வாடகைக்கு 43 இன்ச் QLED Smart Tv.. மாதம் ரூ.799 வாடகை.. 24+ OTT.. 300+ சேனல்.. அட்வான்ஸ் திரும்ப தரப்படும்..
கேட்பதற்கே மிகவும் வினோதமாக தெரிந்தாலும், இது தான் உண்மை. சாதாரணமான ஒவ்வொரு வீடுகளிலும் கேபிள் டிவி கனெக்ஷன் வாங்கவே மாதம் ரூ.300க்கு மேல் செலவாகிறது. ஆனால், ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா (Streambox Media) நிறுவனம் மாதம் வெறும் ரூ. 799 கட்டணத்தில், உங்களுக்கு 43" இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவியுடன் (43" inch QLED Ultra HD 4K Smart TV) 24+ ஓடிடி (OTT) சந்தா, 300+ கேபிள் டிவி (channel tv) சேனல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய டிவி சந்தா திட்டத்தை ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா (Streambox Media) நிறுவனம் தான் அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியை நிறுவனம் டோர் (Dor) டிவி என்று அழைக்கிறது. இந்த டிவியை நீங்கள் ஒரு முறை அட்வான்ஸ் தொகை மட்டும் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். அதற்கு பிறகு 1 வருடத்திற்கு மாதம் ரூ. 799 மட்டும் சந்தா கட்டணமாக செலுத்தி டிவியை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

வாடகைக்கு 43 இன்ச் QLED Smart Tv.. மாதம் ரூ.799 மட்டுமே:
12 மாதங்களுக்கு பிறகு, இந்த டோர் டிவி சேவையை உங்களுக்கு பயன்படுத்த விருப்பமில்லை என்றால், நீங்கள் வாங்கிய ஸ்மார்ட் டிவியை ரிட்டர்ன் செய்து, நீங்கள் செலுத்திய அட்வான்ஸ் கட்டணத்தில் இருந்து பாதி பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது. சரி, இப்போது எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? எப்படி இந்த டிவிக்கான சந்தாவை பெறுவது?
இதை எங்கிருந்து ஆர்டர் செய்ய வேண்டும்? என்பது போன்ற முழு விபரத்தை இப்போது பார்க்கலாம். டோர் 43" இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி (Dor 43" inch QLED Ultra HD 4K Smart TV) சாதனத்தை நீங்கள் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளம் வழியாக வாங்கலாம். இந்த டிவியை நீங்கள் ரூ.10,799 என்ற ஒருமுறை கட்டணத்துடன் வாங்கி பயன்படுத்தலாம்.
டோர் 43" இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி (Dor 43" inch QLED Ultra HD 4K Smart TV):
இந்த தொகை உங்கள் அட்வான்ஸ் தொகையாக கருதப்படுகிறது. இதற்கு பிறகு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் 799 செலுத்தி, உங்கள் டோர் டிவி சந்தாவை ஆக்டிவ் நிலையில் வைத்துக்கொள்ளலாம். உங்கள் சந்தா துவங்கும் அதே நாளில் பில்லை ஒழுங்காக செலுத்தி வர, உங்கள் ஸ்மார்ட் டிவி சேவை எந்தவித தடையுமின்றி இயங்கிக்கொண்டிருக்கும். ஒருவேளை உங்கள் சந்தா கட்டணத்தை சரியான நாளில் நீங்கள் செலுத்தவில்லை என்றால், உங்களால் டிவி உள்ளடக்கங்களை அனுபவிக்க முடியாது.
இந்த டோர் டிவி அடிப்படை சந்தா திட்டம் வெறும் ரூ.299 விலை முதல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது உங்கள் தேர்வில் இயங்கும் குறைந்த எண்ணிக்கை சேனல்களை உள்ளடக்கியது. ஆனால், 799 ரூபாய் திட்டம் 24+ OTT தளங்களுக்கான முழு அணுகலை வழங்குகிறது. இதில் Amazon prime videos, Netflix, Dinsey Hotstar, என்று பல முக்கியமான OTT தளங்களின் சந்தாவை வழங்குகிறது. இது 4 வருட உத்தரவாதத்துடன் வருகிறது.
அட்வான்ஸ் தொகை எவ்வளவு மீண்டும் திருப்பி தரப்படும் தெரியுமா?
இத்துடன் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி சேனல்களையும் இந்த சந்தா வழங்குகிறது. 1 வருடம் இந்த டோர் டிவி சேவையை பயன்படுத்திய பிறகு, உங்களிடம் இருக்கும் டிவியை நீங்கள் ரிட்டர்ன் செய்ய விரும்பினால், தாராளமாக ரிட்டர்ன் செய்யலாம். டோர் டிவியை ரிட்டர்ன் செய்யும் பொழுது ரூ.5000 பணம் திரும்ப தரப்படும் என்று நிறுவனம் தெளிவாக கூறியுள்ளது. குறைந்த செலவில் உங்கள் வீட்டு ஹாலில் பெரிய டிஸ்பிளே டிவியை பயன்படுத்த ஆசை இருந்தால், இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
டோர் 43" இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி (Dor 43" inch QLED Ultra HD 4K Smart TV) டிவைஸின் முதல் விற்பனை இதற்கு முன்பு ஒரு முறை நடைபெற்றது. அதில், 12 மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த யூனிட்களும் ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா (Streambox Media) நிறுவனம் விற்பனை செய்து தீர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் இந்த ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியா (Streambox Media Dor டிவியை நிறுவனம் விற்பனைக்கு ஸ்டாக் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








