ஐபோனை வாங்க சிறுநீரகத்தை விற்ற சிறுவன்- இப்படி பண்ணிடிங்களே மா.!
கடந்த 2011-ம் அண்டு ஐபோன் 4 ஐ வாங்க வேண்டும் என்று ஏங்கிய வாங் என்ற இந்த சிறுவன்,பெற்றோருக்கு தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை 3200 டாலருக்கு விற்பனை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
உலகலவில் ஐபோன் மாடல்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு புதிய வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஐபோன்களின் விலை சற்று உயர்வாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும்
பல்வேறு அம்சங்கள் இந்த சாதனங்களில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் சீனாவில் ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவனம் தற்சமயம் உயிருக்கு போராடி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 4
கடந்த 2011-ம் அண்டு ஐபோன் 4-ஐ வாங்க வேண்டும் என்று ஏங்கிய வாங் என்ற இந்த சிறுவன், பெற்றோருக்கு தெரியாமல் தனது ஒரு சிறுநீரகத்தை 3200 டாலருக்கு விற்பனை செய்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.

நோய் தொற்று
இருந்தபோதிலும் அறுவை சிகிச்சை முறையாக செய்யாததால்,காயம் ஆறாமல் நோய் தொற்று ஏற்பட்டு மற்றொருசிறுநீரகத்தையும் பாதித்து விட்டது, இதனால் தற்சமயம் படுக்கையிலேயே வாழ்க்கையை நகர்த்தி வரும் இந்த சிறுவனுக்கு, தினமும் டயாலிசஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவ செலவு
பின்பு கிட்னியை விற்றது குறித்து தாமதமாக அறிந்த அவனது பெற்றோரும் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் தினறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விலை
ஐபோன்-4 ஸ்மார்ட்போனின் 16ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் ரூ. 37,900 விலை கொண்டதாக இருந்தது.


Click it and Unblock the Notifications