வேண்டாம் விஎல்சி மீடியா ப்ளேயர்! ஹேக்கிங் ஆபத்து அதிகம்...

|

நீங்கள் உங்களது மடிக்கணினி அல்லது கணினியில் வீடியோக்களை ப்ளே செய்கிறீர்கள் எனில், விஎல்சி மீடியா பிளேயரைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு பொருந்தும் ஏனென்றால் இந்த இலவச மீடியா ப்ளேயரின் பிரபலம்.

சமீபத்திய அறிக்கையின்படி

சமீபத்திய அறிக்கையின்படி

இருப்பினும் சமீபத்திய அறிக்கையின்படி, விஎல்சி பிளேயர் இனி பாதுகாப்பானது இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு அறிக்கைகளின் படி, உங்கள் தனிப்பட்ட கோப்புகள் உள்பட கணினியில் உள்ள அனைத்திற்கும், ஹோக்கர்களுக்கு தொலைதூர அணுகலை (ரிமோட் ஆக்சஸ்) வழங்கக்கூடிய ஒரு முக்கியமான பாதிப்பைக் கொண்டிருக்கிறது விஎல்சி ப்ளேயர்.

ஜெர்மன் சைபர் தொழில்நுட்ப நிறுவனம்

ஜெர்மன் சைபர் தொழில்நுட்ப நிறுவனம்

ஜெர்மன் சைபர் தொழில்நுட்ப நிறுவனம் CERT இந்த பிரச்சனையை கண்டுபிடித்ததுடன், இந்த பாதிப்பை ( CVE-2019-13615 என பட்டியலிடப்பட்டுள்ளது) தீவிரமானது என வகைப்படுத்தி, NIST இன் தேசிய பாதிப்பு தரவுத்தளத்தில் 10க்கு 9.8 மதிப்பெண் அளித்து இணைத்துள்ளது.

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-விலைகுறைப்பு: அள்ளிக்கோங்க.!நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-விலைகுறைப்பு: அள்ளிக்கோங்க.!

கஸ்டமைஸ் செய்ய அல்லது மென்பொருளை இயக்கவும்

கஸ்டமைஸ் செய்ய அல்லது மென்பொருளை இயக்கவும்

விஎல்சி பிளேயரில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பானது, RCE அல்லது ரிமோட் கோட் எக்ஸிக்யூசனை அனுமதிப்பதால், ஹேக்கர்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய ,கஸ்டமைஸ் செய்ய அல்லது மென்பொருளை இயக்கவும் அனுமதிக்கக்கூடும். அடிப்படையில் ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹைஜேக் செய்வது போல அப்படியே கைப்பற்றமுடியும்.

விஎல்சி ப்ளேயர் மூலம் எப்படி ஹேக்கர்கள் நுழைவர்?

விஎல்சி ப்ளேயர் மூலம் எப்படி ஹேக்கர்கள் நுழைவர்?

CERTன் கண்டுபிடிப்பின் படி, ஹேக்கர்கள் ஒரு கணினியில் உள்நுழைவதற்கான அணுகலை பெற ஒரு தீங்கிழைக்கும் MKV வீடியோ கோப்பே போதுமானது. எனவே நீங்கள் வீடியோக்களை அல்லது திரைப்படங்களை சட்டவிரோதமாக டெரண்ட் அல்லது மற்ற நம்பத்தகாத ஆதாரங்களைப் பயன்படுத்தி (முதலில் செய்யக்கூடாதது) பதிவிறக்கம் செய்பவராக இருந்தால், பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் நீங்களும் இருப்பீர்கள்.

இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!இந்தியா: ரூ.6,799-விலையில் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

மோசமடைந்ததை போல தெரிகிறது

மோசமடைந்ததை போல தெரிகிறது

விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்-அடிப்படையிலான அமைப்புகளில் இயங்கும் சமீபத்திய விஎல்சி பதிப்புகளில் இந்த பிரச்சனை காணப்படுகிறது. இந்த பாதிப்பிலிருந்து மேக் ஓஎஸ் பாதுகாப்பாக இருப்பதாக தெரிகிறது. ஆச்சரியமளிக்கும் வகையில் இதுவரையிலும் எந்தவொரு ஹேக்கரும்

இதை பயன்படுத்தி தவறுகள் செய்யப் பயன்படுத்தவில்லை. ஒரு சில வாரங்களுக்கு இந்த பிழையை சரிசெய்ய விஎல்சி முயற்சி செய்து வருகிறது. கடந்த காலங்களில் இதேபோன்ற பிரச்சனைகளை விஎல்சி சந்தித்த போதிலும், தற்போது நிலைமை அதிகமாக மோசமடைந்ததை போல தெரிகிறது.

விஎல்சி பாதிப்பு : பாதுகாப்பாக இருப்பது எப்படி?

விஎல்சி பாதிப்பு : பாதுகாப்பாக இருப்பது எப்படி?

நிச்சயமாக பாதிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், நீங்கள் கண்டிப்பாக வீடியோவை ப்ளே செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், நம்பிக்கையற்ற ஆதாரங்களில் இருந்து வீடியோ கோப்புகளை ப்ளே செய்யாமல் இருப்பதே போதுமானது. சட்டவிரோதமாக அனுமதிக்கும் டெரண்ட் தளங்கள் அல்லது வலைத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோ அல்லது திரைப்படங்கள், அல்லது பென்டிரைவ் மூலம் பகிரும் கோப்பு ( அந்த கோப்பிற்கான ஆதாரத்தின் நம்பகத்தன்மை இல்லை எனும்போது) போன்றவையும் இதில் அடக்கம்.

விண்டோஸ் மீடியா ப்ளேயர்

விண்டோஸ் மீடியா ப்ளேயர்

விஎல்சி மீடியா ப்ளயர் பிரச்சினையை முழுவதுமாக சரிசெய்யும் வரை பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் நீங்கள் விரும்பினால் மீடியா ப்ளேயர் கிளாசிக் அல்லது விண்டோஸ் மீடியா ப்ளேயர் போன்ற ப்ளேயர்களை முயற்சி செய்யலாம். மேலும் ஆண்டி வைரஸை அப்டேட்டாக வைத்திருப்பதன் மூலம், இதுவரை வந்த எந்தவொரு வைரஸையும் எதிர்க்க தயாராக இருக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Stop Using VLC Media Player, Since It Has A Bug That Allows Hackers To Access Your Files : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X