போதுமா., அங்க பாருங்க: பூமிக்கு வந்த ஏலியன்ஸ் விண் கப்பல்., பிரமித்து போன ஊர்வாசிகள்: உண்மை என்ன?

|

அமெரிக்காவின் அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதியில் மேகம் கீழே விழுவது போல் வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சியை பொதுமக்கள் சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்தனர். மேலும் இந்த விசித்திர நிகழ்வான ஏலியன்ஸ் வருகை எனவும் விமான விபத்தாக இருக்கலாம் எனவும் ரகசிய ராணுவ ஆயுதமாக கூட இருக்கலாம், ஏவுகணையாக இருக்கலாம், விண்கல் ஆக இருக்கலாம் எனவும் அப்பகுதிகள் மக்கள் பலரும் நம்பத் தொடங்கி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.

அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதியில் தோன்றிய மேகம்

அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதியில் தோன்றிய மேகம்

வடஅமெரிக்காவில் அமைந்துள்ளது அலாஸ்கா லேசி எனும் மலைப் பகுதி. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மேகம் கீழே விழுவது போல் வானத்தில் தோன்றிய வித்தியாசமான காட்சியை பொதுமக்கள் சுத்தி சுத்தி புகைப்படம் எடுத்தனர். புகைப்படங்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. UFO அதாவது Unidentified Flying Object (அடையாளம் காணப்படாத பொருள்) எனப்படும் ஏலியன்களின் விண்வெளி கப்பல் பூமிக்கு வந்ததால் ஏற்பட்ட நிகழ்வு என பலரும் கருத்துகளை பதிவிடுகின்றனர்.

வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ்கள்

வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ்கள்

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள லேசி மவுண்ட் எனும் பகுதியில் தோன்ற அசாதாரண மேகம் ஆனது யூஎஃப்ஓ குறித்த நம்பகத்தன்மையை அந்த பகுதியில் மேலும் ஊக்குவித்துள்ளது. மலையில் வெள்ளி மேகம் தோன்றியது போல் காட்சி அளித்தது. இதை அந்த பகுதியினர் யூஎஃப்ஓ என நினைத்தாலும் பலரும் இது ஏவுகணை எனவும் விண்கல் எனவும் நினைத்து புகைப்படங்களை பதிவு செய்யத் தொடங்கினர். அதேபோல் இது விமான விபத்தாக இருக்கலாம் எனவும் ரகசிய ராணுவ ஆயுதமாக கூட இருக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

விசித்திரமான மேகம் குறித்த தகவல்

ஒரு அறியப்படாத விஷயம் நடந்தால் அப்பகுதி வாசிகள் தெரிவிக்கும் கருத்துகள் என்பது அலப்பரியதாக இருக்கும். அதன்படி இதேபோன்ற விஷயத்தை இரண்டாவது உலகப் போரில் இருந்தே கவனித்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். மறுபுறம் வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ்கள் பூமிக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக நம்பி பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த மர்ம நிகழ்வு குறித்து அந்த பகுதி மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த மீட்புக் குழு அதிகாரிகள், விமான விபத்தாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக எந்த அறிகுறியும் இல்லை என ஆய்வு மேற்கொண்ட மீட்புக் குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விமான விபத்து நடந்ததா எனவும் விசாரணை

விமான விபத்து நடந்ததா எனவும் விசாரணை

இந்த விசித்திரமான மேகம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அலாஸ்கா மாநில மீட்பு ஒருங்கிணைப்பு மையம், விமான விபத்து நடந்ததா எனவும் அச்சத்துடன் விசாரிக்கத் தொடங்கினர். பின் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர், இந்த ஆய்வானது மீட்புக் குழு ஒரு ஹெலிகாப்டர் மூலம் நடத்தியது. ஆனால் அந்த பகுதியில் சம்பவம் ஏதும் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை, இதையடுத்து இந்த விசித்திர மேகம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

என்னவாக இருக்கும் என மீட்புக் குழுவினர் ஆய்வு

இருப்பினும் வானத்தில் தோன்றிய இந்த நிகழ்வு என்னவாக இருக்கும் என மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் இதுகுறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்த நிகழ்வு நடந்த சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவு கொண்ட வணிக ஜெட் அங்கு பறந்துக் கொண்டிருந்ததாகவும் இந்க விமானம் அந்த பகுதியில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது எனவும் ஜெட் பயணித்தால் அதன் பாதை பளீர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் அல்லவா அதேபோல் சூரிய வெளிச்சத்தால் கூடுதல் வெளிச்சத்தோடு அலாஸ்கா பகுதியில் இந்த காட்சி தோன்றி இருக்கிறது எனவும் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இருப்பினும் அப்பகுதி மக்கள் இது அது அல்ல, அது இதேதான் இது ஏலியன்ஸ் விண் கப்பல் என தொடர்ந்து தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Strange Cloud Formed in mountains of Alaska: Alaska Locals Beleived that is UFO's

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X