காதலி மூலம் கல்லூரி பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் கைது.!
எனவே இதனால் அச்சமடைந்த அந்த பெண், கல்லூரி விடுதியின் குளியலறைகளில் ரகசிய கேமரா வைத்து, மற்ற பெண்களின் நிர்வாண வீடியோக்களை தனது காதலர் சித்தார்த்தக்கு அனுப்பியுள்ளார்.
இப்போது இருக்கும் சில தொழில்நுட்பங்கள் மற்றும் சமூகவலைதளங்களை சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர், அதன்படி பெங்களூரில் தனது காதலியின் மூலமாக கல்லூரி விடுதியில் ரகசிய கேமரா வைத்து பெண்களை நிர்வாண வீடியோ
எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையிளர் கைது செய்துள்ளனர்.

சித்தார்(21) தஞ்சாவூரைச் சேர்ந்தவர், இவர் பெங்களூரின் சூடசந்திரா பகுதியில் தங்கியிருந்து, சௌத்ஈஸ்ட் கல்லூரியில் பொறியியல் பயின்று வருகின்றார். மேலும் தனது காதலி உதவியின் மூலம் கல்லூரி விடுதியில் உள்ள குளியலறைகளில் ரகசிய கேமரா வைத்து, சக மாணவிகளை நிர்வாண வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதால் காவல்துறையினர் இவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்பன அக்ரஹார காவல்துறையினர்
மேலும் பரப்பன அக்ரஹார காவல்துறையினர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக சித்தார்த்தின் காதலியை காவலில் எடுத்து விசாரித்தோம், அதில் அவர் கூறிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளது.

காதலிக்கு மிரட்டல்
சம்பந்தப்பட்ட அந்த பெண் சித்தார்த்துடன் காதலில் இருக்கும் போது, தன்னை தானே நிர்வாணமாக எடுத்து அதை அவருக்கு
அனுப்பியுள்ளார்,இந்த வீடியோக்களை பார்த்த சித்தார்த், இதேபோன்று கல்லூரியில் இருக்கும் மற்ற பெண்களின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்து அனுப்ப வேண்டும். இல்லையென்றால் உனது அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக தனது காதலிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்..

ரகசிய கேமரா
எனவே இதனால் அச்சமடைந்த அந்த பெண், கல்லூரி விடுதியின் குளியலறைகளில் ரகசிய கேமரா வைத்து, மற்ற பெண்களின் நிர்வாண வீடியோக்களை தனது காதலர் சித்தார்த்தக்கு அனுப்பியுள்ளார். சம்பந்தபட்ட பெண், வேண்டும் என்ற நோக்கத்துடன் சித்தார்த்துக்கு உதவியாக இருந்துள்ளதால், அவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்த பின்னர், அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வீடியோ வெளிவந்தது எப்படி?
மேலும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 21 வயது மாணவி, சங்கீதா ரெட்டி என்பவர், பேஸ்புக் பக்கத்தில் தனது அந்தரங்க புகைப்படங்களை பார்த்துள்ளார், இது போலி பேஸ்புக் பக்கம் என்று தெரிந்துகொண்ட அந்த மாணவி, இதேபோல் மேலும் இரண்டு போலி பேஸ்புக் பக்கங்களில் தான் குளிக்கும் வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இடைநீக்கம்
பின்பு சித்தார்த்தின் காதலியான தனது அiயில் இருக்கும் பெண்தான் இதேபோன்ற வீடியோக்கள் எடுத்ததை அந்த பெண் உறுதி செய்துள்ளார். மேலும் மாணவி இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, இந்த சம்பவம் குறித்து விசாரித்த கல்லூரி நிர்வாகிகள் ஒழுங்கினமாக நடந்து கொண்ட சித்தார்த்தை இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் அந்த
மாணவி தனது பெற்றொரிடம் புகார கூறியுள்ளார். ஆனால் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் தனது மகளின் பெயருக்கு களங்கம்வந்துவிடும் என அந்த பெண்னின் பெற்றொர்கள் காவல் நிலையத்தில் புகார் தர மறுத்து விட்டனர்

ஜூலை 28
இருந்தபோதிலும் அந்த பெண் கடந்த ஜூலை 28-ம் தேதி, காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி, தனது அந்தரங்க வீடியோக்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குமாறு தெரிவித்துளார். அப்போது நடந்த விசாரணையில் தான் இதேபோல் 3 மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை சித்தார்த் இணையத்தில் பதிவேற்றியது தெரியவந்தது. மேலும் தனது மகளை பார்க்க
விடுதி சென்ற மாணவியின் தாயையும் குளியலறையில் நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

354ஏ பிரிவின் படி
குறிப்பாக சித்தார்த் எடுத்த நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தஞ்சாவூரில் வைத்து பதிவேற்றியதன் மூலம் இந்த உண்மை வெளிவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் ரகசிய கேமராவை
கைப்பற்றியதுடன், இந்திய தண்டனை சட்டம் 354ஏ பிரிவின் படி சித்தார்த்தை கைது செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications