிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சோலார் சைக்கிள் என்பது, சூரியனிலிருந்து வெளிவரும் காந்த அலைகள் குறைந்த தீவிரத்தில் ஆரம்பித்து, உச்சநிலையை அடைந்து, மீண்டும் குறைந்த தீவிரத்திற்குச் செல்லும் நிகழ்வைக் குறிப்பிடும். ஒவ்வொரு சோலார் சைக்கிளும், 11 ஆண்டு காலகட்டத்தை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 24 சோலார் சைக்கிள்கள் (Solar cycle 24) முடிவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25வது சோலார் சைக்கிள் (Solar cycle 25) ஆரம்பமானது.

சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.!

சூரியனில் உள்ள 'கருப்பு புள்ளி'களை பார்த்து விஞ்ஞானிகள் பதட்டமடைய இது தான் காரணமா?

இந்த சைக்கிள், 2025 ஆம் ஆண்டு அதன் உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் சோலார் சைக்கிளின் உச்சம் (Peak period of solar cycle) எதிர்பார்க்கப்படும் நிலையில், சூரியனில் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வு ஆராய்ச்சியாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சோலார் சைக்கிளின் போது, சூரியனின் காந்த அலைகள் மட்டுமின்றி, அதன் அனைத்து செயல்பாடுகளும் மாறுபடும்.

உதாரணமாக, ஒரு சோலார் சைக்கிள் ஆரப்பிக்கும் போது சூரியனில் இருக்கும் சன் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். சோலார் மாக்சிமம் (Solar Maximum) சமயத்தில், சன் ஸ்பாட்டுகள் எண்ணிக்கை உச்சத்தை தொடும். மீண்டும் சைகக்கிள் முடியும்போது எண்ணிக்கை குறையும். சன் ஸ்பாட்டுகள் மட்டுமின்றி, சோலார் ஃப்ளேர்கள் (Solar Flare), கொரோனல் லூப்புகள் (Coronal Loop) என்று அனைத்துமே சோலார் சைக்கிள் நேரத்தில் மேலே கூறிய மாற்றத்தை மேற்கொள்ளும்.

சன் ஸ்பாட்டுகள் என்பது சூரியனின் வெளிப்புறத்தில் குறைந்த வெப்பநிலை கொண்ட பகுதிகள் ஆகும். அந்த சன் ஸ்பாட்டுகளின் மத்திய பகுதியில், காந்த அலைகள் மிகவும் அடர்ந்து இருக்கும். அந்த மத்திய பகுதியிலிருந்து தான் சோலார் ஃப்ளேர் என்று கூறப்படும் - சூரிய புயல்கள் வெளியிடப்படும். எனவே, சன் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சோலார் ஃப்ளர்களும் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படும்.

சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.!

என்னது.! இப்போவே 144 கருப்பு புள்ளிகள் சூரியனில் காணப்படுகிறதா? இது இன்னும் அதிகரிக்குமா?

இது பூமியை பாதிக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. சென்ற சோலார் சைக்கிளின் தகவல்படி, கடந்த பிப்ரவரி மாத சமயத்தில் 146 சன் ஸ்பாட்டுகள் இருந்துள்ளது. நடப்பிலிருக்கும் சோலார் சைக்கிளின் ஜனவரி மாதம் கணக்குப் படி, இப்போதே 144 சன் ஸ்பாட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில், பிப்ரவரி மாதத்தின் முடிவில் சென்ற சைக்கிளை விட அதிக எண்ணிக்கையிலான சன் ஸ்பாட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற சோலார் சைக்கிளில் சோலார் மாக்சிமம் (Solar Maximum) மற்றும் சோலார் மினிமம் (Solar Minimum) ஆகியவற்றின் சூரிய நிகழ்வுகளுக்கான வேறுபாடு குறைவாக இருந்ததால், அதனால் பூமிக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சோலார் சைக்கிளின் டேட்டாக்கள் படி, இதன் சோலார் மாக்சிமமின் போது உருவாகும் சூரிய புயல்கள் பூமியை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னால், 1859 ஆம் ஆண்டு நடந்த சூரிய புயலால் மிகுந்த பாதிப்பு பூமியில் ஏற்பட்டுள்ளது. இதுவரை நடந்த சூரிய புயல்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றாக இது வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சூரிய புயலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இந்த சூரிய புயல் GPS-ஐ சேதப்படுத்தும். மேலும் மொபைல் நெட்வொர்க் (Mobile Network), இன்டர்நெட் (Internet) மற்றும் மின்னணு சாதனங்களை (Electronic Gadgets) பெரிதும் பாதிக்கும்.

சூரிய புயல் ஏற்படும் சமயத்தில் பூமியில் எந்த ஒரு மின்னணு சாதனமும் பாதுகாப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்கு இதனால், பெரியளவு பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Sun Records Highest Number Of Sunspots in 9 Years

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X