கன்னியாகுமரி : லேப்டாப் சார்ஜ் செய்தபடி பயன்படுத்திய மாணவி உயிரிழப்பு.!
இந்த சம்பவம் குறித்து மார்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இப்போது மின்சாதனப் பொருட்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும், குறிப்பாக பல்வேறு மின்சாதனப் பொருட்கள் ஆபத்தை உண்டாக்கும் தொழில்நுட்பத்துடன் தான் வெளிவருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள சிரயான்குழியைச் சேர்ந்த பென்னட், மகிழ் ஜெபகனியின் மகள் பெர்ஜின். இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பெர்ஜின் மற்றும் அவரது தாயார் மகிழ் ஜெபகனியும் மட்டுமே இருந்துள்ளனர். பின்பு இரவு 10 மணிவரை லேப்டாப் பயன்படுத்தி பெர்ஜின் படித்துக் கொண்டிருந்ததால் அவர் தயார் படித்து முடித்தவுடன் தூங்குமாறு கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

சனிக்கிழமை காலை
பின்பு சனிக்கிழமை காலை விடிந்ததும் மகிழ் ஜெபக்கனி எழுந்து பார்க்கையில் பெர்ஜின் கருகிய நிலையில் லேப்டாப் மீது சாய்ந்து கிடந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகிழ் ஜெபக்கனி கதறி அழுதுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்
மேலும் அவரது அழுகை சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அந்த சமயம் ஒருவர் மாணவியிள் உடலை தூக்க முயன்ற போது அவருக்கு மின்சாரம் தாக்கியதில் சிறுது காயம் ஏற்பட்டது. அப்போது தான் தெரிந்தது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பின்னர் லேப்டாப் மின்சாரத்தை துண்டித்துவிட்டு மாணவியின் உடலை மீட்டனர்.

அரசு மருத்துவமணை
இந்த சம்பவம் குறித்து மார்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்தனர். பின்னர் மாணவி பெர்ஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரனை
அதன்பின்பு இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications