Home
News

ஆர்டர் குவியுது.. வெறும் ரூ.1,999 விலையில் 10000mAh பவர்பேங்க்! 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வேற! யாராவது விடுவாங்களா?

அமேசானில் (Amazon) பட்ஜெட் விலையில், 10000mAh கேபாசிட்டி மட்டுமல்லமால், போன், லேப்டாப், இயர்பட்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் சார்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பம் கொண்ட ஸ்டஃப்கூல் மெகா 10000mAh பவர்பேங்க் (Stuffcool Mega 10000mAh Powerbank) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போது மார்க்கெட்டில் வரும் போன்களில் மெல்ல மெல்ல பேட்டரி கேபாசிட்டி அதிகரிக்கப்படுவதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், போன்களின் பேட்டரியானது, இன்டர்நெட், கேமிங்குக்கு மட்டுமல்லாமல், டிஸ்பிளே ரெப்ஃரெஷ் ரேட், டச் சாம்பிளிங் ரேட் போன்றவற்றிக்கும் அதிக பவர் சப்ளை கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஆர்டர் குவியுது.. வெறும் ரூ.1,999 விலையில் 10000mAh பவர்பேங்க்!

இருப்பினும், சிலருக்கு போன்களின் பேட்டரி பவர் போதாமல் இருக்கும், அதேபோல வெளியூர் செல்லும்போதும், எலக்ட்ரிசிட்டி வசதி இல்லாபோதும் பவர் கட்டாயம் தேவைப்படும். இதனால், இவர்கள் பவர்பேங்க் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருப்பார்கள் அல்லது புதிதாக பவர்பேங்க் வாங்ககூட திட்டமிட்டுருப்பார்கள். இவர்களுக்காகவே அறிமுக விலையில் மிகவும் மலிவாக ஸ்டஃப்கூல் மெகா பவர்பேங்க் வந்திருக்கிறது.

ஸ்டஃப்கூல் மெகா பவர்பேங்க் அம்சங்கள் (Stuffcool Mega Powerbank Specifications): இந்த மெகா பவர்பேங்க் பர்ஸ், பேக், பாக்கெட்டில் கூட வைத்துகொள்ளும் வகையில் போர்ட்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. 8 செ.மீ. உயரம், 6 செ.மீ. அகலம் கொண்டுள்ளது. டிஜிட்டல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 10000mAh கேபாசிட்டி கொண்டுள்ளது.

இந்த பவர் பேங்க்கில் பிடி (PD), பிபிஎஸ் (PPS) பவர் அவுட்புட் சப்போர்ட் வருகிறது. அந்த வகையில் 25W பிபிஎஸ் அவுட்புட் மற்றும் 30W பிடி அவுட்புட் கிடைக்கும். அதோடு சாம்சங் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் (Samsung Super Fast Charging) சப்போர்ட்டும் வருகிறது. இதன் மூலம் ஐபோன் மற்றும் கூகுள் பிக்சல் போன்களை 30 நிமிடங்களுக்குள் 50 சதவீதம் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

அதேபோல 30W சப்போர்ட் கொண்ட லேப்டாப்களை கூட சார்ஜ் செய்துகொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவொரு யுனிவெர்சல் பவர் அவுட்புட் பவர்பேங்க் என்பதால், லேப்டாப், போன் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ், நெக் பேண்ட்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த பவர் பேங்க் பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.

அதோபோல எந்த டிவைஸ்களுக்கு எவ்வளவு பவர் அவுட்புட் வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்துகொண்டு சார்ஜ் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 180 கிராம் எடைக்கொண்டுள்ளது. பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த பவர்பேங்க்கின் விலை ரூ.2,999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அறிமுக சலுகையாக ரூ.1,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அமேசான் (Amazon), மற்றும் ஸ்டஃப்கூல் (Stuffcool) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுவொரு குறுகிய கால சலுகை என்பதால், விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Stuffcool Mega 10000mAh Powerbank Launched with 30W, PD, PPS Power Output Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X