Just In
- 8 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 11 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 11 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 12 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
ஒரு கொடி நட ரூ.10000.. பணத்தை விதைத்து தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கும் பாஜக.. வைகோ ஆவேசம்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Movies
ப்ரெய்ன் ட்யூமரால் உயிரிழந்த தாய்.. கதறி அழுத பிரபல நடிகை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
உங்க WhatsApp-ல் இனி தெரியாமல் கூட இந்த தப்ப செஞ்சுடாதீங்க.! மீறினால் அக்கவுண்ட் Block.!
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களே உஷார்.! இனி, தெரிந்தும் - தெரியாமலும் கூட உங்கள் வாட்ஸ்அப் இல் இந்த தவறை செய்து விடாதீர்கள்.! மீறினால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பிளாக் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp தனது சேவையில் புதிதாக வியூ ஒன்ஸ் (WhatsApp View Once Message) என்ற அம்சத்தை சில காலமாக வழங்கி வருகிறது. இது பலருக்கும் தெரிந்த அம்சமாகும்.

வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ் - ஒன்லி ஒன்ஸ் பாலிசி.!
இந்த வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சத்தின் (WhatsApp view once message feature) படி, நீங்கள் பிறருக்கு அனுப்பும் புகைப்படம் (WhatsApp view once photos) அல்லது வீடியோவை (WhatsApp view once videos) ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும் பாதுகாப்பு அம்சமாக இந்த வியூ ஒன்ஸ் மெசேஜ் அம்சம் செயல்படுகிறது.
வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை மீண்டும் ஒரு முறை பார்க்க நினைத்தால் கூட, வாட்ஸ் அப் உங்களை அனுமதிக்காது. இதுவே இந்த அம்சத்தின் முக்கிய சிறப்பாகும்.

பாதுகாப்பு சிக்கலில் சிக்கிச் சின்னா பின்னம் ஆகும் WhatsApp.!
இது snapchat போன்ற மிகவும் பிரபலமான ஆப்ஸ்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக இருக்கிறது.
இருப்பினும், இதில் ஒரு சிறிய பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது; WhatsApp நிறுவனம் முன்பே சில பல நேரங்களில் பாதுகாப்பு சிக்கலில் சிக்கிச் சின்னா பின்னம் ஆகியதைத் தொடர்ந்து, இப்போது நிறுவனம் அதன் பயனர்களுக்கான பிரைவசி பாதுகாப்பு (WhatsApp Privacy) நடவடிக்கையை முடிந்தவரை வலுப்படுத்தி வருகிறது.

வாட்ஸ்அப் வியூ ஒன்ஸ் மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாமா?
இதற்கு முன் வரை whatsapp-ல் அனுப்பப்படும் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெறுநர்கள் ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது.
இருப்பினும், இந்த வியூ ஒன்ஸ் மெசேஜ்களை பெரும் நபர்களால் இதில் உள்ள தகவல்கள் ஸ்க்ரீன் ஷாட் (WhatsApp screenshot) எடுக்க வாட்ஸ்அப் அனுமதித்திருந்தது.
சில நேரங்களில் சில பயனர்கள் வியூ ஒன்ஸ் மெசேஜ் தகவலை ஸ்கிரீன் ரெக்கார்ட் (WhatsApp screen record) செய்தும் பதிவு செய்து கொண்டனர்.
இது பாதுகாப்பு சிக்கலை மோசமாக்கியது.!

இனி இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் வாட்ஸ்அப் இல் நடக்காது .!
இந்த சிக்கலைச் சரி செய்வதற்காக வாட்ஸப் நிறுவனம் இப்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது இதன்படி, இனி எந்த WhatsApp பயனர்களும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை - ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ அல்லது ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்யவோ முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதை ஒரு முக்கியமான விதியாகவே வாட்ஸ்அப் இப்போது அறிவித்துவிட்டது.

இந்த புதிய விதியை மீறினால் என்னவாகும்?
இந்த விதியை மீறி செய்யும் பட்சத்தில், அந்த வாட்ஸ்அப் பயனருக்கு நிறுவனம் நேரடியாக எச்சரிக்கை செய்தியை (Warning message notification) அனுப்பும். இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் (WhatsApp new update) இப்பொழுது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது.
இனி உங்கள் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு அனுப்பப்படும் வியு ஒன்ஸ் மெசேஜ்களை நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க கூடாது; மீறி எடுக்கும் பட்சத்தில் வாட்ஸ் அப் உங்களுக்கு கிரே நிற பாப் அப் எச்சரிக்கை மெசேஜை (WhatsApp pop-up message) அனுப்பும்.

பிரைவசி விதியை மீறி விட்டீர்களா? அப்போ உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பிளாக் செய்யப்படும்.!
இதில் நீங்கள் வாட்ஸ்அப்பில் வழங்கப்படும் பிரைவசி விதியை மீறி விட்டீர்கள் என்று எச்சரிக்கப்படுவீர்கள்.
இப்படி வாட்ஸ்அப்பின் பிரைவசி விதியை மீறுபவர்கள் மீது வாட்ஸ்அப் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முன்பே அறிவித்திருந்தது.
அதன் படி, இப்போது இந்த அம்சத்தை நீங்கள் தவறாக பயன்படுத்தினால் உங்கள் whatsapp கணக்கு முற்றிலுமாக முடக்கப்படும்.

இனி வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் எதுவுமே தெரியாதா?
அதாவது, நேரடியாக நிறுவனத்தின் மூலமாகவே உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பிளாக் (WhatsApp account blocked) செய்யப்படும். எனவே இனிமேல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்காமல் உஷாராக இருங்கள்.!
Whatsapp நிறுவனம் உங்கள் whatsapp கணக்கை பிளாக் செய்வது மட்டும் இன்றி, நீங்கள் எடுத்த ஸ்கிரீன்ஷாட்டையும் முடக்கம் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய அம்சம் நீங்கள் எடுக்கும் ஸ்கிரீன்ஷாட்டில் எதுவும் பதிவாகாதபடி பார்த்துக்கொள்கிறது.

ரிஸ்க் எடுத்தும் பயனில்லை மக்களே.! இனி ஸ்கிரீன் ஷாட் பதிவாகாது.!
ஆம், நீங்கள் விதியை மீறி ஸ்கிரீன்ஷாட் எடுத்தும் பயனில்லை. அந்த மெசேஜ் வெறும் பிளாங்கான மெசேஜாக மட்டுமே காண்பிக்கப்படும்.
ஸ்கிரீன்ஷாட் ஆக படம் பிடிக்க முயன்றாலோ அல்லது நீங்கள் அந்த வியூ ஒன்ஸ் மெசேஜ் தகவலை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ய நினைத்தாளோ, இனி வியூ ஒன்ஸ் மெசேஜில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு வெறும் கருப்பு நிறமாக மட்டுமே காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஷேர் செய்யவும் முடியாது.!
அதேபோல் இனி பயனர்கள் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷேர் (WhatsApp Share) செய்யவும் முடியாது.
மற்றவர்களுடன் பகிரவும் முடியாது. வாட்ஸ்அப் இனி பிரைவசி கண்ட்ரோலை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது.
உண்மையிலேயே வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கை, வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்துபவருக்கு நிம்மதி அளித்துள்ளது.

உடனே அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.!
இனி நீங்களும் தெரிந்தும் தெரியாமலும் கூட உங்கள் வாட்ஸ் அப்பில் வரும் வியூ ஒன்ஸ் மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முயலாதீர்கள்.
மீறினால் கண்டிப்பாக உங்கள் கணக்கும் பிளாக் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.!
இந்த புதிய அப்டேட் பற்றி விபரங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470