பிராட்பேண்ட் யூசர்களே இனி ரூ.500 - ரூ.800 வேண்டாம்.. ரூ.450 போதும்.. 50Mbps-ல் 3300GB-ஐ இறக்கிய BSNL!
நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் பிராட்பேண்ட் இணைப்புக்காக (Broadban Connection) மாதந்தோறும் சுமார் ரூ.500 முதல் ரூ.800 வரை செலவிடுகிறார்கள். ஆனால் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம் ஆனது பெரும்பாலான இந்தியர்களுக்கு போதுமானதாக இருக்கிறது.
நீங்கள் ஒரு பிராட்பேண்ட் இணைப்பைப் பெற விரும்பினால், இந்திய அரசுக்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து இந்த திட்டத்தைத் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் முன்னரே குறிப்பிட்டப்படி ரூ.449 திட்டம் என்பது பயனர்கள் பொதுவாக செலவிடும் தொகையை விட குறைவானது.

எனவே தான் பிஎஸ்என்எல்-இன் ரூ.449 திட்டம் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இது பயனர்களுக்கு அதிக அளவிலான டேட்டா மற்றும் அதிவேக இணைய வசதியையும் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தைப் பற்றியும், அதில் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதையும் இப்போது விரிவாக பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம் 50 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகிறது. இதனுடன், பயனர்களுக்கு மாதந்தோறும் 3.3டிபி அல்லது 3300ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், இதில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் (Unlimited voice calling) நன்மையையும் உள்ளது
பிஎஸ்என்எல் நிறுவனம் இத்திட்டத்தை பைபர் பேசிக் நியோ (Fiber Basic Neo) திட்டம் என்று அழைக்கிறது. இது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்காமல் போகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதியில் இந்த திட்டம் கிடைத்தால் - நீங்கள் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்டின் கீழ் இருந்தால், இருக்க விரும்பினால் இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பிஎஸ்என்எல்-இன் ரூ.449 திட்டத்தை பிஎஸ்என்எல் செல்ப் கேர் (BSNL Self Care) ஆப் அல்லது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ரீசார்ஜ் செய்யலாம். ரூ.449 திட்டம் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு சிறந்த சிக்கனமான தேர்வாகும். பல டிவைஸ்களை இணைத்து பயன்படுத்தினாலும், இதன் 50 எம்பிபிஎஸ் வேகம் போதுமானதாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ஃபைபர் (Fiber) சேவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கிறது. புதிய இணைப்பை பெற அல்லது அதுகுறித்த விவரங்களை அறிய, உங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தையும் நீங்கள் அணுகலாம். நாட்டின் சில பகுதிகளில் பிஎஸ்என்எல் ஒரு சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது; இதன்படி, பிராட்பேண்ட் இணைப்புக்கான நிறுவல் கட்டணம் (installation charge) பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் இலவச ரவுட்டர் (router) அமைப்பும் அடங்கும். பயனர்கள் திட்டத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்; மற்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பிஎஸ்என்எல் புதுச்சேரி: சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு இரண்டு அட்டகாசமான குட் நியூஸ் கிடைத்து இருந்தது. முதல் குட் நியூஸ் என்னவென்றால் - பிஎஸ்என்எல் நிறுவனமானது புதுசேர்ச்சியில் 100 புதிய 4ஜி டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 100 டவர்களும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிர்து.
இந்த அறிவிப்பை பிஎஸ்என்எல் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (சிஎம்டி) ராபர்ட் ஜே ரவி வெளியிட்டார். இரண்டாவது குட் நியூஸ் - 100 4ஜி டவர்கள் குறித்த அப்டேட் உடன் சேர்த்து நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என்றும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது.
இலவச இண்டர்நேர்ட் டிவி (IPTV), தேசிய வைஃபை ரோமிங் மற்றும் ஃபைபர் இண்டர்நெட் ஆகியவற்றை உள்ளடக்கிய பிஎஸ்என்எல்-இன் புதிய சேவைகளும் அப்பகுதி பயனர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த புதிய சேவைகளின் விரிவாக்கம், கடந்த மூன்று மாதங்களில் புதுச்சேரி பகுதியில் 20,000 புதிய இணைப்புகளை பெற பிஎஸ்என்எல்நிறுவனத்திற்கு உதவியுள்ளது என்றும் ராபர்ட் ஜே ரவி கூறி உள்ளார்.
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களின் மொத்த எண்ணிக்கை 75,000 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, புதுச்சேரியில் பிஎஸ்என்எல்-இன் 130 டவர்ங்கள் உள்ளன. எதிர்காலத்தில் கூடுதலாக 100 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் இண்டர்நெட் இணைப்பு கணிசமாக மேம்படும். இது, எதிர்காலத்தில் அதிக 4ஜி பயனர்களையும், ஒருவேளை 5ஜி பயனர்களையும் சேர்ப்பதற்கு பிஎஸ்என்எல்-க்கு உதவும்.


Click it and Unblock the Notifications