Google chrome பயனர்களுக்கு அரசு கொடுத்த டைரக்ட் எச்சரிக்கை.. பறந்து வந்த அவசர உத்தரவு.. என்ன செய்யனும்?
இந்தியாவில் ஏறக்குறைய 89.2% மக்கள் கூகுள் குரோம் (Google Chrome) வெப் பிரௌசரை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். தோராயமாக சொல்ல வேண்டுமென்றால் 692 மில்லியன் பயனர்கள் இந்த வெப் பிரௌசரை பயன்படுத்துகிறார்கள். இப்படி கூகுள் குரோம் வெப் பிரௌசரை (Google chrome security alert) பயன்படுத்தும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால் உஷார். இந்த அரசுக்கு சொந்தமான, இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In) கூகுள் குரோம் பயன்படுத்தும் இந்தியா மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை (Warning alert issued for Google Chrome users) வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் CERT-In குழு வெளியிட்டுள்ள தகவலின் படி, மிகவும் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற பிழை கூகுள் குரோம் வெப் பிரௌசர் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பிழை ஹேக்கர்களால் (Hackers) எளிமையாக உங்கள் கூகுள் குரோம் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்கும் நுழைய வழிவகுக்குகிறது என்று CERT-In தெரிவித்துள்ளது. ஹேக்கர்கால் உங்கள் சாதனங்களை தாக்கினால், உங்கள் தகவல்கள் அனைத்தையும் இழக்கும் நிலை (data loss and data theft) நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய கூகுள் குரோம் சிக்கல் விண்டோஸ் (Windows), லினக்ஸ் (Linux) மற்றும் மேக் (MAC) ஆகிய அணைத்து தளங்களில் உள்ள பயனர்களை தாக்க கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. டேப்லெட் (Tablet), லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டர் (Computer) என்று எந்தவொரு சாதனத்தில் நீங்கள் குறிப்பிட்ட சில கூகுள் குரோம் வெர்ஷன் தளத்தை திறக்கும் பொழுது, அந்த சாதனம் ஹேக்கர்களால் பதிப்பிற்குள்ளாக்குகிறது. இதனால், இந்திய அரசு கூகுள் குரோம் பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த கடுமையான பாதுகாப்பு சிக்கலில் இருந்து மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் அரசு ஏஜென்சி (Government Agency) தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அது என்ன? அதை எப்படி செய்வதென்று? இப்போது பார்க்கலாம். இந்த புதிய மோசமான பிழை முந்தைய கூகுள் குரோம் வெர்ஷன் 130.0.6723.116 மற்றும் லினக்ஸ் தளங்களில் காணப்படுகிறது.
அதேபோல், விண்டோஸ் மற்றும் மேக் கூகுள் குரோம் பயனர்களின் கூகுள் குரோம் வெர்ஷன் 130.0.6723.116/.117 மற்றும் இதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் சாதனங்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் சிக்கி, ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் சாதனம் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவலை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் கீழ் வரும் செயல்முறையை ஒரு முறை செய்ய வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.
- உங்கள் விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களில் அப்டேட் செக் செய்யவும்.
- உங்கள் கூகுள் குரோம் வெப் பிரௌசரை திறக்கவும்.
- வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்யவும்.
- அதில் காணப்படும் Help என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- பிறகு, About Google Chrome விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- புதிய வெர்ஷன் கூகுள் குரோம் உங்களுக்கு காண்பிக்கப்படுகிறதா என்று செக் செய்யுங்கள்.
- அப்டேட் கடும்பட்சத்தில் Install என்பதை கிளிக் செய்து அப்டேட் செய்யுங்கள்.
புதிய வெர்ஷன் கூகுள் குரோம் வெப் பிரௌசரில் இருந்து இந்த பிழை நீக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க அப்டேட் செய்வது மட்டுமே ஒரே வழி என்று சென்ட்-In தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications