திருடப்பட்ட பைக்: மறைத்து வைத்திருந்த GPS மூலம் கண்டுபிடித்த பலே இளைஞர்.!

|

சென்னையில் உள்ள நந்தனம் பகுதியை சேர்ந்த ஆன்லைன் நிறுவன ஊழியல் சந்தோஷ். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுள்ளார்.

பல்சர் பைக்

பல்சர் பைக்

பின்பு கடந்த 18-ம் தேதி அதிகாலை 2மணி அளவில் தனது பல்சர் பைக் திருடப்பட்டதை தன் வாகனத்தில்
பொறுத்தியுள்ள ஜிபிஎஸ் மூலம் செல்போனில் அலராம் ஒலித்ததால் தெரிந்து கொண்டுள்ளார் சந்தோஷ்.

 ஜிபிஎஸ்

ஜிபிஎஸ்

அதன்பின்னர் தர்மபுரியில் இருந்தபடியே தனது செல்போன் மூலம் திருடப்பட்ட பல்சர் பைக் எங்கெல்லாம் எடுத்துச்செல்லப்படுகிறது என்பதை கண்காணித்துக் கொண்டிருந்தார் சந்தோஷ். வண்டி இறுதியாக மயிலாப்பூர் மற்றும் அபிராமபுரம் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு சென்றதும், சந்தோஷ் தனது செல்போனில் உள்ள ஜிபிஎஸ்தொடர்பு மூலமே ஒடிபியை பதிவிட்டு வாகனத்தின் இயக்கத்தை முடக்கினார்.

Hacker அட்டூழியம்: இணையத்தில் 5 லட்சம் username, password-களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல்!Hacker அட்டூழியம்: இணையத்தில் 5 லட்சம் username, password-களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல்!

அவசர உதவி எண்

அவசர உதவி எண்

அடுத்தநாள் ஊரில் இருந்து திரும்பிய சந்தோஷ், தனது செல்போனில் ஜிபிஎஸ் சுட்டிக்காட்டிய பகுதிக்கு பார்த்தபோதுஅங்கு தனது வண்டி நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து, காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-க்குஅழைத்தார். போலீசாரிடம் தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவரத்தை கூறி ஜிபிஎஸ் மூலம் அதுகண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் எடுத்து கூறியுள்ளார் சந்தோஷ்.

திருடர்கள்

திருடர்கள்

மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து பார்த்தபோது வண்டியின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை தூக்கிச்சென்றது திருடர்கள் என தெரியவந்தது.

 அடையாளம் கண்டு

அதன்பின்னர் சிசிடிவியில் இருப்பவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலைய பகுதிகளில் இருப்பவர்கள் என்பதால், அங்குசென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர். கோட்டூர்புரத்தில் வண்டியை திருடியவர்களின் அடையாளம் கண்டு
ஒருவன் நவீன் மற்றொருவன் நாகராஜ் என்று விளக்கிய உதவி ஆய்வாளர் கலைச் செல்வி, ஆனால் இவனுங்கதிருந்த மாட்டானுங்க தம்பி, வண்டி கிடைச்சிடுச்சில்ல வேலையை பாரு என ஆறுதலாக அட்வைஸ் கொடுத்து அனுப்பியதாக ஆதங்கப்படுகிறார் சந்தோஷ்.

ஒரு பட்டன் அழுத்தினா போதும் தமிழக காவல்துறை உங்கள் முன் நிற்கும்! காவலன் ஆப் உங்ககிட்ட இருக்கா?ஒரு பட்டன் அழுத்தினா போதும் தமிழக காவல்துறை உங்கள் முன் நிற்கும்! காவலன் ஆப் உங்ககிட்ட இருக்கா?

 மறைவான பக்கத்தில் பொறுத்தி விட்டால் போதும்

மறைவான பக்கத்தில் பொறுத்தி விட்டால் போதும்

குறிப்பாக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டால் அவற்றை கண்டுபிடிக்க ஜிபிஎஸ் ஒரு அருமையான சாதனமாக பயன்படுகிறது. மேலும் 2ஆயிரம் ரூபாய் முதல் 5ஆயிரம் ரூபாய் வரையிலான சிம்கார்டுடன் கூடிய இந்த ஜிபிஎஸ் கருவியை வாகனத்தில் மறைவான பக்கத்தில் பொறுத்தி விட்டால் போதும் எளிதாக வாகனம் எங்கே உள்ளது என்பதை கண்டறிந்து விடலாம்.

Indian Railways: அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.! CoD சேவை.! எப்போது முதல்?Indian Railways: அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.! CoD சேவை.! எப்போது முதல்?

அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்து விடும்

அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்து விடும்

வீட்டுக்குள் வாகன நிறுத்த வசதி இல்லாத இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஜி.பி.எஸ். பொருத்தி அதன் இணைப்பை 5 மொபைல் போன்களுக்கு பகிர்ந்து கொண்டால் வாகனம் திருடப்பட்டால் அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்து விடும் என்றும்இ இருந்த இடத்தில் இருந்தே வாகனம் எங்கே எடுத்து செல்லப்படுகின்றது என்பதை அறிந்து, அதன் இயக்கத்தையும் நிறுத்த இயலும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

Best Mobiles in India

English summary
Stolen Bike Found by GBS Technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X