டிஸ்லெக்ஸியா நோய் இருந்தும் சாதனை படைத்த தொழில்நுட்ப முதலாளிகள்
படிப்பதில் சிறிய கோலாறு ஏற்படுத்தும் டிஸ்லெக்ஸியா எனப்படும் மூளை நோய் உலகில் பலருக்கும் இருக்கின்றது. இந்த நோய் இருப்பவர்கள் எழுதுவது, படிப்பது உள்ளிட்டவைகளில் சிரமம் ஏற்படும். இந்த பிரச்சனை இருந்தும் தங்களது தொழிலில் வெற்றியடைந்தவர்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் டிஸ்லெக்ஸியா நோய் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

ரிச்சர்டு ப்ரான்சன்
விர்ஜின் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றியடைந்த ரிச்சர்டு ப்ரான்ஸன் தன் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார்.

ஜான் சேம்பர்ஸ்
சிஸ்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜான் சேம்பர்ஸ் இன்றும் இந்த நோய் குறித்து பேசும் போது தனது கை வியர்க்க ஆரம்பித்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

பில் ஹெவ்லட்
எஹ்பி நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் ஹெவ்லட் டிஸ்லெக்ஸியா நோய் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

கெவின் ஓ'லியரி
ஓ'லியரி நிறுவனத்தை நிறுவிய கெவின் டிஸ்லெக்ஸியா நோயை எதிர்கொண்டு கல்வி சார்ந்த மென்பொருள் நிறுவனத்தை துவங்கினார்.

க்ரியாக் மெக்காவ்
மெக்காவ் செல்லுலார் மற்றும் க்ளியர்வயர் கார்பரேஷன் நிறுவனத்தை நிறுவிய க்ரியக் தன் வெற்றிக்கு காரணமாக டிஸ்லெக்ஸியாவையும் குறிப்பிடுகிறார்.

டெட் டர்னர்
டர்னர் ப்ராட்காஸ்டிங் சிஸ்டத்தை கண்டறிந்து மீடியா உலகில் வெற்றியை பதித்தார்.

அலான் மெக்ளர்
மெக்ளர் மற்றும் Mediabistro.com இணையதளம் ஆகியவற்றுக்கு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

சார்லஸ் ஸ்காவ்ப்
ப்ரோக்கரேஜ் நிறுவனத்தை துவங்கிய சார்லஸ் இன்று டிஸ்லெக்ஸியா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ப்ரெத்யேக மையம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.


Click it and Unblock the Notifications