Home
News

எழுதும் பழக்கைத்தை மறக்க செய்யும் தொழில் நுட்பங்கள்!

By Karthikeyan
எழுதும் பழக்கைத்தை மறக்க செய்யும் தொழில் நுட்பங்கள்!

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவை மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அவை மனித வாழ்க்கையை இலகுவாக்குகின்றன. அதோடு வேகப்படுத்துகின்றன. மேலும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

அதே நேரத்தில் இவை ஒரு சில நேரங்களில் ஒரு சில குறைபாடுகளையும் எற்படுத்துகின்றன. அந்த வைகையி்ல தொழில் நுட்பங்கள் கொண்டு வந்திருக்கும் முக்கிய குறைபாடு என்னவென்றால் அவை எழுதும் கலையை படிப்படியாக மறக்கடிக்கச் செய்கின்றன என்பதாகும். இந்த பகீர் தகவலை ஒரு ஆய்வு வெளியிட்டிருக்கிறது.

குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் சாட்டிங் வந்த பிறகு எழுதும் படிப்படியாக் குறைந்திருக்கறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக இப்போதைய இளையோர் தொடர்ச்சியாக 6 வாரங்களுக்கு எழுதாமலே இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

டாக்மெயில் நடத்திய இந்த ஆன்லைன் ஆய்வில் சாராசரியாக இக்கால இளைஞர்கள் 40 நாள்களுக்கு ஒரு முறைதான் எழுதுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது. அதிலும் 3ல் ஒருவர் இந்த 6 வாரங்கள் கழித்து பயனுள்ள எதையும் எழுதுவதில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

2000 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 3ல் 2 சதவீதம் பேர் சிறு குறிப்புகள் மற்றும் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மட்டுமே 6 வாரங்களில் எழுதியிருக்கின்றனர் என்று தெரிவித்திருக்கின்றன.

மேலும் அதில் 50 சதவீதம் பேர் தங்களுடைய கையெழுத்து மோசமாக இருப்பதாகக் கருதுகின்றனர். அவற்றில் 7ல் ஒருவர் தங்கள் கையெழுத்தைப் பார்க்கும் போது தங்களுக்கு அவமானமாக இருப்பதாகக் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக பலர் வார்த்தைகளைச் சுருக்கி எழுதுவதால் வார்த்தைகளுக்குரிய எழுத்துகளை அகராதிகளில் தேடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த தலைமறை எழுத வேண்டும் என்றால் அது முழுக்க கீபோர்டுகளை நம்பியிருக்க வேண்டும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

எழுதுவது ஒரு கலை. அந்த எழுத்தை எழுதிப் பழக சிறுவயதில் எவ்வளவு கடினப்பட்டிருப்போம். சற்று சிந்திக்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X