10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் செல்போன் யூஸ் பண்ணுவீங்களா? இந்த பிரச்சனை இருக்குமே?
நமது அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத செல்போன்கள், இப்போது டாய்லெட் வரையில் நுழைந்துவிட்டன. உங்களுக்கும் டாய்லெட்டில் 10 நிமிடங்களுக்கு மேல் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், நீங்கள் என்னென்ன உடல்நலக்கோளாறுகளை காரணம் தெரியாமல் சந்தித்து வருகிறீர்கள் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய காலத்தில் செல்போன்கள் மக்களோடு பின்னிப் பிணைந்துவிட்டன. பெரும்பாலும், தூங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அவர்களிடம் செல்போன்களை பார்க்க முடிகிறது. இந்த செல்போன்கள் பல வகையில் உதவியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளில் எப்போதும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் செல்போன்களை எப்போதாவது மட்டுமே துடைத்து சுத்தம் செய்வோம். அதிலும், கிருமி நாசினிகள் போட்டு சுத்தம் பழக்கம் பலருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இப்படி செல்போன்கள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவ்வப்போது, உங்களுக்கு காரணம் தெரியாமலேயே பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
அதுவும் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துவோருக்கு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படும். சொல்லப்போனால், 10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால், மேற்கூறிய பாதிப்புகள் மட்டுமல்லாமல், பலருக்கு தூக்கமின்மை, திடீர் தலைவலி உள்ளிட்ட கோளாறுகள் கூட ஏற்படலாம்.
நோர்ட்விபிஎன் (NordVPN) ஆய்வின்படி, டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்திவர்களின் விவரங்கள் நமக்கு என்ன சொல்கின்றன என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக செல்போன் பயன்படுத்தும் 10 பேர்களில் 6 பேர் டாய்லெட்டுக்கு செல்போனுடன் செல்லும் பழக்கத்தை வைத்துள்ளனர். அதிலும் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இந்த பழக்கம் கவலைப்படும் வகையில் அதிகமாக இருக்கிறது.
இவர்களில் 61.6 சதவீதம் பேர் டாய்லெட்டுக்கு செல்போனை எடுத்து செல்லும்போது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதேபோல 33.9 சதவீதம் பேர் சமீபத்திய செய்திகளை படிப்பதற்கு பயன்படுத்துகின்றனர் என்பதும் மீதமுள்ள 24.5 பேர் நெருங்கியவர்களுக்கு எம்எம்எஸ், கால் செய்வதில் நேரத்தை செலவழிக்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதை நாம் ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் என்று நினைத்ததாலும், அது பல்வேறு உடல்நலக்கோளாறுக்கு மறைமுக காரணமாக இருப்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஏனென்றால், டாய்லெட் என்பது பாக்டீரியா மற்றும் கிருமிகளின் இனப்பெருக்க இடமாக இருக்கின்றது.
இவை எளிதாக ஸ்மார்ட்போன்களின் பேக் கவர்கள், மைக், டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கர்களில் பரவக்கூடும். இந்த செல்போன் நமது கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட கிருமிகள் எளிதில் தாக்கக்கூடிய இடங்களில் அதிகமாக வைக்கப்படுவதால், நமக்கு நேரடியாக தாக்கம் ஏற்படும். சொல்லப்போனால், செல்போனில் பரவும் கிருமிகள் 28 நாட்கள் வரையில் வீரியம் கொண்டிருக்கும் என்பதே உண்மையாகும்.
இதனால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள், ஃபுட் பாய்சன், தோல் நோய்கள், சிறுநீரக தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இரவு நேரங்களில் கிருமிகள் தாக்கம் காரணமாக தலைவலி ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம். ஆகவே, நவீன உலகின் கொசுக்களான செல்போன்களை டாய்லெட்டில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








