இந்திய கம்பெனி-னா என்ன அவ்ளோ கேவலமா போச்சா? ஜூலை 7 பார்த்துக்கலாம்!

|

நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

சில மாதங்களுக்கு முன் நம்மில் பலரும் "நாமெல்லாம் இந்தியர்கள், நாம் இந்திய தயாரிப்புகளுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் தான் 'சப்போர்ட்' செய்ய வேண்டும். சீன நாட்டு தயாரிப்புகளை வாங்க கூடாது, குறிப்பாக சீன ஸ்மார்ட்போன்களை புறக்கணிக்க வேண்டும்!" என்றெல்லாம் கூவினோம்!

இந்தியா VS சீனா - பிச்சிகிட்டு பறந்த கூகுள் சேர்ச்!

இந்தியா VS சீனா - பிச்சிகிட்டு பறந்த கூகுள் சேர்ச்!

நினைவில் இருக்கிறதா? ஏன் இருக்காது? கண்டிப்பாக இருக்கும்!

எதெல்லாம் இந்திய நிறுவனங்கள்.. எதெல்லாம் சீன நிறுவனங்கள்.. என்கிற கூகுள் தேடல் "பிச்சிகிட்டு" பறந்த காலம் அது. ஆனால் உண்மை என்னவென்றால் "அந்த காலம்" அப்படியே நீடிக்கவில்லை.

கால் மேல கால் போட்டு உட்காந்து இருக்கும் சீனா!

கால் மேல கால் போட்டு உட்காந்து இருக்கும் சீனா!

ஏனெனில் நமக்கே தெரியும் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இணையாக போட்டி போட முடியவில்லை!

சரிக்கு சமமான அம்சங்களுடன் சரிக்கு சமமான விலையில் மொபைல்களை அறிமுகம் செய்ய முடியவில்லை.

அதனால் தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருக்கின்றனர்.

இதற்கிடையில் தான் ஒரு இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனம்" எங்களை பார்த்தால் அவ்ளோ கேவலமாவா இருக்கு!" என்றும் கேட்கும்படியான ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!

ஜூலை 7 பார்த்துக்கலாம்!

ஜூலை 7 பார்த்துக்கலாம்!

நாம் இங்கே பேசும் ஸ்மார்ட்போன் நிறுவனம் - லாவா (Lava); அது அறிமுகம் செய்யப்போகும் மாடல் - லாவா பிளேஸ் (Lava Blaze)!

இன்னமும் சிலர் லாவா நிறுவனத்தை ஒரு சீன ஸ்மார்ட்போன் கம்பெனி என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அது உண்மை இல்லை. லாவா "முழுக்க முழுக்க" ஒரு இந்திய மொபைல் போன் தயாரிப்பாளர் ஆகும்.

லாவா பிளேஸ் - ஏன் முக்கியம்?

லாவா பிளேஸ் - ஏன் முக்கியம்?

ஏனெனில், இது சீன ஸ்மார்ட்போன் அல்ல மற்றும் நிச்சயமாக இதுவொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருக்கும்; போதாக்குறைக்கு பாஸ்ட் சார்ஜிங், பெரிய பேட்டரி மற்றும் 'கிளாஸ் பேக்' (Glass Back) உடன் வருகிறது. இதற்கிடையில், இது யூனிசாக் சிப்செட் உடன் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது வருகிற ஜூலை 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற லீக்டு அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இது ரூ.10,000 என்கிற பட்ஜெட்டிற்குள் தான் வரும் என்பது கிட்டத்தட்ட உறுதி!

ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!

ரூ.10,000 பட்ஜெட்டிற்கு லாவா பிளேஸ் வொர்த் ஆக இருக்குமா?

ரூ.10,000 பட்ஜெட்டிற்கு லாவா பிளேஸ் வொர்த் ஆக இருக்குமா?

பிளாக், ரெட் மற்றும் க்ரீன் என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் Lava Blaze ஸ்மார்ட்போன் ஆனது, இந்தியாவில் ஆன்லைன் வழியாக மட்டுமின்றி, ஆஃப்லைன் வழியாகவும் வாங்க கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அம்சங்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் ஆனது கிளாஸ் பேக்-ஐ கொண்ட மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் ஆக இருக்கும். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2460 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 6.78 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவை பேக் செய்யும். முக்கியமாக இது ஒரு 4ஜி மொபைலாக வெளியாகும்.

சிப்செட், ஸ்டோரேஜ் - எப்படி இருக்கும்?

சிப்செட், ஸ்டோரேஜ் - எப்படி இருக்கும்?

லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் ஆனது மாலி-G57 GPU உடனான யுனிசாக் (Unisoc) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யுலாம். மெமரியை நீடிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் கிடைக்கலாம்.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

10கே பட்ஜெட் என்றால் கேமரா செட்டப் சுமாராக இருக்குமோ?

10கே பட்ஜெட் என்றால் கேமரா செட்டப் சுமாராக இருக்குமோ?

கண்டிப்பாக! கேமராக்களை பொறுத்தவரை, இந்த லாவா ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்டப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதில் என்னென்ன சென்சார்கள் இடம்பெறும் என்பது பற்றிய தகவல் இல்லை.

இருப்பினும் முன்பக்கத்தில், செல்பீ எடுப்பதற்கும் மற்றும் வீடியோ கால் செய்வதற்கும் உதவும் ஒரு 16எம்பி கேமரா இடம்பெறலாம்.

சார்ஜிங், பேட்டரி - எப்படி இருக்கும்?

சார்ஜிங், பேட்டரி - எப்படி இருக்கும்?

சும்மா "தரமாக" இருக்கும்! ஏனெனில் ரூ.10,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வரும் இந்த லாவா ஸ்மார்ட்போன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த 4ஜி ஸ்மார்ட்போனில் டூயல் சிம் சப்போர்ட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி5.1 போன்றவைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகமொத்தம் நம்பி வாங்கலாமா? இல்ல வேண்டாமா?

ஆகமொத்தம் நம்பி வாங்கலாமா? இல்ல வேண்டாமா?

நாம் மேற்கண்ட லீக்டு அம்சங்கள் 80% உண்மையாகும் பட்சத்தில், நிச்சயம் இது விலையை மீறிய அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இருந்தாலும் லாவா நிறுவனத்தால் பெரும்பாலான பெரும்பாலான அம்சங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாததால், எதையுமே மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அறிமுகம் இன்னும் சில நாட்களே உள்ளதால், அதிகாரப்பூர்வமான அம்சங்கள் நிறுவனத்தின் சோஷியல் மீடியா சேனல்கள் வழியாக டீஸ் செய்யப்படலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்.

Best Mobiles in India

English summary
Still Avoid Chinese Brands Buying Indian Smartphones Then Lava Blaze is for you launch date July 7

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X