கல் நெஞ்சையும் கரைய வைக்கும் வரிகள்! இறப்பதற்கு முன் Steve Jobs அனுப்பிய "கடைசி" இமெயில்!

|

ஸ்டீவன் பால் ஜாப்ஸ் (Steven Paul Jobs) என்கிற பெயரை கேள்விப்பட்டது உண்டா என்று கேட்டால்,.. உங்களில் சிலர் சற்றே குழப்பம் அடையலாம். அதுவே - ஸ்டீவ் ஜாபஸ் (Steve Jobs) யார் என்று கேட்டால்.. நம்மில் பலருக்கும் அதற்கான விடை தெரியும்; நன்றாகவே தெரியும்! ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸை யாருக்கு தான் தெரியாது?

இன்று வரையிலாக ஆப்பிளும் (Apple), ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளும் தனித்துவமாக இருப்பதற்கு அடித்தளம் போட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவர் இன்னும் சிறிது ஆண்டுகள் வாழ்ந்து இருந்தால், இந்த உலகம் மேலும் பல தொழில்நுட்ப புதுமைகளை கண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஸ்டீப் ஜாப்ஸ் மரணம் அடைந்தார்!

இறப்பதற்கு முன் Steve Jobs தனக்கு தானே அனுப்பி கொண்ட இமெயில்!

அவர் மறைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் அனுப்பிய "கடைசி" இமெயில் (Email) தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தான் இறந்து போவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஐபேடில் (iPad) இருந்து ஒரு இமெயிலை அனுப்பி உள்ளார். இன்னும் சரியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியன்று அந்த இமெயிலை அனுப்பி உள்ளார். அதை யாருக்கு அனுப்பினார் என்பது தான் மிகவும் 'ஷாக்கிங்' ஆன விஷயம் ஆகும்!

ஸ்டீவ் ஜாப்ஸ் அனுப்பிய கடைசி இமெயிலின் பெறுநர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான்! அதாவது ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு தானே ஒரு இமெயிலை அனுப்பி உள்ளார். அது இமெயில் தான், தான் அனுப்பும் கடைசி இமெயில்களில் ஒன்றாகும் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டதோ என்னவோ.. அவர் தனக்கு தானே ஒரு இமெயிலை எழுதி அனுப்பி உள்ளார். அதில் அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் படிப்போர் இதயத்தை சற்றே கனமாக்கும்படி உள்ளது, அதேசமயம் ஊக்கப்படுத்தும்படி உள்ளது; மற்றும் வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது என்றால் அது மிகையாகாது!

குறிப்பிட்ட இமெயில், அனுப்புநர் மற்றும் பெறுநர் என்கிற இரண்டிலுமே ஸ்டீவ் ஜாப்ஸின் இமெயில் ஐடி ஆன sjobs@apple.com உள்ளது. இந்த இமெயில், வியாழக்கிழமை, செப்டம்பர் 2 ஆம் தேதி, 2010 ஆம் ஆண்டு, இரவு 11.08 க்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த இமெயில் ஆனது "நான் உண்ணும் உணவில் சிறிதளவு வளர்கிறேன்" என்கிற வரியுடன் தொடங்குகிறது. பின்னர் "நான் விதைகளை இனப்பெருக்கம் செய்யவில்லை, அதை முழுமையாக்கவும் இல்லை. நான் சொந்தமாக எந்த ஆடையையும் தயாரிப்பதில்லை. நான் கண்டுபிடிக்காத அல்லது செம்மைப்படுத்தாத மொழியை பேசுகிறேன்"..

.."நான் பயன்படுத்தும் கணிதத்தை நான் கண்டுபிடிக்கவில்லை. நான் கருத்தரிக்காத அல்லது இயற்றாத சுதந்திரங்கள் மற்றும் சட்டங்களால் நான் பாதுகாக்கப்படுகிறேன், மேலும் அதை நடைமுறைப்படுத்தவோ அல்லது தீர்ப்பளிக்கவோ இல்லை. நானே உருவாக்காத இசையால் நான் நெகிழ்ந்தேன். எனக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும்போது, ​​எனக்கு நானே உயிர்வாழ உதவ முடியாமல் தவித்தேன். டிரான்சிஸ்டர், மைக்ரோப்ராசஸர், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் ப்ரோகிராமிங் அல்லது நான் பணிபுரியும் பெரும்பாலான தொழில்நுட்பங்களை நான் கண்டுபிடிக்கவில்லை".. என்றெல்லாம் எழுதியுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் கடைசியாக எழுதிய வரிகள் என்ன தெரியுமா?

"நான் வாழும் மற்றும் இறந்துபோன எனது இனத்தை நேசிக்கிறேன், போற்றுகிறேன், மேலும் எனது வாழ்க்கை மற்றும் நல்வாழ்வுக்காக அவற்றை முழுமையாக சார்ந்து இருக்கிறேன்" என்று எழுதி முடித்த ஸ்டீவ் ஜாப்ஸ், இது எனது ஐபேடில் இருந்து அனுப்பப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஸ்டவ் ஜாப்ஸின் இந்த கடைசி இமெயில் ஆனது கல் நெஞ்சங்களை கூட கரைக்கும் என்பதிலும், "தான்" என்கிற எண்ணம் கொண்ட எவரையும் உருக்குலைய வைக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்!

ஸ்டீப் ஜாப்ஸின் இந்த கடைசி இமெயில் ஆனது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆர்ச்சிவ் (Steve Jobs Archive) என்கிற இணையதளம் வழியாக பகிரப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆர்ச்சிவ் என்பது ஸ்டீவ் ஜாப்ஸிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு பிரத்யேக வலைத்தளம் ஆகும். ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக், முன்னாள் ஆப்பிள் டிசைன் சீஃப் ஆன ஜோனி ஐவ், ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி ஆன லாரன் பவல் ஜாப் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் ஆர்ச்சிவ் என்கிற வலைதளமானது கடந்த செப்டம்பரில் தான் அறிமுகமானது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Steve Jobs Sent Himself An Email in 2010 Just Before His Last Day And Its Totally Worth To Read

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X