படம் பார்த்து டிரோன் தயாரித்த பொறியியல் மாணவர்கள்
பாலிவுட் திரையுலகம் வித்தியாசமான ஒன்றாகவே இருக்கின்றது. பல தரப்பட்ட திரைப்படங்கள், பல்வேறு திரை களங்களில் மக்களை மகிழ்வித்து வருகின்றனர், அவ்வாறு பாலிவுட் தயாரித்த வெற்றி படம் தான் 3 இடியட்ஸ், தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜூவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் குவாட்காப்டர் என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டதோடு அதன் பின் இந்தியாவில் பிரபலமடைந்தது. திரைப்படத்தை பார்த்து ஈர்க்கப்பட்ட பொறியியல் மாணவர்கள் ஒன்றிணைந்து Zeppelin FC-26 என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கி தாங்களாகவே டிரோன் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டனர்.
சாதாரண டிரோன் வகைகளை விட இது 32 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் கூட நேரலையில் வீடியோக்களை ஒளிபரப்ப முடியும் என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்த டிரோன் கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் Garmin VIRB ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் கேமரா புகைப்படங்களை 1080 பிக்சல்களில் படமாக்க உதவுகின்றது.

ஏர் டிராப் மெக்கானிசம் மூலம் இந்த டிரோன் வெடி குண்டு, முட்டை போன்றவற்றை ஒரே க்ளிக் மூலம் வானில் பறக்கும் போதே தாக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த டிரோன் சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல்களோடு ஒப்பிடும் போது விலை குறைவாக இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
சந்தையில் சாதாரணமாக டிரோன் வாங்கும் போது மாடல்களுக்கு ஏற்ப அதன் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்க கூடும், ஆனால் மாணவர்கள் தயாரித்த இந்த டிரோன் ரூ.5,000 தான்.


Click it and Unblock the Notifications